விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களுக்கு விடுதலை தரும்?
[25 - October - 2008]
விக்டர் ஐவனின் குத்துக்கரணம்
அரசாங்கத்தின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளினால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவர், அழிக்கப்படுவர், அதனால் தமிழர்கள் பயனடைவர் என்ற வாதம் தெற்கில் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளின் நலன்கள் குன்றுகின்றன என்று கருதப்படுவதால் இச்சிந்தனை பிறந்துள்ளது.
தனது பத்திரிகைக் கட்டுரையில் விக்டர் ஐவன் கூறியுள்ள கருத்தின்படி, விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவுவதால் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை என்று கூறுகிறார். விடுதலைப் புலிகளின் தோல்வியினால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் சிறிதளவு கஷ்டங்களை அனுபவித்தாலும், விடுதலைப் புலிகள் அம்மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் நிறுத்தப்பட்டதும் தமிழினத்துக்கு கூடிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார். ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து சிறிதளவு நன்மைகள் மட்டுமே கிடைப்பினும், விடுதலைப் புலிகளின் தோல்வியின் மூலம் நிச்சயமாக அவர்கள் மறைமுகமாக பல சலுகைகளைப் பெறுவர். போரினால் தமது காணிகளை இழந்தவர்கள் அங்கு மீளக்குடியேற முடியும். அதேபோன்று, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டதும், தமிழ்மக்கள் கூடிய சுதந்திரத்துடன் வாழக் கூடியதாக இருக்கும். விடுதலைப் புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதும், தமிழ் சமூகத்தில் புதிய சிந்தனைகள் தோன்றும். அதேபோல் புதிய தலைமைத்துவம், புதிய செயற்பாடுகள் இடையிடையே ஏற்படும். போர் நிறுத்தத்திற்கு மத்தியில் முடிவு காணப்படாத போர்ச்சூழலில் தேங்கிக்கிடக்கும் தமிழ் மக்கள் இந்த அநாதரவான அழிவில் இருந்து மீளுவர். அது விடுதலைப் புலிகளின் தோல்வியினால் பெறப்பட்டாலும் கூட.
விடுதலைப் புலிகளினூடான போரில் வெற்றி காணல்
நான் அவரின் நிலைப்பாட்டினை சுருக்கமாகத் தந்துள்ளேன் என்று நினைக்கிறேன். மாறுபட்ட கருத்துகளைக் கூறவல்ல. விக்டர் ஐவனின் அறிவாற்றல் சார்ந்த துணிவு என்னைக் கவர்கிறது. இக்கட்டுரை வெளிவந்து உள்ள சந்தர்ப்பம் சிங்கள தேசியவாதத்தில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு உகந்த இசையாக அமையும்.
விடுதலைப் புலிகள் போர்மூலம் தோற்கடிக்கப்படலாம் என்ற விக்டர் ஐவனின் நிலைப்பாடு அடிப்படையிலேயே தவறானது என்பது எனது வாதம். போர் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் பிரசாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது அவர் நிலைப்பாடு. கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் பிரசாரத்தில் புத்திஜீவிகள் மயங்கிவிடக்கூடாது. நவீன யுத்தம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டுப் போரில் யாருக்கும் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை. ஆனால், இரு சாராருக்கும் இழப்புகள் தான்.
1987/88 இன் தோல்வியுடன் அரசாங்கம் அதனை அடக்கியதுடன் இதனை விக்டர் ஐவன் ஒப்பிடுவது தவறு. அது வர்க்கப்போராட்டம். இது இன அடிப்படையிலானது. பிராந்திய சுயாட்சியே இவர்களது கோரிக்கை.
வடமத்திய மாகாண சபை, சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தல் காலத்தில் விக்டர் ஐவனின் கட்டுரை வெளியானது. பாதுகாப்புப் படையினர் கிளிநொச்சியை நோக்கி முன்னேறுகிறார்கள் என்றும் ஒரு சில நாட்களில் கைப்பற்றலாம் என்றும் பிரதமரும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசினார்கள். பிரபாகரன் உயிருடனோ அல்லது சடலமாகவோ கைப்பற்றப்படுவார் என்றும் சயனைட் குப்பியை விழுங்குவது தான் அவருக்கு உள்ள ஒரே வழியென்றும் அமைச்சர்கள் வாக்குறுதிகளை வழங்கினர்.
