இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label நகைச்சுவைகள். Show all posts
Showing posts with label நகைச்சுவைகள். Show all posts

Tuesday, January 19, 2010

Vadivelu in politics_Classic comedy


Read more...

ஜனாதிபதி சுயேற்சை வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்..

வடகிழக்கு பிரதேசமெங்கும் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனால் அமுல்படுத்தப் பட்டிருந்த 14ஆவது ‘திருத்த முடியாத” ஆட்சி அதிகார சட்டத்தை மீண்டும் நிலைநாட்டுவேன் -எம்.கே.சிவாஜிலிங்கம். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் பிரதம வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களால் ‘பிரபாகரனின் சிந்தனை” என்ற தலைப்பில் 14 அம்சதிட்டத்தை உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று, திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டிதுறையில் உள்ள வைரவர் கோயிலில் வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் விலக்கி வைக்கப்டுள்ளவரான ரெலோ உறுப்பினர் ஸ்ரீகாந்தா, இடதுசாரி முன்னனி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆயோருடன், சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

‘பிரபாகரனின் சிந்தனை” என்ற பேரில் 14 அம்சத்திட்டதை உள்ளடக்கியதாக இத்தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டு திரு. எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த 30வருடங்களுக்கு மேலாக நமது தேசிய தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்த நமது மக்கள் இன்று பல்வேறு வகையான சுதந்திரங்களை அனுபவிக்க வெளிக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக வன்னிமக்கள் இப்படியான சுதந்திரங்களை பெற்று வாழ்வது எதிர்காலத்தில் நமது இலச்சியமான தமிழீழத்தை அமைக்க முடியாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தும்.

வன்னி மக்கள் கடந்த 20வருடங்களுக்கு மேலாக தேசிய தலைவரை பாதுகாத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். தலைவர் அவர்களை விட்டுப் பிரிந்து இப்பொழுது தலைமறைவாக உள்ளதால் தலைவரை பாதுகாத்து வைத்திருந்த மக்கள் அவர் பிரிவால் கதிகலங்கி போய் உள்ளார்கள். இப்பொழுது அவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தெருத்தெருவாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் வருவார் அவர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தலைவர் கூறியதால் தான் நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். மகிந்தவும், சரத்பொன்சேகாவும் கூட்டுச்சேர்ந்து நமது தமிழ் இனத்தைக் கொன்று குவித்தவர்கள். மானமுள்ள எந்த தமிழனும் மகிந்த ராஜபக்சவையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டான்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் என்னை இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுவேட்பாளராக நியமித்து போட்டியிட வைப்பார்கள் என நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் அவர்கள் வேறு வழியில் செல்கிறார்கள். அவர்கள் நமது தேசிய தலைவரை மறந்து செயல்படுகிறார்கள் என நினைக்கின்றேன். அவரின் வழிகாட்டலிலேயே நாம் நான்கு கட்சியினர் ஒன்றுசேர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி கொண்டோம். இப்பொழுது இருப்பது தமிழ்தேசியக் கூட்டமைப்பல்ல. அது எப்பொழுதோ பிரிந்து விட்டது. இப்பொழுது இருப்பது இரா.சம்பந்தன் சேனாதிராஜா கூட்டமைப்பேயாகும்.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக வன்னியில் பிரபாகரன் காலத்தில் நடைமுறைபடுத்தப் பட்டிருந்த

1. 14ஆவது ‘திருத்தமுடியாத” சட்டத்துக்கு அமைந்த ஆட்சி அதிகாரத்தை தமிழீழ பிரதேசமெங்கும் நிலைநாட்டுவதோடு, எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபட்ட 14 அம்சதிட்டங்களையும் மூன்று மாதத்துக்குள் நடைமுறைப் படுத்துவேன்.

14ஆவது ‘திருத்த முடியாத” சட்டத்தின் உற்பிரிவுகள்..

ய. தமிழீழ பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளான (பேச்சுரிமை, தேர்தல் நடத்தும் உரிமை, கூட்டம் கூடுதல், அரசியல் கட்சியமைத்தல், இந்திய சினிமா பார்த்தல்.. ) யாவும் வழங்கப்பட மாட்டாது

டி. எட்டாம் வகுப்புக்கு மேல் யாரும் பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

உ. 35வயதுக்கு மேற்பட்டவர்களே கல்யாணம் முடிப்பதற்கு உரித்துடையவர்கள்.
ன. ‘வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு சேவை” எனும் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்காக அழைக்கப்படுவார்கள்.

ந. தமிழீழ பிரதேசத்திலிருந்து யாரும் தமிழீழ காவல்துறையின் அனுமதியில்லாமல் வெளிப்பிரதேசங்களுக்கு பயணிப்பது மரணதன்டனைக்குரிய குற்றமாகும்.

க. தமிழீழ பிரதேசத்திற்குள் இருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் யாவும் தலைவருக்கே உரித்துடையவையாகும்.

2. வடகிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து இரானுவ முகாம்களும் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கிருந்து கொண்டு தமிழர்களை துன்புறுத்தி கொண்டிருக்கும் இராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்புவேன்

3. இராணுவத்தால் கட்டாயப்படுத்தி பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எதிர்கால மாவீரர்கள் 13,000பேரையும் விடுதலை செய்யபட்டு அவர்களுக்கு மீண்டும் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும்.

4. திருவேங்கடம் வேலுப்பிள்ளையாரின் 31ஆவது நினைவுதின விழாவை மாபெரும் விழாவாக நடத்துவேன். இந்த விழாவுக்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள தேசிய தலைவரின் உற்றார், உறவினாகள்;, நன்பர்கள், தேசபக்தர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.

5. வல்வெட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், அந்த துறைமுகத்தை கொழும்பு துறைமுகத்துக்கு ஈடான ஒரு துறைமுகமாய் மாற்றியமைப்பதோடு, புலிகளிடமிருந்த 14கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து வல்வெட்டி துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு வழிவகுப்பேன். வல்வெட்டிதுறை மக்களின் மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கு என்னாலான சகல உதவிகளையும் செய்யவுள்ளேன்.

6. மக்கள் பாவனைக்காக தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ள ஏ9பாதை மீண்டும் மூடி யாழ்பாண மக்களுக்கான சகல உணவு வினியோக வழிகளையும் தடை பண்ணுவேன்.

7. நமது தேசிய தலைவர் வன்னியில் எங்கெங்கு குடியிருந்தாரோ, அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அங்கே பாதாள மாளிகைகள் கட்டி அதை மக்கள் பார்வைக்கு முன் வைப்பேன்.

8. வடகிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்களை கைது செய்து, அவர்களிடமிருந்து அனைத்து ஆயுதங்களையும் களைந்து, அவர்களை சிறையில் அடைப்பேன்.

9. இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்தை உடனடியாக மூடி, இந்திய தூதரை நமது நாட்டிலிருந்து வெளியேற்றுவேன். எனிவருங்காலங்களில் இந்தியர்களுக்கு விசா வழங்கும் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்.

10. நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு தேசிய தலைவரால் செப்பப்பட்ட எதிரி, துரோகி, காட்டிக்கொடுப்பவன், ஒட்டுக்குழு, போன்ற தமிழ்சொற்களை ஈழத்தமிழ் இலக்கணச் சொற்களாக ஏற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வேன்.

11. கப்பம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற தொழில்களுக்கு மானியம் வழங்கி அத்தொழில்களை மக்கள் செய்வதற்கு பயிற்சியளித்து ஊக்குவிப்பேன்.

12. தமிழீழத்தில் கன்னிவெடி, மின்னிவெடி, கிளைமோர், கிரனைற் குண்டு தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகளை மீண்டும் உருவாக்குவேன்.

13. புலிஈழம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதோடு, படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் அமைப்பேன்.

14.மகிந்த ராஜபக்சவால் புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினருக்கான நினைவு சின்னத்தை உடனடியாக அகற்றி அதற்கு பதிலாக கடைசிக்கட்ட போரில் இறந்த நமது மாவீரர்களுக்கு அதே இடத்தில் நினைவுசின்னம் ஒன்றை எழுப்புவேன்.

