இன்று:
 
மாவீரர்களை உருவாக்கிய மாமனிதர் குடும்பம்

Thursday, December 24, 2009

யாழ்ப்பாணத்தில் புதிய வடிவில் பணப்பறிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.


சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின் விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.


இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர்.


இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.


இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Read more...

விடுதலைப் புலிகளின் தலைவர்களை இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்க முயற்சித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.


இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் புலித் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.




தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


புலம்பெயர் தமிழர்கள், தென் ஆபிரிக்கா மற்றும் சில தென் கிழக்காசிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த முனைப்புக்களை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.


எனினும், இலங்கை அரசாங்கம் மிக நுட்பமான ராஜதந்திர அணுகுமுறை ஒன்றைப் பின்பற்றி இந்த முயற்சிகளை முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக இந்தியாவின் ஆலோசனையின்றி இவ்வாறு புலித் தலைவர்களை மீட்பதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு இரகசியமாக அறிவித்துள்ளதாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புலித்தலைவர்களை மீட்கும் நோக்கில் ஹாவாயிலிருந்து விமானமெர்று கொழும்பிற்கு வந்ததாகவும், சில கப்பல்களை அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.


பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்கி அழிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவரை பாதுகாப்பதற்கு புலிகளின் கப்பல் ஒன்றை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.


எனினும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

Read more...

பசில் ராஜபக்க்ஷவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சிவாஜிலிங்கம் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பசில் ராஜபக்க்ஷவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக லண்டனிலுள்ள தமிழ் புலம்பெயர்தோரின் முக்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.


சிவாஜிலிங்கம் தனது தனிப்பட்ட சட்ட சிக்கலொன்றைத் தீர்த்துக்கொள்வதற்காக பசில் ராஜபக்க்ஷவின் யோசனையின் அடிப்படையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் லண்டனிலுள்ள புலம்பெயர்ந்த தமிழ்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்காது எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு சென்றிருந்த சிவாஜிலிங்கத்தை இலங்கைக்கு திருப்பியழைக்கும் நடவடிக்கைகளில் இந்தியத் தூதரக அதிகாரிகளே தலையிட்டுள்ளனர்.

Read more...

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா


படம்: தகவல்கள் புளொக்கிலிருந்து

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! பழ நெடுமாறன் உறுதி

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!

‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’

‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’

‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’

‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’

‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’

‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத்திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’

‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’

‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.

உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.

தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.

இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!

ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.

‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.

ஜூனியர் விகடன்

Read more...

முப்பது வருட இழப்பிற்கு பின்னரும் ஒருமித்த நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடியாத நிற்கதியாய் தமிழினம்?

இலங்கை வரலாற்றில் முதன்றையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருபத்திரண்டு பேர் போட்டியிட களம் இறங்கியுள்ளனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஓன்பது பேர் அதிகமாக போட்டியிடுகின்றனர்.

தமிழ் மக்களின் நிலையைக் கருத்திற் கொள்வோமாயின் பாரதப் போரில் கர்ணனைக் கொன்ற போது பாரத மக்கள் எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டனரோ அவ்வாறான நிலையிலேயே உள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிறை அறிகப்படுத்தி முப்பது வருடங்கள் முடிவுறும் வேளையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக தன்மைகளை நாட்டின் பொது மக்கள் எந்தளவு தூரம் புந்துள்ளனர் என்பது பற்றி விவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திகா பண்டாரநாயக்கா மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை வெற்றிபெறச் செய்ததன் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிறையை மாற்ற வேண்டும் எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதை எடுகோளாகக் கொள்ளலாம்.

இப்பெரும்பான்மையான மக்களில் சிறு பான்மையினராகவுள்ள தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்குவர். ஆயினும் முமுப்பது வருட வரலாற்றில் சிங்கள மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ ஒட்டுமொத்தமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு வாக்களிக்கவில்லை.

இதேவேளை நாட்டின் சிறுபான்மையான மக்களின் சில தலைமைகள் ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ள அரசிலமைப்பினை இல்லாதொழிக்கக் கூடாது எனும் கருத்தினை முன் வைத்தனர். சிறுபான்மையினக் கட்சிகளின் தலைமைகள் இதுநாள் வரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டதுடன். அதற்கமைய சிறுபான்மையின மக்களும் இதுநாள்வரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிக்கலாயினர்.

கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டுமே வடக்கு வாழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய வாக்களிப்பதனைத் தவிர்த்தனர். ஆகையால் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பினை இல்லாதொழிப்பது பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை.

இப்பின்புலத்தில் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நோக்குகையில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான போட்டியின் முடிவே நாட்டின் எதிர்கால அரசியல் செல்நெறியை நிர்ணயிக்கும் சக்தியாக அமையவுள்ளது. இவ்விரு வேட்பாளர்கள் கோரும் ஆணைக்கு சிங்கள மக்கள் எந்தளவு ஆதரவு வழங்கத் தயாராகின்றனர் என்பதிலேயே இது தங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் வெற்றி பெற்ற தமக்கு நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவு தருமாறு கோருகிறார். மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகளை களத்தில் போராடி அழித்த ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டை குடும்ப அரசியலிலிருந்து காப்பாற்றி தனிமனித அதிகாரத்தைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஆட்சிறையை ஒழித்து, நாட்டை ஜனநாயக வழிக்கு கொண்டுவர ஆதரவு தருமாறு கோருகின்றார்.