பிரபாகரனின் உடலைத் தனது காலடிக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி சில உரைகளில் குறிப்பிட்டார். இது முன்னுதாரணம் அற்றது. இதுவரை எந்த ஜனாதிபதியாவது, பிரதமராவது பொதுவைபவங்களில் இத்தகைய தொனியில் பேசியது இல்லை. நினைத்துக் கூட பார்க்க முடியாததை, விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்தலை முன்னாள் ஜனாதிபதிகள் கூறத் துணிந்ததில்லை. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த வேண்டும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவர்கள் பேச்சாக இருந்தது. பிரபாகரன் தேடப்படுபவர். அவரைப் பிடிப்பதற்கு சன்மானம் வழங்கப்படும் என்பதும் உண்மைதான். 200 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை இலங்கை நீதிமன்றங்கள் அவருக்கு வழங்கியுள்ளது. அவரைக் கொல்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பல ஜனாதிபதிகளின் காலத்தைத் தாண்டி உயிருடன் இருக்கிறார். மிகவும் அஞ்சப்படவேண்டிய ஒரு இயக்கத்தை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். அவரைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, கைது செய்யப்படுவதை தவிர்த்து உள்ளார். அவர் சயனைட் குப்பியை விழுங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். தமது நிலத்தை விட்டு வெளியேறி முஸ்லிம் நாடுகளில் அடைக்கலம் கோரத் தீர்மானித்த அல்ஹைதா அல்லது தலிபான் (ஆப்கானிஸ்தான்) தலைமைத்துவத்தினைப் போல விடுதலைப் புலிகளின் தலைமை இந்தியாவில் தஞ்சம் கோரவோ அல்லது இலங்கை நாட்டில் எங்கேனும் மறைந்து வாழவோ முடியாது. எனவே சில தலைவர்களை கொலை செய்யும் வாய்ப்பு உள்ளது என்பதை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். அது அவ்வாறு இடம்பெறினும், மாற்று அமைப்பு முழுமையாக இயங்க சாத்தியமான திட்டங்களை விடுதலைப் புலிகள் வகுத்து இருப்பார்கள். எனவே நீண்ட காலமாக நிகழும் இப்போருக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது வாதம்.
இலங்கைப் பாதுகாப்பு படையினரின் வான், கடல், தரை ரீதியான முக்கோணத் தாக்குதலினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் ஊடுருவி அவர்களின் தலைமையகத்தை அண்மித்து உள்ளனர் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால் அதேவேளை, தமது வீரர்களை முழுமையாக தக்க வைத்துக்கொண்டு, படையினருக்கு ஆகக்கூடிய பாதிப்பினை விளைவிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகள் பின்வாங்கி உள்ளனர். கிளிநொச்சியில் இருந்தும் அவர்கள் பின்வாங்குவார்கள். பருவ மழை காலம் சரியாக ஆரம்பித்துவிட்டதால் போராடும் களம் இரு சாராருக்குமே கஷ்டமாக இருக்கும். வவுனியாவில் உள்ள உள்புக முடியாத மிகவும் பலம் வாய்ந்த பாதுகாப்புப் படையினரின் கோட்டைக்குப் பலத்த சேதத்தை விளைவித்ததன் மூலம் தமது வான் மற்றும் தரையில் தமக்குள்ள பலத்தை விடுதலைப் புலிகள் அண்மையில் செயலில் காட்டி அனைவரையும் வியப்படைய செய்துள்ளனர்.
முதற்கண், எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரதேசங்களை கைப்பற்றுவது போரின் முடிவு அல்ல என்பதும், அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியான தீர்வு இல்லை என்பதும் எனது நிலைப்பாடு. போர் அவசியமானால், அது மக்கள் மனதை வெல்லும் உளவியல் ரீதியான போராகவே அமைய வேண்டும். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் அமைப்பு ரீதியான தீர்வினை வழங்குவது மூலமே பிரிவினைவாதத்தை தோற்கடிக்கலாம். பிரதேச ரீதியான போரில் விடுதலைப் புலிகள் வெற்றியடையாமல் போகலாம். ஆனால் இந்த நீண்ட கால துன்பியல் மோதலுக்கு அரசியல் அமைப்பூடான தீர்வு காண்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ் மக்களிடத்தும் சர்வதேச சமூகத்திடமும் நம்பிக்கையை ஏற்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.
முன்னைய போர்களுடன் ஒப்பிடும் போது, அரசாங்கத்தின் இப்போதைய இராணுவச் சிந்தனைகள், உத்திகளில் வேறுபாடு உண்டு. இவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
* போரின் போது தொடர்ச்சியான விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது பாரிய பீரங்கித் தாக்குதலை எண்ணிலடங்காத வகையில் பிரயோகித்தல்.
* தரை, கடல் ரீதியான போரில் விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது தொடர்ச்சியான வான் தாக்குதல்கள்.
* கருணா குழுவினர் அரசு பக்கம் சேர்ந்தமையால், கிழக்கில் ஆட்சேகரிப்பு நிகழாமை.
* ஜெனரல் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் என்று நேரடியான ஒரு வழித்தலைமையும் , பாதுகாப்புப் படை அன்றாட நிர்வாகத் தலையீடும் இன்மை.
* ஒரே காலத்தில் பலமுனைகளில் நெகிழ்ச்சியான உத்திகள்.
* விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் அவர்களுக்கு ஆயுதம் சென்றடைவதை நிறுத்தவல்ல கடற்படையின் செயல்திறன்.
* சிறந்த புலனாய்வும் , விடுதலைப்புலிகளின் தலைவர்களை அழிக்க ஊடுருவித் தாக்கும் அணியினைப் பயன்படுத்தல்.
* இந்திய, அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் சிறந்த ஒருங்கிணைப்பும் கடல் மூலம் ஆயுதக்கடத்தலைக் கட்டுப்படுத்தலும்.
* சீனா, ஜப்பான், ஈரான், பாகிஸ்தான், தென்கொரியா உடனான சர்வதேச கூட்டமைப்பும் , அமெரிக்கா, இந்தியாவிடம் இருந்து விடுதலைப் புலிகளை அழிக்க மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவும்.
தொடரும்
Thinakkural
0 விமர்சனங்கள்:
Post a Comment