இந்த எனது கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்மக்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் தமிழ்தேசியம், தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை, தமிழர்தாயக பிரதேசம் போன்ற நமது இலச்சிய கோட்பாட்டை சர்வதேசத்தினருக்கு பறைசாற்ற முடியும். சிங்களதேசத்தினர் நமக்கு எந்தவுரிமையைiயும் கடந்த 60ஆண்டுகளாக தரவுமில்லை, இனிவரும் காலங்களில் தரப்போவதுமில்லை. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அதனால்தான் நான் சுயேற்சை வேற்பாளராக ஐனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தேன். நான் எடுத்த இந்த நிலைப்பாட்டை தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதோடு அவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி… எம்.கே.சிவாஜிலிங்கம்.

(ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள போதிலும் நமது சிவாஜிலிங்கத்தார் எதனையும் இதுவரை வெளியிடாமல் இருப்பது நமக்கு மிகுந்த மனக்கவலையைத் தந்தது… பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையாரின் மரணச்சடங்கு, பிரபாகரனின் மாமியாரான சின்னம்மா ஏரம்பு அவர்களை மாலைதீவுக்கு கொண்டு சென்று உறவுகளிடம் ஒப்படைத்தது, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவை வெளிநாட்டில் அவரது மற்றையப் பிள்ளைகளிடம் அனுப்பும் அலுவல் என வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் இருப்பதால் (பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த புலியுறுப்பினர்களையும் இலங்கையில் அழித்தது போன்று தற்போது பிரபாகரனின் உறவினர்களையும் இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தும் கைங்கரியத்திலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளதால்) அவரது வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் அவர் சார்பில் எம்மால் தயாரிக்கப்பட்டது இது -கரிகாலன்!)

Athirady web

Read more...

Friday, January 15, 2010

M.I.A.வின் புதிய பாடல்

Read more...

Monday, January 11, 2010

வைகோவின் புதிய புலுடா

வேலுப்பிள்ளை மறைவு தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,




’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு சென்றிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.




பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்று ஒரு புதிய புலுடாவை வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Friday, January 8, 2010

வழமைக்கு மாறான மரண ஊர்வலம்

காலையில் அலுவலகத்திற்குப் போவதற்காக பெண்மணியொருவர் வீட்டுக்கு வெளியே வந்தபோது வழமைக்கு மாறான மரண ஊர்வலமொன்று அருகாமையில் உள்ள மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.


இரு நீண்ட பிரேதவாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இரண்டாவது பிரேத வண்டிக்கு பின்னால் இளம் பெண்ணொருவர் நாயொன்றுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் சில மீற்றர்கள் தொலைவில் 200க்கும் அதிகமான பெண்கள் ஒருவர்பின் ஒருவராக வரிசையாக வந்தார்கள்.


இதைப்பார்த்த பெண்மணிக்கு வியப்பாக இருந்தது. இத்தகைய ஒரு மரண ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்ட காரணத்தை அறிய விரும்பி இரண்டாவது பிரேதவாகனத்தின் பின்னால் நாயுடன் வந்துகொண்டிருந்த பெண்ணை அணுகி முதலில் அனுதாபத்தை தெரிவித்துவிட்டு "இத்தகைய ஒரு மரண ஊர்வலத்தை நான் முன்னர் பார்த்ததேயில்லை. இது யாருடைய மரண ஊர்வலம்" என்று வினவினார்.


"இது எனது கணவருடைய மரண ஊர்வலம்"


"அவருக்கு என்ன நேர்ந்தது?"


"எனது நாய் அவரை கடித்துக் குதறிகொன்றுவிட்டது"


"சரி, இரண்டாவது வாகனத்திற்குள் யாருடைய சடலம் வைக்கப்பட்டிருக்கிறது?"


"எனது கணவரின் தாயாருடைய சடலம். கணவரைக் கடிப்பதற்காக நாய் அவர் மீது பாய்ந்தபோது அவருக்கு உதவுவதற்கு ஓடிச்சென்ற மாமியாரையும் நாய் கடித்துக் கொன்றுவிட்டது".


சற்று நேரமௌனத்தின் பின்னர் பெண்மணி கேட்டார். "இந்த நாயை எனக்கு சில நாட்களுக்கு வாடகைக்கு தரமுடியுமா?"


"அப்படியானால் பின்னால் வந்து கொண்டிருக்கும் பெண்களின் வரிசையில் போய் நீங்களும் சேருங்கள்" என்று பதில் வந்தது.

Read more...

Sunday, January 3, 2010

மாஸ்கோவில் அமெரிக்கர் குப்பை கொட்டிய இடம்

அமெரிக்க உல்லாசப்பிரயாணி ஒருவர் ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அவர் தங்கியிருந்தார்.

மாஸ்கோவில் பல இடங்களையும் சுற்றிப்பார்வையிடுவதற்காக அடிக்கடி வெளியே செல்லவேண்டியிருந்ததால் தான் தங்கியிருந்த வீட்டை ஒழுங்காகத் தினமும் துப்பரவு செய்ய அவரால் முடியவில்லை.

குப்பைகள் குவியலாகச் சேர்ந்துவிட்டன. ஒரு நாள் வெளியில் எங்கும் போகாமல் வீட்டைத்துப்பரவு செய்து குப்பைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வெளியே போனார். எங்கே இவற்றைக் கொட்டுவதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து குப்பையைக் கொட்டுவதற்குரிய இடத்தை தேடிக்கொண்டிருந்த அவரை மாஸ்கோ பொலிஸ் அதிகாரியொருவர் இடைமறித்தார்.

என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்ரு பொலிஸ் அதிகாரி கேட்க அந்த அமெரிக்கர் குப்பையை எங்கே கொட்டுவதென்று தெரியாமல் அலைகிறேன் என்ரு பதிலளித்தார்.

"சரி நான் உங்களுக்கு இடம் காட்டுகிறேன். அங்கே நீங்கள் குப்பையைக் கொட்டலாம்" என்று கூறி பொலிஸ் அதிகாரி அமெரிக்கரைக் கூட்டிச்சென்றார்.

பொலிஸ் அதிகாரி மிகவும் அழகான புற்தரையும் ரம்மியமான பூச்செடிகளும் நிறைந்திருந்த இடமொன்றுக்கு அமெரிக்கரைக் கூட்டிச்சென்று அங்கே குப்பையைக் கொட்டுமாறு கூறினார்.

இந்த அழகான துப்பரவான இடத்திலேயா குப்பையைக் கொட்டுவது என்ரு அமெரிக்கர் கேட்க அதுதான் ரஸ்யர்களின் பண்பு என்று பொலிஸ் அதிகாரி பதிலளித்தார்.

அழகான பூச்செடிகளுக்கு மேல் குப்பையை கொட்டிவிட்டு வந்த அமெரிக்கர் குப்பை கொட்டுகிற இடத்தைக் கூட ரஸ்யர்கள் இவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்களே என்று மகிழ்ச்சியடைந்தார்.

தனது மகிழ்ச்சியை தெரிவித்த அமெரிக்கர் இறுதியில் இது எந்த இடம் என்று பொலிஸ் அதிகாரியைக் கேட்டார்.

பொலிஸ் அதிகாரியிடமிருந்து பதில் வந்தது "இது அமெரிக்கத் தூதரக வளாகம்" என்று.

Read more...

Saturday, December 26, 2009

உங்கள் அபிமானத் திரையரங்குகளில் காணத்தவறாதீர்கள்





புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


கரும்புலியளும் நிலை குலையுது
கடற் புலியளின் தலை பறக்குது
பறந்து வாறான் மகிந்த ராசா
துண்டைக் காணோம் துணியைக் காணோம்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
துவக்கைப் போடு கொடியைக் காட்டு


புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


யாரிவன் யாரிவன் யாரிவன்
கோத்தபாயாவின் கொண்ணன் தானிவன் தானிவன் தானிவன்
ஒத்தயா வாறான் ஒண்ணுக் கொண்ணா வாறான்
சிங்கத்துக்கு பிறந்த சிங்கம் தான்டா வாறான்
விழுந்து குப்பறப் படுத்து வெள்ளைக் கொடியைக் காட்டு


இவனுக்கு இல்லாத கரும்புலி
வேறு எவனுக்கும் இல்லாத வெறும்புலி
திரும்பும் திசையெல்லாம் அவனடா
இவன் திமிருக்கு முன்னாலை எவனடா


காட்டு கொடியைக் காட்டு வெள்ளைக் கொடியைக் காட்டு
பங்கரு பங்கரு பங்கரு பங்கரு பங்கரு பங்கருடா
எங்கை பங்கரு பங்கரு பங்கர் எங்கடா எங்கடா


புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து

நன்றி ஈழநாசம்


Read more...