இவ்விரு வேட்பாளர்களது கோக்கைகளும் பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்கினை பிரதான இலக்காக கொண்டவையாகும். கடந்த முப்பது வருட தேர்தல் வரலாற்றை நோக்கினால் வடக்கு கிழக்கின் யுத்தத்தினை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைத் திரட்டினர்.

ஆனால், இம்றை வடக்கு கிழக்கு யுத்தத்தின் வெற்றியை முன்னிறுத்தி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இரு தேர்தலைத் தவிர (இருமுறை சந்திகாவை ஆட்சியிலமர்த்தியதைத் தவிர) தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இனவாத நிலைப்பாட்டிற்கு சார்பான வகையிலேயே சிங்கள மக்கள் வாக்களித்தனர். இந்நிலையில், சிங்கள மக்கள் ஜனநாயகத்தை நாட்டில் மீளமைக்க கோரும் விடயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்களா அல்லது வெறுமனே விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதில் யார் தனித்துவமானவர் என்பதை தெரிவு செய்வதில் அக்கறை செலுத்துவார்களா என்பதை தேர்தல் முடிவுகளின் பின்னரே அறியலாம். முன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான கருத்திற்கு முக்கியத்துவமளித்து ஆட்சியாளர்களை தெரிவு செய்த சிங்கள மக்கள் இந்த மனோநிலையிலிருந்து விடுபட வேண்டியுள்ளமை தேவையாகவுள்ளது.

போட்டியிடும் இரு வேட்பாளர்களினதும் அவர்கள் சார்பான பேச்சாளர்களின் கருத்துக்களையும் மற்றும் அவர்கள் சார்ந்த எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் நோக்குகையில் இரு பிரதான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, ஆளுங்கட்சியினரும் அவர்கள் சார்ந்த பிரிவினரும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிபீடமேறினால் நாட்டில் இராணுவ ஆட்சி வந்துவிடும், ஜனநாயக ஆட்சி அழிக்கப்படும் எனும் கருத்தினை பிரதானமாக முன்வைக்கின்றனர். ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் கருத்தினை முன்வைப்பவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இன்றைய ஆட்சியை தொடரவிட்டால் தனியொரு குடும்ப சர்வாதிகாரம் தொடர்வதுடன் நாடு அழிவினை நோக்கி பயணிக்கும் எனும் கருத்தினை முன்வைக்கின்றனர்.

இவ்விரு கருத்தாக்கங்களில் எதற்கு சிங்கள மக்கள் செவிசாய்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிபீடமேறினால் இராணுவ ஆட்சியை உருவாக்க முடியுமா? அவ்வாறான உள்ளக அல்லது வெளியக சூழல் காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்தால் ஹிட்லர், முசோலினிக்குப் பின்னைய வரலாற்றினை நோக்கின், ஜனநாயக ஆட்சிறையை பூரணமாக அனுபவிக்காத நாடுகளிலேயே இராணுவத் தளபதிகளினால் இராணுவ ஆட்சியை இராணுவ கிளர்ச்சி மூலம் உருவாக்க முடிந்துள்ளது. அதிலும் ஓரளவேனும் ஜனநாயக ஆட்சிறையை மக்கள் அனுபவித்திருந்தால் இராணுவ ஆட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலையேற்பட்டு மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து ஜனநாயக ஆட்சியை நிறுவியுள்ளமை வரலாறாகவுள்ளது. இதற்கு எமக்கு அண்மைய பங்களாதேஷசும், பாகிஸ்தானும் சிறந்த உதாணமாகும்.

இது இவ்வாறிருக்க, மக்களால் தெவு செய்யப்பட்ட ஜனநாயக தலைவனாக இருந்துக் கொண்டே மறைமுக இராணுவ ஆட்சியை நடத்தும் நாடுகளும் உள்ளன. அது தேவைக்கேற்ப ஆட்சியாளர்களினால் இறுக்கமாகவும், தளர்ச்சியுடனும் சில நாடுகளில் பேணப்பட்டு வருகின்றது. இவ்வாறான தளர்ச்சியுடனான அரை இராணுவ ஆட்சியை ஜனாதிபதி ஜே.ஆரின் காலத்தில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் முழுமையான இராணுவ ஆட்சியை இலங்கையில் உருவாக்க முடியாது போயிற்று.