Sunday, December 20, 2009

ஜெகத்கஸ்பாரின் கனவில் உதித்தவை

சிக்கிய ஆயுத விமானம்! - ஜெகத்கஸ்பர்

டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம்
இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்-
டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில
நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு
வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது.
அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள்
நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன.

ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும்
அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது. அந்த ரசாயன நச்சு ஆயுதங்கள் தமிழருக்கெதிரான இன அழித்தல் போரில் சீனா சன்மானம் தந்து சிங்கள ராணுவத்தால் முல்லைத்தீவில் பயன்படுத்தப்பட்ட அழிவாயுதங்களைப் போன்றவை என்று கிடைத்துள்ள தகவல் முக்கியத்துவ மானது. மட்டக்களப்பு- அம்பாறை மின்னேரியா காடுகளுக் குள் முற்றுகையிடப்பட்டு நிற்கும் விடுதலைப் போராட்டத்தில் மிஞ்சிய போராளிகளை எளிதாக அழித்தொழிக்கவேண்டி அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களோ என்ற ஐயத்தை இது எழுப்பியுள்ளது.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது, வட கொரியாவில். அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு அழிவாயுதங்களை உற்பத்தி செய்து பரிசோதித்துப் பார்க்கும் முக்கிய உலக நாடாக வடகொரியா இன்று திகழ்கிறது. வடகொரியாவின் உலகப் புரவலர், தாளாளர், அரசியற் பாதுகாவலனாக சீனா நாடு நிற்கிறது. அதே சீனாதான் இன்று ராஜபக்சே கும்பலுக்கும் புரவலர்- பாதுகாவலன் என்ற நிலையில், சீனாவின் ஏற்பாட்டில்தான் இந்த அழிவாயுதங்கள் இலங்கைக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஐயம் வலுப்படுகிறது.
இந்த ஆயுதங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அரசு வெளியிட்ட அவசர தன்னிலை விளக்கம் யதார்த்தத்தில் ஐயங்களை அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்த ஆயுத விமானத்தின் அதிகாரபூர்வ பயண வழி அதனை உறுதி செய்கிறது.
உக்ரைன் நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான இந்த விமானம்
வடகொரியாவுக்கு ஆயுதம் ஏற்றிச் செல்லும் வழியில் எரிபொருள்
நிரப்புவதற்காய் அசர்பைஜான், எமிரேட்ஸ் நாடுகளில் தரையிறங்கியுள்ளது.
வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றிவிட்டு திரும்பி வரும் வழியாக தாய்லாந்து, ஸ்ரீலங்கா இரு நாடுகளையும் பயணவழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். உக்ரைன் நாடு இவ் ஆயுதங்களை தான் வாங்கவில்லையென அறிவித்திருக் கிறது.

அவ்வாறே தாய்லாந்தும் அறிவித்துள்ளது. உண்மையில் இத்தகு அழிவாயுதங்கள் பயன் படுத்தும் நிலையிலோ, தேவையிலோ அந் நாடுகள் இல்லை. எனில் ஆயுத விமானத்தின் பயண வழியில் குற்றவாளிகளாக மிஞ்சி நிற்கும் ஒரே நாடு ஸ்ரீலங்காதான். சீனாவின் உதவியோடு ஸ்ரீலங்காவுக்காக இந்த அழிவாயுதங்கள் வட கொரியாவிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற தென்பதே புறச்சூழமைவுகள் காட்டும் உண்மை.

மட்டக்களப்பு-அம்பாறை மின்னேரியா அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள்
நிற்கும் புலிகளின் அணிகளை முற்றாக அழித்தொழிக்கும் நோக்குடன் கருணா-
பிள்ளையான் கூலிப் படைகளின் உதவியோடு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை யொன்று இப்போது நடந்துகொண்டிருப்பது பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தது
வாசகர்களுக்கு நினைவிருக்கும். இந்நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டித்தான் வடகொரியாவிலிருந்து அழி வாயுதங்கள் வாங்கப்பட்டனவா என்ற கேள்வியும் இதனால் வலுவாக எழுகிறது.

முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவு ஆனந்தபுரம்
தென்னந்தோப்பில் நடந்த வரலாற்றுச் சமரில் புலிகளின் வியப்பூட்டும்
எதிர்த் தாக்குதலை முறியடிக்க உதவிய அதே அழிவாயுதங்கள் -தீபன், விதுஷா, கடாஃபி போன்ற மகத்தான தளபதியர்களை காவு கொண்ட அதே ஆயுதங்கள்தான் இந்த விமானத்திலும் வந்து கொண்டிருந்ததாய் கதைக்கப்படுகிறது. தளபதி பால்ராஜ் ஓயாத அலைகள் நடத்திய வதிரையன் பாக்ஸ் சண்டையைப்போல் பன்மடங்கு சாகசங்கள்
நடந்த ஆனந்தபுரம் தென்னந் தோப்பு சண்டை, அம்முற்றுகையை உடைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிகரமாய் வெளியேறியது எப்படியென்ற மெய்
சிலிர்க்கும் உண்மைகளை தமிழுலகம் அறியவேண்டும். அதனை பிறிதொரு தருணத்தில் பதிவு செய்வேன். ஆனால் அந்தக் களத்தில் பயன்படுத்திய அழிவாயுதங்களை இப்போது மீண்டும் பெற இலங்கை ராணுவம் முயன்றிருப்பது மின்னேரியா காடுகளில் நிற்கும் போராளிகளை ரசாயன ஆயுதங்கள் கொண்டு அழிக்கும் நோக்குடன்தான் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது.

எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னாலும் இலங்கைக் குள் இனியொரு தமிழர்
விடுதலை எழுச்சி பிறந்துவிடாதபடி ஆணிவேரின் அடி எல்லை சல்லி வேர்
வரைக்கும் சென்று அழித்து முடித்துவிடவேண்டுமென்பதில் ராஜபக்சே-கோத்த
பய்யா கும்பல் மிகவும் தெளிவான- மூர்க்கம் தணியாத முடிவில் தொடர்ந்து
இயங்குவதாகவே விஷயமறிந்த பலரும் கூறுகிறார் கள். மின்னேரியா முற்றுகை மட்டுமல்லாது வேறு பல நடவடிக்கை களையும் ராஜபக்சே கும்பல் செய்து வருவதாய் சொல்லப்படுகிறது.

ராணுவ மொழியில் ""காடுகளை தூய்மை செய்தல்'' என்பார்கள்.
வன்னிக்காடுகள்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய்மடி, தெய்வமடி என்பது அவர்களுக்குத் தெரியும். முல்லைத்தீவு காடுகள் எங்கிலும் ராணுவத்தின் சிறப்பு அணிகள் விரிந்து பரந்து, சிறு சிறு குழுக்களாக ஒருங்கிணைய முயன்றுவரும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாய் இயங்கி வருவதாய் கூறப்படுகிறது. வன்னிக்காடுகளை தூய்மை செய்துவிட்டால்
விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு நித்திய தடை நிகழ்த்திவிட
முடியுமென்பது அவர்களின் கணக்கு.

முல்லைத்தீவு காடுகளுக்குள் இலங்கை ராணுவம் எதிர்பார்த்த அளவிலான
விடுதலைப்புலிகளை காண முடியாததால், அவர்கள் ஒருவேளை அம்பாறை
காடுகளுக்குள் மின்னேரியாவை நோக்கி நகர்ந்திருப்பார்களோ என ராணுவம்
சந்தேகிக்கிறது. இப்போதைய பெரும் ராணுவ நகர்வுக்கு அதுவும் ஓர் முக்கிய
காரணம்.

ஆக, மின்னேரியா காட்டுப் பகுதிகளில் யார் தலைமையில் புலிகள்
நிற்கிறார்கள் என்பதிலும்- புலிகள் நிற்கிறார்கள் என்பது முக்கிய
செய்தியாக விடிகிறது. கேணல் ராம் தொடர்பான கடந்த இதழைப் படித்தபின் பல திசைகளிலிருந்து பலவிதமான தரவு கள் வந்தன. கேணல் ராம் ராணு வத்தால் கைது செய்யப்பட்டது உண்மையே என்றும், அதற்கு உதவி புரிந்தவர்கள் புலிகளின் ராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி இப்போது துரோகியாய் மாறியுள்ள பிரபா குழு என்றும், ராமுடன் கைது செய்யப்பட்டவர்களை சித்ரவதை செய்து அவர்களைப் பயன்படுத்தி ராமுக்கு வலதுகரமாய் நின்ற தளபதி நகுலனையும் கைது
செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தரப்பு தரவுகள் வந்து குவிந்தன. அதற்கு
நேர்மாறான தரவுகள் பிறிதொரு தரப்பிடமிருந்து வந்தன. கேணல் ராம்
ராணுவத்துடன் இணைந்துவிட்டதாய் முன்பு வந்த செய்திகளின் பின்னணியில்
உண்மையில் நடந்தது என்னவென்றால் -காயமுற்றிருந்த ஒரு தொகுதி போராளிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க காட்டுக்குள் இருந்து கொண்டு கருணா குழுவின் உதவியை நாடினார்கள். அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கேணல் ராம் மற்றும் உடன் நின்ற தளபதியர்களை முற்றுகையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள். முன்பு நாம் கூறியதுபோல் எது உண்மை, எது பொய் என்பதை காலம் தெளிவுபடுத்தும். ஆனால் இன்றைய நிலையில் ஒன்று மட்டும் தெரிகிறது. புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை. இன்னும் அவர்கள் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். மின்னேரியா காடுகளில் மட்டுமல்ல - உலகின் பல்வேறு பகுதிகளிலும்.
மின்னேரியா முற்றுகையை புலிகளின் எஞ்சிய அணிகளால் தாக்குப்பிடிக்க
முடியுமா என கொழும்பு நகரிலுள்ள தமிழ் ஆய்வாளர் ஒருவரை தொலைபேசி
உரையாடலின்போது கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் : ""நாம் கதைப்பது போல் எளிதானதல்ல. உணவு, மருத்துவ சிகிச்சை, பொது மருந்து தேவைகள், ஆயுத- எரிபொருள் சப்ளை ஆகியவை அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கசப்பானதோர் நிஜம் என்னவென்றால் ராணுவ முற்றுகை நீடிக்கும் காலம்வரை
தீயில் வெந்த உணவை அவர்கள் உண்ண முடியாது. நெருப்புப் புகை, இருக்கும்
இடத்தை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். மற்றபடியும் வெளியிலிருந்து
அரிசி போன்ற உணவுப் பொருட் களை அடர்ந்த காட்டுக் குள் கொண்டு செல்வதும் இன்றைய நிலையில் அவர்களால் இயலாத காரியம். காட்டு விலங்குகளின் பச்சைக்கறியும், இலைகளும் உண்டுதான் உயிர்வாழ வேண்டும்'' என்றார்.

கிளிநொச்சியில் நான் நின்றிருந்த நாட்களில் சிறப்பு அதிரடிப்படையணியின்
தளபதியொருவர் கூறியது என் நினைவுக்கு வந்தது : ""காட்டுக்குள்
முற்றுகையிடப்பட்ட நிலையில் போராடுவதென்பது அனுபவித்துப் பார்த்தால்
மட்டுமே புரியும். புற்பூண்டுகளை மட்டும் தின்று வாழ்கின்ற நாட்களாய் சில
அமையும். குடிநீர்கூட கிடைக் காது. காட்டுத்தேனை வடித்தெடுத்து ,
மரங்கொத்தி மரத்தில் துளையிடுவது போல் பெரிய மரங்களில் துளையிட்டு, மான்- மிளா போன்ற விலங்குகளை வேட்டையாடி கறித்துண்டு களாக்கி அம்
மரப்பொந்துகளில் தேனையும் கறித்துண்டு களையும் இட்டு நிரப்பி
மூடிவிடுவோம். இரண்டு மாதங்கள் கடந்து எடுத்து உண்டால் தேவாமிர்தம்போல் இருக்கும்.

முக்கியமாக ஒரு நாளைய உடல் சக்தி தேவைக்கு ஓரிரு துண்டுகள்
சாப்பிட்டாலே போதும்'' என்றார்.
காடுசார் சிறப்பு நடவடிக்கைகளுக்கான அத்தளபதி தன் உரையாடலினூடே
குறிப்பிட்ட மறக்க முடியாத வரிகள் இதனை எழுதுகையில் என் கண் முன்
விரிகின்றன: ""காடுகளுக்குள் அப்படிக் கஷ்டப்பட்டு, சகல துன்பங்களையும்
உள்வாங்கி முறுக்கேறும் புலிகள்தான் வெளியே முனைக்கு வரும்போது
சூறாவளியாய் சுழல்வார்கள், வெயிலோடு கரைவார்கள், இரவோடு விழிப்பார்கள், கடற்புயலோடும் களமாடுவார்கள்.'' ஆம் அம்பாறை, மணலாறு, மின்னேரியா காடுகளில் புடமிடப்பட்டு முறுக்கேறும் புலிகள் ஒவ்வொருவரும் ஒருநாள் கேணல்களாய், பிரிகேடியர்களாய் வெளியே வருவார்கள்.
wwww.nakkheeran.in

Read more...

Tuesday, December 8, 2009

கிளக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மக்கள் விடுதலை படை [ People's Liberation Army - PLA ] என்ற பெயரில் கிழக்கில் உருவாகியுள்ள புதிய இயக்கம் ஒன்று சிறிலங்காவில் ஆயுதப் பேராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தி டைம்ஸ் [The Times ] என்ற பிரித்தானிய ஏடு தனது செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
"தமிழர்களின் தனித் தாயமான தமிழீழத்தை அடையும் வரையும் சிறிலங்கா அரச மற்றும் படையினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நான்கு மாதங்களுக்கு முன்னதாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது" எனவும், �இந்தப் போராட்டம் இப்போதைக்கு ஓயாது� எனவும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோணேஸ் தம்மிடம் சொன்னதாக தி டைம்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்பான மறைவிடம் ஒன்றில் கடந்த வாரம் தி டைம்ஸ் ஊடகவியலாளர் கோணேசைச் சந்தித்துப் பேசினாராம்.

�கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் 'மக்கள் விடுதலைப் படை'யை ஒருங்கிணைத்துக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். ஜனநாயக, பொதுவுடமை விடுதலையை வடக்குக் கிழக்குக்கு (தமிழ் ஈழம்) பெற்றுத் தருவதே எமது இலக்கு� என கோணேஸ் விபரித்தாராம்.

தமது இயக்கத்தில் இப்போது 300 பேர் வரையிலான தீவிர செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்ன கோணேஸ், வன்னித் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 280,000 பேரில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் தம்மோடு இணைத்துக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டாராம்.

இந்த இயக்கம் விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என வலியுறுத்திய கோணேஸ், "மக்கள் விடுதலைப் படை"யின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் தமது இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம் என விளக்கினாராம்.

இப்போது தனது 40 வயதுகளில் இருக்கும் கோணேஸ் - தான் 1980-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தாராம். அவரது பயிற்சியாளர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனராம்.

�பாலஸ்தீன விடுதலைப் படை, கியூபா மற்றும் இந்திய மார்க்சிஸ்டுகள் ஆகியோருடன் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களும் எங்களைப் போன்றே தமது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்� எனவும் கோணேஸ் தெரிவித்தாராம்.

�இங்கே எங்களது எதிரி சிறிலங்கா அரசு மட்டும் தான். நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே சண்டையிடுகிறோம். நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு� என்று தமது நோக்கத்தை கோணேஸ் விளக்கினாராம்.

அதே நேரம் - கோணேஸ் என்பவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வருகையில் - அவரது மக்கள் விடுதலைப் படை இயக்கத்தில் சேருவதற்குக் காத்திருப்பதாகச் செசால்லப்பட்ட மூவரைச் சந்திக்கும் வாய்ப்பு "டைம்ஸ்" செய்தியாளருக்குக் கிடைத்ததாம்.

அந்த மூவரும் 15, 16 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக - திடீரெனத் தோன்றியிருக்கும் இந்த "மக்கள் விடுதலைப் படை" பற்றிச் செய்திகள் வெளியாகின்ற போதும் அதன் பின்னணி தொடர்பாக அரசியல் மற்றும் இராணுவ நோக்கர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இது சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினரின் ஒரு புதிய வேலைத் திட்டம் போலத் தோன்றுவதாகச் சில அவதானிகள் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் அகியோரை வைத்து சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் முன்னர் "சித்து விளையாட்டு" ஒன்றை ஆட முற்பட்டனர்.