அதற்கான வாய்ப்பு யுத்த காலத்தில் இருந்த போதிலும், ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்ட பெரிய‌ நாடான இந்தியா அண்மித்திருப்பதனாலும் இலங்கை மக்கள் ஜனநாயகத்தை அனுபவித்தவர்களாக இருப்பதாலும் அதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. ஆயினும் நிழல் இராணுவ ஆட்சியை பலப்படுத்திக் கொள்ளலாம். யுத்தம் முடிவடைந்த பின்னர், இன்றைய ஜனாதிபதி வடக்கு கிழக்கு ஆளுநர்களாக படை அதிகாகளை நியமித்துள்ளதுடன் தமக்கு வேண்டியவர்களை, உறவினர்களை முப்படை உயர் அதிகாகளாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் நியமித்துள்ளார். ஒரு சாதாரண பொதுமகனாக இருந்து ஜனநாயக தேர்தல் மூலம் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை செய்துள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையை ஜெனரல் சரத் பொன்சேகாவினாலும் உருவாக்க முடியும்.இன்றைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் நாடாளுமன்ற அங்கத்தவராக இல்லாததன் காரணமாக தமது உறவினர்களுக்கு உயர் அமைச்சர் அல்லது உயர் அரச அதிகார பொறுப்புகளை வழங்க முடியாது போகலாம். ஆனால் தமக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்).

இந்நிலையை சிங்கள மக்கள் எந்தளவு சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்பதும், நிறைவேற்று ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரம் எந்தளவுக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதனை சிங்கள மக்கள் புரிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குயாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்ய 24 மணித்தியாலம் இருக்கையில் எதிர்க்கட்சியிலிருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளார். அதாவது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் இருக்கையில் முதல் நாள் காலையில் எதிரணியிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாலையில் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நிறைவேற்று அதிகாரத்தின் தன்மையை மிக இலகுவில் அறிய வாய்ப்பு ஏற்படுத்தினாலும் இதனை நாட்டின் பெரும்பான்மை மக்கள் புந்துக் கொள்வார்களா என்பதை கூற முடியாதுள்ளது.

இவற்றுடன் தமிழ் மக்களின் நிலையைக் கருத்திற் கொள்வோமாயின் பாரதப் போரில் கர்ணனைக் கொன்ற போது பாரத மக்கள் எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டனரோ அவ்வாறான நிலையிலேயே உள்ளனர். இந்த எடுகோளுடன் சிறுபான்மையின மக்களது தேர்தல் வரலாற்றை நோக்கினால் சிறுபான்மை மக்களது வாக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக அமைந்ததாக இல்லை. மாறாக, பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்கு வங்கியே தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அமைந்திருந்தது.
தமிழ் பேசும் மக்களது வாக்கு பெரும்பான்மை சிங்கள மக்களது தீர்ப்புக்கு வலுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

முப்பது வருடம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் சிக்குண்டு, துன்பங்களை அனுபவித்த போதிலும் தேர்தல் வரும் வேளை தமிழ் பேசும் மக்களும் இரு பிரிவாக பிரிந்தே வாக்களித்துள்ளனர். தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தாக வரலாறு இல்லை.

இன்றைய தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் தாம் ஏற்றுகொண்ட தலைமைகளின் வேண்டுகோளுக்கிணங்க பிரிந்துள்ளனர்.ஜனநாயக விரோத சிறுபான்மை மக்களும் தீங்கிழைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிக்க ஓரணி திரளவில்லை. பிரதான வேட்பாளர்கள் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை அறிவிக்க முன்னரே தாம் யாரை ஆதக்கின்றனர் என்பதை வடக்கு கிழக்கு, மலையக, கொழும்பு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒரு சில தலைமைகள் தெவித்துவிட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமே தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லையாயினும் அக்கூட்டமைப்பினைச் சார்ந்த கட்சியொன்றின் பிரதிநிதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இதனால் அக்கூட்டமைப்புக் குள்ளும் பிளவு ஏற்படவுள்ளது. முப்பது வருட மனித மற்றும் வள இழப்பிற்கு பின்னரும் ஒருமித்த நிலைப்பாட்டை சிறுபான்மையினக் கட்சிகளினால் கடைப்பிடிக்க முடியாதுள்ளது.
எனவே, சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களினால் இத்தேர்தலின் போது எவ்வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது. முப்பது வருடமாக பாதிப்படைந்துவரும் தமிழ் பேசும் மக்களது தலைமைகள் எதனை பாடமாகக் கற்றுள்ளன எனில், சிங்களத் தலைமைகளுக்கு ஈடான சந்தர்ப்பவாத அரசியலையே பாடமாக கற்றுள்ளன. ஆகையால் நடைபெறும் தேர்தலிலும் வழமை போல் சிங்கள வாக்காளர்களே தமிழ் பேசும் மக்களினது தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்வர்

சுபத்ரா


Read more...

Wednesday, December 23, 2009

தருவேன் என்றால் தருவேன், தரமாட்டேன் என்றால் தரமாட்டேன், ஈழம் தரமாட்டேன்


Read more...

தமிழ்க் கைதிகளின் விடுதலை முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்.

ஒரே தடவையில் தீர்க்கும் நடவடிக்கை
வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.


இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, December 22, 2009

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பக அறிக்கை

முன்னாள் சிறீலங்கா இராணுவத்தளபதி ஐனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு நடேசன் திரு புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசானது: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினைமட்டுமல்லாது சனவரி 2009 முதல் மே 2009 வரையிலான இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க வேண்டுமெனவும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ நா பாதுகாப்புச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும், சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், அறைகூவல் விடுகின்றது.

கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டவேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஐபக்ச உத்தரவிட்டதாக சிறிலங்காவிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஐனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவித்தல் பெற்ற இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான சனாதிபதியின் சகோதரர் நேரடியாக இராணுவ தளபதிகளுக்குப் பணித்தமையை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினது அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன.

மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் சிறிலங்கா இதுவரை நடந்துகொண்ட முறையும் (1977, 1983 இனப் படுகொலை, 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நுரலக எரிப்பு, 1996ம் ஆண்டு செம்மணி படு கொலைகள், 1996 கிருசாந்தி படுகொலை, 2006ம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள்), அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் சிறிலங்காவில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்சனையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருவதும் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது.

உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும்.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமால் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும். சர்வதேச சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதிசார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும் பண்ணும். மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

Read more...

நீண்டகால அவலம் நீங்கியது

யாழ்குடாநாட்டு மக்களின் மிக நீண்டகாலப் பிரச்சினை யொன்றுக்கு தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. கொழு ம்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கோ அல்லது யாழ்குடாநாட்டிலிருந்து கொழும்புக்குப் புறப்படுவதற்கோ மக்கள் இனிமேல் அவதியுற வேண்டிய அவசியம் இல்லை. கொழும்புக் கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மக்கள் இப்போது தரைமார்க் கமாக தாராளமாகப் பயணம் மேற்கொள்வதற்கு வழியேற்பட்டுள்ளது.


யாழ்குடாநாட்டு மக்கள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பெருந்துன்பம் இப்போது நீங்கியிருப்பது அவர்களுக்கு மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக் கும் இடையிலான பயணத்துக்கென விமானக் கட்டணமாக பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது. அது மாத்திரமன்றி யாழ்குடாநாட்டிலிருந்து மக்கள் கொழும்புக்குப் புறப்படுவதாயின் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெற வேண்டிய கெடுபிடியும் இப்போது இல்லை.

ஏ-9 வீதி ஊடாக தனியார் வாகனங்கள் பாதுகாப்பு அனுமதி எது வுமின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள் ளது. தரைமார்க்க பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கள் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன.

ஏ-9 வீதியில் வழமையான பஸ் போக்குவரத்து எப்போது ஆரம்ப மாகுமென ஏங்கியிருந்த மக்கள் இன்று நிம்மதியடைந்துள்ளனர். கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் தங்களது வீடுவாசல்களையும் உறவினர்களையும் பார்ப் பதற்காக யாழ்ப்பாணத்துக்குப் புறப்படுவதற்குத் தயாராகி வருவதைக் காண முடிகிறது. அதேசமயம் யாழ்குடாநாட்டிலிருந்து தென்பகு திக்குப் புறப்படுவதற்காக பெருமளவு மக்கள் ஆயத்தமாகு வதையும் அறிய முடிகிறது.

இவ்வாறானதொரு இலகுப்பயணம் இத்தனை விரைவில் ஆரம்பமாகு மென வடபகுதியைச் சேர்ந்த மக்கள் கனவில் கூட நினைத் திருக்க மாட்டார்கள். தாங்கள் எதிர்கொண்டுள்ள பயண அவலம் எக்காலமும் தொடருமென்றே அம்மக்கள் நினைத்திருக்கக் கூடும்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நீங்கியுள்ள துன் பங்களில் இதுவே பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். மக்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியிலிருந்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதேசமயம் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையே பயணம் செய்வதில் கடந்த காலத்தில் மக்கள் எதிர்கொண்ட பெரும் துன்பங்களை இவ்விடத்தில் மீட்டுப் பார்ப்பது மிகவும் பொரு த்தமாகும்.

கிளாலி கடலேரி வழியாக இரவு நேரத்தில் பெரும் அச்சத்தின் மத்தியில் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் சிறிய படகுகளில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாகப் பயணம் செய்ததை இலகுவில் மறந்துவிட முடியாது. இப்பயணங்களின் போது தங்களது உயிரை அநியாயமாக இழந்தோர் அநேகம். இவ்வாறான துன்பப் பயணமானது அக்காலப் பகுதியில் வருடக் கணக்கில் தொடர்ந்தது நினைவிருக்கலாம்.

இன்னும் சில காலப் பகுதியில் கேரதீவு - சங்குப்பிட்டி கடல் பயணம். இதுவும் ஒருவகையில் துன்பம் நிறைந்தது. இது போன்ற பயணங்களுக்கு அஞ்சி யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே விமானத்தில் நிம்மதியாகப் பயணம் செய்வதற்கும் புலிகள் இடமளிக்கவில்லை. இப்பயணத்தின் போது விமான மொன்றைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர். அவ்விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேருமே நடுக்கடலுக்குள் பரிதாபமாக காணா மல் போனார்கள்.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும் தென்பகுதிக்கும் இடையே மக் கள் கப்பல் மூலம் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டது. இப் பயணம் பெரும் உடல், உள உளைச்சல் நிறைந்ததாகக் காணப் பட்டது. கொழும்பிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெற்றுப் புறப்படு வோர் திருமலையில் நீண்ட நாட்கள் காத்திருந்து கப்பலில் புறப்பட வேண்டியிருந்தது.