ஆனால் - அது அம்பலமாகி அவர்களது திட்டங்கள் தோல்வியுற்ற நிலையிலேயே இந்தப் புதிய வேலைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகின்றது.

தம்மிடம் சரணடைந்துள்ள மற்றும் கைதாகியுள்ள விடுதலைப் புலிப் போராளிகளையும், ஏற்கெனவே தம்மோடு இணைந்து செற்படும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் இந்தப் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பயன்படுத்தக்கூடும்.

அதே வேளை - தமது பிடியிலுள்ள 11,000 முன்னாள் போராளிகளினது விடுதலையைப் பின்போடுவதற்கும், அவர்களில் ஒரு சில ஆயிரம் பேர்களைக் "காணாமல் போக"ச் செய்துவிட்டு - அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இந்த ஏற்பாடு சிறிலங்கா அரசுக்குப் பயன்படலாம்.

இது தமிழ் மக்களை ஏமாற்றி - அவர்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதற்கான எற்பாடுகளில் ஒன்று எனவும், அதே வேளையில் - "தமிழ் பயங்கரவாதம்" இன்னும் அழிந்துவிடவில்லை என்ற விதமாகக் கதைகளைப் பரப்பி - எதிர்வரும் தேர்தல் சமயத்தில் சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடும் ஒரு முயற்சி எனவும் அவதானி ஒருவர் கருத்துக் கூறினார்.

அதே வேளையில் - தொடர்ந்தும் அதே பழைய "பயங்கரவாதப் பூச்சாண்டி"யைக் காட்டி, உலகையும் ஏமாற்றி - தம் மீது வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தமக்குச் சாதகமாக வளைத்து எடுக்கும் ஒரு முயற்சியாகவும் சிறிலங்கா அரசு இதனைச் செய்வதாக இன்னொரு அவதானி கருத்துக் கூறினார்.

அதே வேளை - இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது.

வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது - தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு - அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு - ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக - இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் பாவித்து - இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடலாம் என்று கருதவும் இடமுண்டு.

கோணேஸ் என்பவர் சொல்லியிருக்கும் கதைகளையும், பேசியுள்ள விதங்களையும் பார்க்கும் போது - வெளிச் சக்தி ஒன்றின் ஈடுபாடு இதில் இருப்பது போலவே தெளிவாகத் தோன்றுவதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் உண்மையான போராட்ட இயக்கமாக இருந்தால் விரைவில் இவர்கள் நடவடிக்கை மூலம் இது தெளிவாகத் தெரியும். தற்போது உள்ள சூழ் நிலையில் எதையும் எடுத்த எடுப்பில் நாம் நம்பிவிட முடியாது என்பதே யதார்த்தம்.

அப்படியே ஒரு புதிய ராணுவக் கட்டமைப்பு இந்த 7 மாதத்தில் கொமாண்டர் கோணேஸ் உருவாகியிருந்தாலும், தம்மை ஒரு இராணுவக் குழு என இவர்கள் இவ்வளவு வேகமாக ஏன் தம்மை அறிமுகப்படுத்தவேண்டும் ? அவ்வாறு அவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை ஏன் சிங்கள ஊடகங்கள் பெரும்செய்தியாக வெளியிடவேண்டும், குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதின் அர்த்தம் என்ன ? இவற்றை எல்லாம் பொறுத்திருந்து மிக அவதானமாக தமிழ் மக்கள் நிதானத்துடன் பார்க்கவேண்டும் உண்மையாகப் போராடும் அமைப்பை மிகச் சுலபமாக நாம் அடையாளம் காணலாம் என்பதில் ஜயமில்லை. இதனையே நாம் செய்தும் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு உண்மையான போராட்ட அமைப்பு களமிறங்கும். அது விடுதலைப் புலிகளின் அதி நவீன படை அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read more...

Tuesday, December 1, 2009

Talents of LTTE

Read more...

Sunday, November 29, 2009

நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க.. புலிப்பினாமியின் ஒப்பாரி (வாசகர் ஆக்கம்)

கடவுளே! கடவுளே! கார்த்திகையும் வந்து விட்டது, இவன் காலகனிடம் சொல்லி என் கடவுளை திருப்பி அனுப்பி வைக்க மாட்டாயோ? கைகால் எல்லாம் நடுங்குது, கண்ணெல்லாம் சொருகுது, கடைக்கண் பார்வையிலே கதிகலங்கி போனவங்களெல்லாம் காறி துப்புறார் போல் தோணுது, ஐயோ தலைவா! நீ எங்கே ஐயா போய் தொலைஞ்ச? உன்னை கூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது.. ஏன் கூப்பிடணும்? உன்னை நம்பி என் தொழிலும் போச்சு.. வாங்கி வைச்ச என் வீடும் போகப் போகுது. ஐயோ இப்படி என்ன தனியா புலம்ப வைச்சிட்டேயே. ஐயா சாமி தலைவா நீ வருவியா? நீ எங்க வரப்போற அதுதான் மொத்தமா போய் சேர்ந்திட்டியே.. எனி நான் என்ன செய்வேன்? யாரை பார்த்தாலும் எங்கடா உன் தலைவன்? என்று நக்கலாய் கேட்க்கிறால் போல் தோணுது, அட அது கூட பரவாயில்ல தலைவர் உண்மையில பூட்டுக்கிட்டார் என்ற தெரிஞ்சா என் மனுசி கூட என்னை மதிக்காதே. அவள் அப்பவே சொன்னாள் தலைவர் நிலமை அவ்வளவு சரியில்ல முதல்ல மோட்கேட்ஸ் அலுவல மொத்தமா முடிச்சிட சொல்லி, நான் தான் என் தலைவன் என்ன கொக்கா? என சவால் விட்டேன் இப்ப என்னை மொக்கா தவிக்க வைச்சிட்டு போயிட்டேயே…

தமிழ் ஈழத்தை பொங்கலுக்கு தாறன் கொஞ்சம் மிஸ்சாயிட்டா புதுவருடத்திற்குகு தாறன் என்று நீ சொன்னதை நம்பித்தானே புது காரும் வாங்கினன், இனி என்னை நடையாய் நடக்க வைக்கிறதான் உனக்கு சந்தோசம் போல? என்ன செய்யிறது உன்னை வாய் விட்டு கிழிக்கலாம் எண்டா ஒருவேளை நீ உயிரோடு இருந்து தொலைச்சிட போற எண்டு பயமாயும் இருக்கிது. நீயாவது நீச்சல் தடாகத்தில் ஜாலியா நீச்சலடிச்சிட்டு போய் சேர்ந்திட்ட, இங்க நான் பார்த் ரப்ல்ல அரைவாசி உடம்பை நனைச்சதோடு சரி.. அப்படி உனக்கு என்ன கேடு வந்தது?

சண்டை பிடிக்க முடியலை எண்டா கொஞ்சநாள் சும்மா இருந்து தொலைச்சிருக்க வேண்டியது தானே. அதுதான் சரண்டர் அடைய தயார இருந்தனி தானே அதையாவது கொஞ்சம் முன்னாடி செய்திருக்கலாம் தானே! அவ்வளவு ரோசம்? இருந்தாலும் நீ சிங்களவன்கள் மேல இவ்வளவு நம்பிக்கை வைச்சது கொஞ்சம் ஓவரா தெரியல? அட உனக்குதான் என்ன கேடு வந்ததோ தெரியல போய் சேரணும் என்று முடிவாச்சு, என்ன இழவுக்கு உன் மொத்த குடும்பத்தையும் கடைசிவரைக்கும் உன்னோடையே வைச்சிட்டிருந்தே? உன் வாரிசு ஒண்டு ரெண்டு இருந்திருந்தாலே இந்த புலம் பெயர்ந்தகளை பேக்காட்டி கொஞ்ச நாளைக்கு நாங்களாவது சீவியத்தை நகர்த்தியிருக்க மாட்டோமா? அதுகூட உனக்கு பிடிக்கல..!

நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க. உனக்கு ரொம்பத்தான் நல்ல மனசு. இப்ப உனக்கு சந்தோசம் தானே?

பைத்தியகாரன் மாதிரி என்னை கண்டதையெல்லாம் உளறவைச்சிட்டு நீ பாட்டுக்கு சிவனேன்னு போய் சோந்திட்ட. இந்த கார்த்திகையும் வந்து போயிட்டு ஒரு கண்றாவியும் காணல. அட காசை வைச்சிட்டு எவ்வளவு ஆட்டம் போட்ட அதில உன்னை மாதிரி உருவத்தை உல்டா பண்ணி அதை முள்ளிவாய்க்கால குந்த வைச்சிட்டு நீ எஸ்கேப் பண்ணியிருக்க கூடாதா? அல்லது அந்த உல்டா கேசையாவது ஏதாவது பாரினுக்கு பார்சல் பண்ணியிருந்தையாவது அதை வைச்சிண்டு இந்த மாவீரர் நாளை அமர்க்களம் பண்ணியிருக்க மாட்டோமா? அதுசரி நீதான் செத்தும் கெடுக்கிற ஆசாமியாச்சே!

ஆனா ஒண்ணு மட்டும் நீ படு கில்லாடியா செய்திருக்க. அதுதானய்யா இந்த உன்னை நம்பிட்டிருக்க புலன் பெயர்ந்ததுகளை சொல்லுறன். ஆமா அதுகள் உன்னை நம்பினதால புலன் பெயர்ந்ததுகளா? அல்லது புலன் ஒண்டு இல்லாதலால அதுகள் உன்னை நம்பினதுகளா? அப்படி ஒரு வலசுகள் எதை சொன்னாலும் நம்புதுகள். எவ்வளவு கேட்டாலும் தருதுகள். அட நீதான் சீமான் உருவத்தில சீன் காட்டிற என்று சொன்னாலும் விசிலடிக்கிற வெங்கிடாந்திகளா இருக்கிதுகள். அட இதுகள் இருக்கேக்க நீ மகிந்தாவின் காலில விழுந்திருந்தாக்கூட அதுகள் தங்கள் பாட்டிற்க்கு உன் அரசியல் சாணக்கியத்தை புகழ்ந்து தள்ளிக்கொண்டு அள்ளி, அள்ளி தந்து கொண்டிருந்திருக்கும்.

எல்லாத்தையும் கோட்டை விட்டிட்டு போய் கோவணத்தோட படுத்திட்டேயே! அதுசரி மனசுக்குள்ள நீ என்ன பழனி முருகனன்ட நினைப்பா?

எல்லாம் இந்த புலன் பெயர்ந்ததுகளால வந்த வினை. அதுகள் பாட்டிற்க்கு உன்னை கடவுளா கும்பிட நீயும் தான் என்ன பண்ணுவ? முடிஞ்சத பேசி என்ன பிரியோசனம்? இந்த மாவீரர் நாளுக்கு உன்னால சில காரணங்களால வர முடியல (அட காரணங்கள் ஒண்டும் அதுகளுக்கு தேவையில்ல. அப்படி எது சொன்னாலும் என்ன தலைவா இதல்லெல்லாம் போய் எங்ககிட்ட சொல்லணுமா? நாங்க உங்க மேல வைச்சிருக்கிற மரியாதையை கேவலப்படுத்தாதேங்கோ என அழுதாலும் அழுதிடுங்கள்) அடுத்த கார்த்திகைக்கு நிச்சயம் வந்திடுவார் என்று சொல்லி சமாளிச்சிடுறோம். அடுத்த கார்த்திகைக்காவது வருவியா? நீ வராவிட்டாலும் வீட்டு மோட்கேட்ஸை முடிக்க பார்க்கிறன். முடியலையன்னா இன்னொரு கார்த்திகை வராமலா போகும், அதுவரைக்கும் புலம் பெயர்ந்ததுகளின் புலன் சரியாகமல் பார்த்துக் கொண்டிருப்பது அவ்வளவு ஒண்டும் கஸ்டமான காரியமல்ல…..!!

-சந்திரன்

நன்றி அடிரடி இணையம்

Read more...

Thursday, November 26, 2009

எமலோகத்தில் பிரபாகரன் - மனம் திறந்து பேசுகிறார் பிரபாகரன்


எமலோகத்தில் இரண்டாவது தடவையாக பிரபாகரனால் எமலோகத்
தேசிய மாநாடு கூட்டப்பட்டது. இடையிடையே இப்படிச்சந்திப்புக்களை
ஏற்படுத்தாவிட்டால் எமலோகத்தில் உள்ளவர்களுடன் ரச் இல்லாமல் போய் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்
என்று தத்துவாசிரியர் டாக்டர் அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு
ஆலோசனை கூறியதால் பிரபாகரன் இரண்டாவது மாநாட்டையும்
கூட்டினார். எமலோகத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்
பட்டது. எமலோகத்தின் குரல் வானொலி நேரடி ஒலிபரப்புச் செய்தது.
எமலோகத் தேசியத் தொலைக்காட்சியான E.T.V யும் மாநாட்டை
சுடச்சுட நேரடி ஒளிபரப்புச் செய்தது. அது மட்டுமல்லாது சற்றலைற்
தொலைபேசி, சற்றலைற் தொலைநகல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்
டன. பூலோகத்தின் எந்த மூலையிருந்தும் சற்றலைட் தொலைபேசி
மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பிரபாகரன் பதிலளித்தார். கடந்த
மாநாட்டுக்கு வராமலிருந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உட்பட
பிரபாகரனால் எமலோகம் அனுப்பப்பட்டவர்களுக்கு கண்டிப்பான அழைப்
பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு வருகை
தந்திருந்தனர்.


பாலசிங்கம் தனது வழக்கமான ஜொனி வோக்கர் செருமலுடன்
பேச ஆரம்பித்தார்.அன்பார்ந்த எமலோகத் தேசிய மக்களே நீங்கள் இங்கு கூடியிருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. இந்த கார்த்திகை மாதத்தில் மாவீரர்களின் நினைவாக நாங்கள் இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறோம். எமது எமலோகத் தேசியத் தலைவர்
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மனந்திறந்து பதிலளிப்பார்.. தத்துவார்த்தமான கேள்விகளுக்கு நான்தான் பதிலளிப்பேன்.
.


நீண்ட காலமாக தனது உணர்ச்சிகளைப் பூட்டி வைத்திருந்த
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் எழுந்தார்.


நான் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம். நான் உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். நான் உங்களுக்கு எதிராக எந்தக்காலத்திலும்இயங்கியதில்லை. உங்களுக்கு எதிராக எந்தக்கருத்துக்களையும் வெளியிட்டதில்லை. எங்களோடை கதைக்கவெண்டு அறிவு,விசு எண்டு ரெண்டு விசுக்கோத்
துகளை அனுப்பி வச்சனீங்கள். நாங்கள் அவங்களை மதிச்சு எவ்வளவு நம்பிக்
கையோடை எங்கடை செக்கியூறிற்றி காட் கூட அவங்களை செக் பண்ணவோ
என்று கேட்டும் வேண்டாமென்று வீட்டுக்குள்ளை கூப்பிட்டு தேத்தண்ணியும் விசுக்கோத்தும் குடுத்தனாங்கள். ஒரு சொட்டும் விடாமல் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ஒரு துண்டும் விடாமல் விசுக்கோத்தையும் சாப்பிட்டிட்டு இந்த ரெண்டு விசுக்கோத்துகளும் எங்களை எமலோகம் அனுப்பிப் போட்டாங்கள். ஆனால் ஒண்டு சாப்பிட்ட விசுக்கோத்து செமிக்க முதலே என்ரை செக்கியூரிற்றி அந்த ரெண்டு விசுக்கோத்துகளையும் எமலோகம் அனுப்பி விட்டினம்.

இது வரலாற்றிலை நடக்கேல்லை. நீங்கள் துரையப்பாவை எமலோகம் அனுப்பிப்போட்டு களைச்சுப் போய் வர நாங்கள் தேத்தண்ணி தந்தனாங்கள். ஆனால் நீங்கள் எங்களிட்டை தேத்தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு எங்களை எமலோகம் அனுப்பிவிட்டியள். ஆனால் நீங்களும் இவ்வளவு கெதியா எமலோகம் வருவியளெண்டு நாங்கள் நினைக்கேல்லை.இனிக் காணுமண்ணை. அறிவும். விசுவும் உங்களைத்தான் பாத்துக்கொண்டிருக்கிறாங்கள் பேசாமல் இருங்கோ என்று அருகிலிருந்த யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்தின் சேட்டைப் பிடித்து இழுக்கிறார். உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பேச்சை நிறுத்தி விட்டு கதிரையில் அமர்கிறார்.

பாலசிங்கம் ஆத்திரத்துடன் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்க
பிரபாகரன் பதிலளிக்கத் தொடங்குகிறார்.