கப்பல் பயணத்தின் போது ஒரு சிலர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கப்பலுக்குள்ளேயே பிரசவங்களும் நடந்துள்ளன. யாழ்குடாநாட்டிலிருந்து அவசர நோயா ளர்களை மேலதிக சிகிச்சைக்காக கப்பலிலேயே கொழும்புக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இவையெல்லாம் யாழ்குடாப் பயணத்தின் மறக்க முடியாத அவலங்களாகும்.

புலிகள் அக்காலப் பகுதியில் முன்னெடுத்த யுத்தம் காரணமாகவே இத்தகைய அவலங்களை பயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடபகுதியை வழமை நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் துரித திட்டங்களில் ஒன்றாகவே குடாநாட்டுப் பயணமானது தற்போது இலகுவாகியுள்ளது.

ஏ-9 தரைவழிப் பயணம் வழமை நிலைமைக்கு வந்திருப்பதன் விளைவாக யாழ்குடாநாட்டில் பல்வேறு துறைகளும் இனிமேல் துரிதமாக அபிவிருத்தியடையுமென நாம் எதிர்பார்க்கலாம்.

Read more...

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். --பொன்னிமாமி

பொன்னி மாமியின் உதவியுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்த உண்மை.



பகுத்தறிவுள்ள மக்கள் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற உண்மையைஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் புலிப்பினாமிகளும் பிரபாகரனின் ஆதரவாளர்களும் பிரபாகரன் கொல்லப்படவில்லை! அவர் உயிருடன் இருக்கின்றார் என்றே கூறிவருகின்றனர். பிரபாகரன் கார்த்திகை 27ம் திகதியன்று காட்சியளித்து மாவீரர் உரை நிகழ்த்துவார் என்று பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் இப்போது பிரபாகரன் ஏன் மாவீரர் உரை நிகழ்த்த வரவில்லையென்றால், அவருக்கு தொண்டை கட்டிவிட்டதென்று சிலரும் அவருக்கு பன்றிக் காய்ச்சல் என்று ஒரு சாராரும் இன்னொரு சாரார் அவருக்கு நாக்கில் புண் என்றும் கூறிவருகின்றனர். இறந்து போன ஒருவரை இறக்கவில்லையென்று கூறி வருவது பொன்னி மாமிக்கு மிகவும் எரிச்சலையுட்டி வருகின்றது. அதனால் பொன்னி மாமி ஈழநாசத்துடன் தொடர்பு கொண்டு மருமோன் பிரபாகரன் படையினரால் கொல்லப்பட்டது உண்மையென்று நிரூபிக்க சில ஆதாரங்களை தனது போட்டோ ஷொப்பில் தயாரித்து அனுப்பியுள்ளார்.




பொன்னி மாமியின் விளக்கம்


தம்பி நீ ஒராள்தான் மருமோன் பிரபாகரனுக்கு புத்தி சொல்லி எழுதினனீ. வன்னிக்குள்ளை ஆமி வரப்போகுது சாகப்போறாய் தப்பி ஓடு எண்டு எத்தினை தடவை எழுதினனீ. உனக்குக் கரிநாக்குத்தம்பி. நானும் எத்தினை தடவை மருமோனுக்குச் சொன்னனான். ஆமிக்காரன் வாற வரத்தைப் பாக்க உனக்கு ஆபத்து சனத்தை விட்டிட்டு உன்ரை ஆக்களையும் கூட்டிக் கொண்டு எங்கையாவது தப்பி ஓடியிடு எண்டு;. என்ரை சொல்லைக் கேட்டானே. என்ரை சொல்லைக் கேட்டிருந்தா உவ்வளவு சனமும் செத்திருக்காது. உவனும் தப்பியிருப்பான். இப்ப உவங்கள் என்னடாவெண்டால் மருமோன் சாகேல்லை எண்டு சொல்லுறாங்கள்.


தம்பி உனக்குச சொன்னாலென்ன பிரபாகரனை சின்ன வயதிலையிருந்தே நான் தூக்கி வளத்த ஆள். அவன்ரை அங்க அடையாளங்களை எனக்கு நல்ல வடிவாத் தெரியும். சிலதை வெளியிலை சொல்ல முடியாவிட்டாலும் சொல்லக் கூடியதுகளை சொல்லுறன் தம்பி. மருமோன் செத்துப்போய்க் கிடக்கிற படத்தையும் உயிரோடை இருக்கிற படத்தையும் உத்துப் பார் தம்பி.



அவன்ரை வலது கன்னத்திலை ஒரு கறுப்பு மறை இருக்கு






மூக்கைப் பார் தம்பி கிளி மூக்கைப் போலை நீண்டு வளைஞ்சு கிடக்கு.






காதுச் சோணையள் ரண்டையும் பார் தம்பி. இரண்டு பக்கமும் வளைஞ்சு கிடக்கு.






தாடையை உத்துப் பார் தம்பி. இரட்டைத்தாடை பிரிஞ்சு போய்க் கிடக்கு.