.அ….அ…அ..அ..அ…..அமுதலிங்கம் அவர்களே அங்கு தவறு நடந்து விட்டது.
நான் உங்களோடையும் யோகேஸ்வரனோடையும் பேசி முடிச்சிட்டு வரச்சொல்லித்தான் அறிவையும், விசுவையும் கொழும்புக்கு அனுப்பினனான். அவங்களுக்கு அது மாறி விளங்கி உங்களோடை பேசிப்போட்டு உங்களை முடிச்சு விட்டிட்டாங்கள் இது வேட் மிஸ்ரேக்காலை நடந்த துன்பியல் சம்பவம். என்ரை தளபதியளுக்கு முடிச்சுப் போட்டு வாங்கோடா எண்டு மட்டும் சொல்லக் கூடாது.

இந்த துன்பியல் சம்பவத்துக்காக நான் மனம் வருந்துகிறன். இனி நீங்கள் எங்களோடை சேர்ந்து இயங்கலாம்.

இங்கு யோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் சிவநேசன், சந்திரநேரு, தங்கத்துரை,
ஆலாலசுந்தரம் தருமலிங்கம், ராஜன் சத்திய மூர்த்தி, சாம் தம்பிமுத்து,
யோகேஸ்வரன், சறோஜினி இன்னும் கனபேர் இருக்கினம். அதாலை நீங்கள்இங்கையும் ஒரு எமலோகத் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி நீங்கள் தலைமை வகிச்சு எங்களோடு சேர்ந்து இயங்கலாம். நீங்கள் எங்கடை சொல்லைக் கேட்டு இயங்கினால் உங்களுக்கு எப்பவும் பிரச்சனையில்லை.

அமிர்தலிங்கம் சிரித்துக் கொண்டே அமர்கிறார்.

கூட்டமைப்பு எம்.பி சிவநேசன் எழுகிறார்.

நான்தான் சிவநேசன். கொழும்பிலையிருந்து வந்து கொண்டிருந்த என்னை
கிளேமோர் வச்சு கொண்டிட்டாங்கள். ஆழ ஊடுருவும் படையணிதான் எங்களைக் கொண்டது எண்டும் சொல்லுறாங்கள். உவ்வளவு சிங்கள இடத்தையெல்லாம் தாண்டி வந்த என்னை மல்லாவியிலை வச்சே கொல்ல வேணும். எமலோகத்திலையும் ஆழ ஊடுருவும் படையணி இல்லையெண்டு எப்பிடி நம்பிறது.

என்னெண்டால் சிவநேசன் அவர்களே கொழும்பிலை வச்சு நாங்கள்
ரவிராஜ்ஜை போட்டுத்தள்ள பழி சிங்களவனிலை விழுந்தது. மல்
லாவியிலை வச்சு உங்களைப் போட்டால் பழி எங்களிலைதான் விழும்
இதுதான் உண்மை.

அப்போது சற்றலைற் பக்ஸ் மெசின் ஒலி எழுப்பிகிறது.. அதில்
வந்த பக்ஸை பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலன் ஆதவன்
பிரபாகரனிடம் கொடுக்கிறார். பிரபாகரன் அதை பாலசிங்கத்திடம்
கொடுக்கிறார்.

என்ன பாலாண்ணை வந்திருக்கு. கே.பி. எதாவது அனுப்பியிருக்கிறானோ.

இல்லைத் தலைவர் சங்கரி கடிதம் அனுப்பியிருக்கிறான்.


உவனுக்கும் வேறை வேலை இல்லை. அப்பிடியோ கிழிச்சு குப்பைக்குள்
ளை போடுங்கோ அண்ணை.

இவ்வளவு ஆக்களுக்கு முன்னாலை நாங்கள் கிழிச்சுப் போட்டால் நாங்கள்
இப்படித்தான் கடிதங்களை வாசிக்காமல் கிழிச்சு போடுற நாங்கள் எண்ட
உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும். எதுக்கும் நான் வாசிக்கிறன்.

பூலோகத்திலையிருந்து ஆனந்தசங்கரி கேள்வி கேட்டு கடிதம்
அனுப்பியிருக்கிறாhர். நான் வாசிக்கிறன்.



அன்புத்தம்பி பிரபாகரனுக்கு

நான் ஆனந்தசங்கரி எழுதிக் கொள்வது


நீர்; வன்னியில் இருந்தபோது எத்தனையோ கடிதம் அனுப்பியிருக்கிறன்.
வாசித்திருப்பீரோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் நான் தொடர்ந்தும் நான்
கடிதம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். தம்பி பாலாவும் உம்முடன் கூட எமலோகத்தில் இருப்பதையிட்டு எனக்கு மிகுந்த ஆறுதல். தம்பி பாலாலண்டனில் நடந்த மாவீரர் விழாவில் உம்முடை மாவீரர் உரைக்கு பொழிப்புரை நடத்திக் கொண்டிருந்தபோது என்னைக் கட்டிப் பிடிச்சு கொஞ்சுவதற்காக தேடியதாக உமது உரையில் கேட்டேன். பாலாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக லண்டனுக்கு வந்தேன். ஆனால் தம்பி பாலா அதற்கு முன்பாகவே எமலோகம் சென்றுவிட்டீர். நான் எனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு செல்ல முடியாமலிருப்பதாகச் சொல்லி கவலைப்பட்டதாகவும் எனக்கு தெரிந்த இரண்டு
கிழவிகள் புளியம் பொக்கணையில் இருப்பதாகவும் அவர்களிடம் போய் நான் அவர்களிடம் போய் உடும்பு இறைச்சிக்கறி சாப்பிடுவதற்காகத்தான் கிளிநொச்சிக்கு போக ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்.

கிளிநொச்சியில் பொட்டம்மான் ஹோட்டல் ஒன்று கட்டி வைத்திருப்பதாகவும்அங்கு போனால் நல்லா சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தீர்.
நான் இறைச்சி சாப்பிடுவதில்லை. நீர் சொன்ன பிறகுதான் எனக்கும் உடும்பு இறைச்சி சாப்பிடவேண்டும் ஆசை வந்து விட்டது. இப்பொழுது என்னால் வன்னிக்கு சுதந்திரமாகப் போய்வரமுடிகிறது. புளியம் பொக்கணைக்குப் போனேன். நீங்கள் சொன்ன அந்தக் கிழவிகளைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. அங்கு உடும்புகளைக் கூட காணவில்லை. முல்லைத்தீவில் போய் தேடினேன். அங்கும் அப்படி உடும்பு இறைச்சி சமைப்பவர்கள் இல்லையாம்.தம்பி பிரபாகரனுக்கு ஆமை இறைச்சி சமைக்கிற கிழவிகள் தான் இருந்ததாக கூறினார்கள். அவர்களும் அங்கு இல்லையாம்.

.இனிஅவர்களைத் தேடுவதானால் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தான் தேடவேண்டும். அங்கு என்னால் செல்ல முடியாது. சிலவேளை அவர்கள்
உங்களுடன் எமலோகத்தில் இருக்கலாம். அப்படி இருந்தால் தம்பி பிரபாகரனுக்கும் உமக்கும் மிக உதவியாக இருக்கும். கிளிநொச்சியில் பொட்டம்மானின் பைவ் ஸ்ரார் ஹொட்டலைத் தேடினேன். அங்கு பொட்டம்மானும் இல்லை,பொட்டம்மானின் ஹொட்டலும் இல்லை. பொட்டம்மான் இப்போது ஹோத்தபாயாவின் செவிண் ஸ்ரார் லக்ஸறி ஹொட்டலில் மூன்று நேரமும் வடிவாகச்சாப்பிடுவதாகச் சொன்னார்கள். பொன்னி மாமியைச் சந்தித்தேன். அவ மிகவும்
ஆரோக்கியமாக இருக்கிறா. நான் கடிதம் எழுதினால் மருமோன் பிரபாகரனை தான் சுகம் விசாரித்ததாகவும் எழுதச் சொன்னா.தன்னோடை கூட வராததாலை தன்னிலை மருமோன் கோபமாக இருப்பதாகவும் சொன்னா.