முழங்கையைப் பார் தம்பி கறுப்பு அடையாளம் கிடக்கு.




செத்துப் போய்க் கிடக்குற கண்ணையும் உயிரோடை இருக்கிற கண்ணையும் பார் தம்பி மாத்திப் பொருத்திக் கிடக்கு.



ஆராலையும் மறுக்க ஏலுமே இது மருமோன் பிரபாகரன் இல்லையெண்டு.
உந்த விசுக்கோத்துகள் பிரபாகரன் சாகவில்லையெண்டு சொல்லுதுகள். அவன் செத்துப் போனவன் எண்டு வடிவாத் தெரிஞ்சும் சாகவில்லையெண்டு சொல்லுறதுகள் எப்பிடிப்பட்டதுகள்
தம்பி. உதுகளுக்கு அறிவிருந்தால் உவ்வளவு அழிவு வருமட்டும் உவனைத் தலையிலை தூக்கி வச்சு ஆட்டுங்களே. என்ரை மருமோன்தான். அதுக்காக ஒருத்தற்ரை சொல்லையும் கேட்காமல் உவ்வளவு அழிவுக்கும் காரணமானவனை என்ரை மருமோன் எண்டு சொல்ல எவ்வளவு
வெட்கமாக் கிடக்கு. உந்த விசுக்கோத்துகள் நம்பினாலும் நம்பாட்டிலும் என்னைப் பொறுத்தவரையிலை மருமோன் பிரபாகரன் செத்தவன் செத்தவன் தான்ரா!


நன்றி:- பொன்னி மாமி


ஈழநாசம்

Read more...

Monday, December 21, 2009

ஒபாமாவை ஒத்த நபர் (படங்கள்)








Read more...

மந்திரி ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் உடலம் (கொடூரமான படங்கள்)






அவரைக்கொலை செய்த பயங்கரவாதியின் தலை

Read more...

புலம்பெயர் வாழ் புலிப்பினாமிகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அன்பு மாமா சனீஸ்வரன் எழுதும் மடல்.

அன்புள்ள அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உங்கள் புண்ணியத்தால் இவ்விடம் ஜந்தறிவாய் இருந்த என்னை ஆறாய் மாத்திய உங்களுக்கு எனது நன்றிகள். இந்த நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்டிப்படைந்த நாலு கால்களை இல்லாது ஒழித்த உங்கள் ஆட்சியின் கீழ் இருப்தையிட்டு மட்டற்ற மகிழ்சி அடைகின்றேன். அதுபோல் மீண்டும் உங்கள் நல் ஆட்சி தொடர எனது வாழ்த்துகள். பாசிச பயங்கரவாத புலிகளை அழித்து இன்று வெற்றிக்களிப்பில் இருக்கும்
உங்களை நான் சனிபற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். துணிச்சல் மிக்க உங்கள் செயற்பாடுகளால் இலங்கையில் சிறுபான்மை என்ற இனத்தையே இன்று தலை நிமிர்ந்து நிற்க செய்துவிட்டீர்கள். புலிகளின் அடக்கு முறைக்குள் ஊமையாய் இருந்த மக்களை நிங்கள் தமிழ் பேச முயற்சிப்பதன் மூலம் இப்போது எமது மக்களை விழிப்படைய வைத்துள்ளிர்கள். இதிலும் நீங்கள் வென்றுவிட்டீர்கள். உலகின் நான்காவது பெரிய படையாலேயே வெல்ல முடியாத பிரபாகரனை தடம் போட்டு பிடித்து வென்றுவிட்டீர்களே! இதுதான் மகிந்த சிந்தனை. இப்ப மகிந்த சிந்தனை மூலம் இந்த சனீஸவரன் சிந்தனையை மாற்றி விட்டார்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.பிரபாகரன் மண்டைக்கை மயிராண்டி சிந்தனை.


30.ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்டிப் படைத்த சனியங்களை இல்லாது ஒழித்து போட்டீர்கள். உங்களுக்கெண்டு உலக வரலாறு படைத்து விட்டிர்கள். இந்த நாட்டில் புலி தம்பிமார் கொள்ளையடிக்க நீங்கள் பாத்துக்கொண்டிருப்பிங்கள் என்று நினைத்து தினம் புலி தம்பிமாரை வாழ வைச்சுதமிழ் இனத்தை கருவறுத்தது ரணில் மாமா உங்களையும் அது மாதிரி என்று தப்பு கணக்கு எல்லே போட்டினம். தங்கட பிள்ளையளை வாழ வைக்கவேணும் அப்பாவி சனங்களின் பிள்ளையளை பலி குடுத்து தாங்கள் சுகபோகமாய் வாழ்து வந்தார்கள். இனி உங்கள் ஆட்சியில் இது நடக்காது. .30ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக நின்று எல்லா வழங்களையும் சுருட்டிய புலி கும்பலை இல்லாது அழித்து விட்டிர்கள். இப்போது தான் எங்கள் மாதிரி ஏழைகள் வாழ வழி பிறந்துள்ளது. புலி இருந்த காலத்திலை தம்பிமாற்றை ஆட்டம் தாங்க முடியாமல்

வாழ்ந்த காலம் மாறி விட்டது இப்போது தான் நிம்மதி சனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதுதான் உங்கள் துணிவால் இந்த நாட்டில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றம். இதற்கு உங்ளுக்கு நாட்டுமக்கள் நன்றி கூறி நிற்கிண்றார்கள். அதுதான் புலிகள் சண்டையும் புடிச்சாங்கள் இதால் நாட்டில் எத்தனை அழிவுகள் ஏற்பட்டது.அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு“இப்பதான் சண்டையே இல்லை இனி உங்கள் ஆட்சி நீடித்திருக்க எங்கள் மக்களின் ஆதரவுக் கரங்கள் அணிதிரண்டு நிற்கின்றன. எனி உங்கள் ஆட்சியை எந்த துரோகிகளாலும் அசைக்க முடியாது. உங்கள் ஆட்சிக்கு ஆப்பு வைக்க பல மாமாக்கள் முளைத்து விட்டார்கள். தமிழில் ஒரு பாட்டு இருக்கிறது “நண்பன் என்னட பகைவன் என்னடா அவசரமான உலகத்திலே” என்று அதனால் இந்தநேரத்தில சனங்கள் விழிப்பாய் இருக்வேண்டிய கால கட்டம் இது.



சனங்களுக்கு நான் ஒரு இரகசியம் சொல்லுறன் கேளுங்கோ காதைக்கிட்டவா கொண்டு வாங்கோ! உவங்கள் ரணில், சரத்துக்கும் எலக்சனில நிற்க்கிறதுக்கு ரகசியமாய் வெளி நாட்டில் இருந்து புலிப்பினாமியள் பணம் அணுப்புகிறார்களாம் பாத்திங்களை மீண்டும் உங்களை சுடுவதுக்கும் அதை வைத்து புலிப்பினாமிகள் பிழைப்பு நடத்துவதுக்கு திட்டம் தீட்டுகிறார்கள். புலிப்பினாமி ஆக்கள் ரொம்ப ஆபத்தானவங்கள்! அந்த பிரபாகரனோடை ஒரு கோப்பையிலை திண்டு குடிச்சு கிடந்தவங்கள் உறவாடி மகிழ்ந்தவங்கள். பின் பணத்துக்காக பிரபாகரணுக்கு

உவங்கள் கடசியில் வெளிநாட்டில் இருந்துகொண்டு ஆப்பு வைத்துட்டாங்கள். அப்பிடி தேனும் பாலுமா இருந்தவனையே காட்டிக் குடுத்தவங்கள் இவங்கள். கவனம் சனங்கள் நாளைக்கு அவன் சரத் வந்து ஏதேனும் கூட கூட்டிக் குடுக்கிறன் எண்டால் மாறி நிண்டு உங்களைப் போட்டுடுவான்கள் கவனம்;. இப்ப யோசிப்பியள்! எல்லா தமிழ் அரசியல் தலையலையெல்லாம் போட்டு தள்ளியது யார் என்று யாரை விட்டு வைத்தான் அரக்கன் பிரபாகரன் தான் தான் தலைவன் என்று அரசியல் செய்யிறதெண்டுதானே? தமிழ் அரசியல் தலையலையெல்லாம் போட்டு தள்ளி பின் தானும் அழிந்தான். ஏன்மா எங்கடை புலி கூத்தமைப்புக்குள் இப் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாவம் தமிழ் புலி கூட்டமைப்பு இவங்களை யார் எனி வழி நடத்துவது தலைவர் இருந்தபோது பயந்து கூனி குறுகி குனிஞ்சு நின்று இருந்தார்கள். இனி நல்ல புத்தி வர அந்த எல்லாம் வல்ல ஆண்டவன் செயல்தான் இவர்களுக்கு.



என்னமோ சனங்களுக்கு சொல்லுறதை சொல்லிப்போட்டன். காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விட்டாது ஆரையும். ஆயுதம் தூக்கினவங்களை நம்பாதீங்க. ஒண்ணா மண்ணா இருந்தவங்களையே காட்டிக் கொடுத்த சாதி வெளுத்த தெல்லாம் பால் என்டு நினைக்கிற உங்களை சும்மா விடுவங்களே! கவனம் சனங்கள். தமிழிலை கொலையும் செய்வாள் பத்தினி எண்டு ஒரு பழமொழி இருக்குது நான் சொல்லத்தேவையில்லைரணில் சரத் ஆக்களிள் ஒரு கண் வச்சிருங்கோ. சரி சனங்கள். நிறைய எழுதிப்போட்டன். மேற்கொண்டு உங்கடை விருப்பம்.



யாழ்ப்பாணத்திலிருந்து

உங்கள் அன்பு மாமா

சனீஸ்வரன்

Read more...

கனடாவில் புலி வால்கள் நடாத்திய ‘வட்டுக்கோட்டை தீர்மான’ வாக்கெடுப்பை 84 வீதமான தமிழ் மக்கள் நிராகரித்தனர்!

கனடாவில் புலி வால்கள் நடாத்திய ‘வட்டுக்கோட்டை தமிழீழ தீர்மானத்துக்கு’ ஆதரவு கோரிய தேர்தலை, 84 வீதமான தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்! புலி வால்களே தெரிவித்த தகவலின்படி (இத்தகவல் கூட உண்மையோ தெரியாது. ஏனெனில் தேர்தல் நடாத்துவது, வாக்குப் போடுவது, எண்ணுவது, வெளியே அறிவிப்பது எல்லாமே அவர்கள் தான்!), 48,583 பேர் இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றியுள்ளனர். இத்தொகை கனடாவில் வாழும் சுமார் 3 லட்சம் தமிழ் சனத்தொகையில் ஏறத்தாழ 16 வீதமாகும்.


வாக்களித்தவர்களில் 99.82 வீதமானோர் தீர்மானத்துக்கு ஆதரவாக “ஆம்” என வாக்களித்துள்ளனர் என புலி சார்பு ‘தமிழ் நெற்’ புளுகித் தள்ளியுள்ளது. புலி வால்களால் ஏற்றி இறக்கப்பட்டவர்கள், பின்னையென்ன இல்லையா என்றா வாக்களிப்பார்கள்?


புலம்பெயர் நாடுகளில் புலிகளின் கோட்டையென வர்ணிக்கப்படும் நோர்வேயில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பிலும், அங்கு வாழும் 83 வீதமான மக்கள் பங்குபற்றாது நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில், இயக்கத்தின் பெயரால் பொதுமக்களை மிரட்டிப் பறித்த பணத்தில், கனடாவில் வியாபாரங்களை ஆரம்பித்தவர்களும், வீடு - கார் என வாங்கியவர்களும் (அவற்றுக்கும் இப்பொழுது பங்குச் சண்டைகள் நடந்து வருகின்றன), இனிமேல் தமது பணத் தேவைகளுக்கு வேறு வழி வகைகளை (ஏற்கெனவே கைவந்த கலையான, ‘மட்டை’ விளையாட்டு போன்ற) நாடுவதைத் தவிர, வேறு வழியில்லையென்பதையே வாக்களிப்பு சம்பந்தமான கனடிய தமிழ் மக்களின் பிரதிபலிப்பு (Response) எடுத்துக்காட்டி நிற்கிறது


கனடா கந்தசாமி


Thenee web

Read more...

விடுதலை புலிகளின் பாரிய ஆயுதக் கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டது

புலிகளுக்கு சொந்தமான பிறின்ஸஸ் கிரிஸ்டீனா (MV 'Princess Christina') கப்பல் கைப்பற்றப்பட்டு இன்றுகாலை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


Sri Lanka seizes Tiger rebel ship
AFP






COLOMBO (AFP) - Sri Lanka's military said Monday it had seized a cargo ship suspected of being an arms smuggling vessel used by the defeated Tamil Tiger rebels at an undisclosed foreign port.


Navy spokesman Captain Athula Senarath said the 90-metre (300-feet) long Princess Christina had been captured at a foreign port but refused to reveal the location or identify the country.


"We can't say from where we seized the ship, but we deployed our own crew and brought it to Sri Lankan territorial waters," he said.


Sri Lanka's navy last year claimed it had destroyed a fleet of 10 gun-running ships operated by the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) which was finally defeated in May after a 37-year conflict.


The group's new international representative, Selvarasa Pathmanathan, was taken into custody in August, three months after security forces claimed victory over the rebels.


Pathmanathan, better known as KP, the chief arms smuggler for the Tigers, is in military custody in Sri Lanka after he was arrested in Southeast Asia in August, but has yet to be brought before courts.


The government believes the LTTE sourced most of its weapons from Southeast Asia, including Cambodia and Indonesia, as well as former Soviet republics such as Ukraine.




The UN estimates that up to 100,000 people were killed in Sri Lanka's civil war since the Tamil Tigers took up arms in 1972.

Read more...

ஒவ்வொரு படத்தின் மீதும் கிளிக் பண்ணி வாசிக்கவும்

இவர்கள் புலிகளிடம் பண உதவி பெற்றார்களா?

ஒவ்வொரு படத்தின் மீதும் கிளிக் பண்ணி வாசிக்கவும்

Loading

Tamilwin

தமிழ்வின் இணையதள செய்தி தலைப்புகள்

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அறிவென்றொன்று...!?

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

முகமூடிகளின் பின்னால் இருப்பவர்களைஅடையாளம் காண்பது எப்படி?

டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு

சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த போராளிகள்

'இப்படியொரு இக்கட்டான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' - பிரபாகரன்

நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும்

மறுபக்கம்

கே.பி. வருவதை எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம்

பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார்

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

முப்பது வருடகால ஈழ யுத்தத்தை மூழ்கடித்து விட்டார் பிரபாகரன்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

இந்திய அரசின் கடமை

நினைத்தேன் எழுதுகிறேன் - இது நல்லதல்ல!

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

திமுக செய்த தியாகபட்டியல்

மறக்க முடியாத தேசியத் தலைவர் இவர்தான்

சிவகுமாரன் என்றொரு மனிதன்...

500 மில்லியன் டொலர் களுக்காக பத்மநாதன் - அறிவழகன் மோதல்!

நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடக அறிக்கை

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top