எது எப்படியிருப்பினும் நீங்கள் எந்த லோகத்தில் இருந்தாலும் நான் உங்களுக்கு தொடர்ந்தும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன். எனக்கு யுனெஸ்கோ பரிசாகத் தந்த காசிலை பிரான்சிலை நிறைய லெட்டர் எழுதும் கொப்பிகள்தான் வாங்கிக் கொண்டு வந்தனான். அது முடியும் வரையும் எல்லாருக்கும் கடிதம் எழுதிக் கொண்டுதான் இருப்பன். உமக்கு உங்கு சற்றலைற் பக்ஸ் இருக்கிறதாலை எனக்கு வசதியாப் போச்சு. தம்பி பாலாவுக்கு எனது
நன்றிகள்
அன்புடன்
ஆனந்தசங்கரி




கடிதத்தை வாசித்த பாலசிங்கம் கடுப்பாகிப் போனார். கடாபியைக் கூப்
பிட்டு பக்ஸ் மெசினை ஓவ் பண்ணி விடச் சொல்லி விட்டார். என்னண்
ணை என்று பிரபாகரன் கேட்க என்னெண்டால் தலைவர் உவங்கள் நாங்
கள் பூலோகத்திலை சொன்னதுகளை ஞாபகமா வச்சுக் கொண்டு எங்
களை பழி வாங்கிறாங்கள்.. அமுதலிங்கத்தோடை பேசி முடிச்சிட்டு வரச்
சொல்லி அறிவையும் விசுவையும் அனுப்பினது மாதிரி உவன் சங்கரிக்
கும் ஆரையாவது அனுப்பியிருக்லாம் விட்டு வச்சிட்டியள் தலைவர்.

நான்தான ஜோசப் பரராஜசிங்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலை இருந்து
உங்களுக்கு சேவகம் செய்தனான். கோயிலுக்குள்ளை இருந்து என்னை
நேரடியா எமலோகம் அனுப்பி விட்டாங்கள். ஆரெண்டு தெரியாது. கனடாவுக்குப்
போனனான் என்ரை பிள்ளையளோடை அங்கை நிண்டிருக்கலாம். உங்களை
நம்பினதாலை வடக்கு கிழக்கு பிரதேசவாதத்துக்கு
நான் பலியாப் போனன். இப்ப எமலோகத்துக்கும் வந்து பயமாக்கிடக்கு.
எமலோகமும் வடக்கு கிழக்கா பிரியுமோ தேசியத் தலைவர் அவர்களே.


அ…அ….அ…அ… என்னெண்டால் பரராஜசிங்கம் அவர்களே
பிரதேசவாதியள் இன்னும் எமலோகம் வரவில்லை. அவர்களை நாங்கள்
எமலோகம் அனுப்ப ட்றை பண்ணி பிழைச்சது எமலோகத்திலை எங்களுக்
கு நல்லதாப் போச்சு. அவர்கள் பூலோகத்திலை இருக்கிறதாலை இப்
போதைக்கு எமலோகம் வடக்கு கிழக்கா பிரியிறதுக்கு வாய்ப்பில்லை.


சந்திரநேரு எழுகின்றார். நான் கூட்டமைப்பு சந்திரநேரு-உங்களை நம்பி
எமலோகம் வந்த ஆக்களிலை நானும் ஒரு ஆள். வன்னியை கட்டுப்பாட்
டுக்குள்ளை வச்சிருந்து பலமாக இருந்து நீங்கள் இப்பிடி தோத்துப்போய்
முள்ளிவாய்க்காலிலை ஆமியிட்டை சரணடைய வேண்டி வந்ததன்
காரணம் என்ன தேசியத் தலைவரே.

என்னெண்டால் சந்திரநேரு அவர்களே நாங்கள் ஒரு தற்காப்பு யுத்தம்
ஒன்றை நடத்தனோமோ தவிர எங்கள் முழுப் பலத்தையும் சேர்த்து
போராடவில்லை. அதற்கு காரணம் நாங்கள் ரணிலுடன் செய்து கொண்ட
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீற விரும்பவில்லை. இறுதிவரை யுத்த
நிறுத்தத்தை கடைப்பிடித்தோம்.
எம்மை நம்பிய வெளிநாடுகளுக்காக நேர்மையையும் பொறுமையையும்
கடைப்பிடித்தோம். மிகுந்த உறுதிப்பற்றுடனும் இருந்தோம். எமது
பொறுமையை மகிந்த அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்
டது இதுதான் உண்மை


தொலைபேசிக்கு பதிலளிக்கும் பொறுப்பு சூனா பானாவிடம் ஒப்படைக்
கப் பட்டிருந்தது.

சற்றலைற் தொலைபேசி அழைக்கிறது. சூனா. பானா பதிலளிக்கிறார்
ஹலோ நீங்கள் ஆ..ஆ..ஆ…ஆர் பேசிறது

நான் சுவிஸ்சிலையிருந்து குலம் பேசிறன்

சொ ..சொ…சொல்லுங்கோ

நாங்கள் இப்படி நடக்குமெண்டு கொஞ்சங்கூட எதிர்பாக்கயில்லை. நீங்கள்
நடேசண்ணை, புலித்தேவன், ஜெயம், இளந்திரையன் எண்டு எல்லாரும் எவ்வளவு கவர்ச்சியா சுவிஸ்சுக்கு வந்து போனனீங்கள். நீங்கள் சுவிஸ்சுக்கு வந்து வந்து போக நாங்கள் எவ்வளவத்தைச் சேர்த்தம். நாங்களும் எடுத்தம் உங்களுக்கும் தந்தம். எப்பிடி இருந்த நாங்கள் இப்பிடியாப் போட்டம்.
ஆனா இப்ப ஒரு பிரச்சனையொண்டு நாங்கள் தலைவரைச் சாகேல்லை
எண்டு சொல்லி வெளிநாட்டிலை இருக்கிற சனத்தை பேக்காட்டி காசு சேர்க்
கலாமெண்டு பாத்தால் நீங்கள் எமலோகத்திலை மாநாட்டை வச்சு தலைவர்
செத்துப் போனாரெண்டு புறூவ் பண்ணி எங்கடை பிழைப்பிலை மண் அள்ளிப்
போடுறியள்.


எ..எ…எ என்னெண்டால் குலம் தலைவர் இப்ப பிஸியாயிருக்கிறார்.
நான் தலைவர் தனியா இருக்கேக்கை மெதுவா அவரிட்டை சொல்
லுறன். சூனா பானா அழைப்பைத் துண்டிக்கிறார்.

மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. சூனா. பானா பதிலளிக்கிறார்.

ஹலோ ஆர் பேசிறது

நான் ஜேர்மனி ஒபர்காவுசனிலையிருந்து வெப்பீலம் வி.சபேசன் கதைக்
கிறன்.


நீங்கள்தான் அந்த விலாங்கு சபேசனோ

இல்லை நான் விசுக்கோத்து சபேசன். விசர்ச் சபேசன் எண்டும் என்
னைக் கூப்பிடுறவையள்.

ஓ சொல்லுங்கோ. எப்பிடி சுகமா இருக்கிறியளே.

இல்லை தமிழ்ச்செல்வன் அண்ணை நாங்களெல்லாம் நல்லா ஏமாந்து
போனம்.

ஏன் ஏமாந்தனீங்கள்.

இல்லை தமிழீழம் மலரும் மலர்ந்தால் தேசியத் தலைவர் தான் ஜனாதிபதியா
வருவார் எண்டு எண்டு எங்கடை வெப்பிலை எழுதினனான். தலைவர் முள்ளி
வாய்க்காலிலை சாகிறத்துக்கு ரண்டு நாளைக்கு முதலும் தலைவர் முற்
றுகையை உடைச்சுக் கொண்டு வெளியேறினார் எண்டு எழுதினனான். ஆனால்
ரெண்டாம் நாள் தலைவர் முள்ளி வாய்க்காலுக்கை முகம் பிளந்து போய்க்
கிடக்கிறார். தலைவர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவார் எண்டு எழுதினனான்.
உங்கடை வான் புலியளைப் பற்றியும் அவர்களுடைய தாக்குதல்களைப்
பற்றியும் எவ்வளவு விலாவாரியாப் பகழ்ந்து எழுதினனான். ஆனால் தலைவர்
ஆமியிட்டை சரணடைஞ்சு உச்சி மண்டையிலை கோடாலிக் கொத்து வாங்கிச்
சாவாரெண்டு நாங்கள் நினைக்கேல்லை. தேசியப் பூ, தேசிய மரம், தேசியப்
பறவை, தேசிய மிருகம் எண்டெல்hம் கனவு கண்டு எப்பிடியெல்லாம் எழுதின
எங்களை தலைவர் இப்பிடி ஏமாத்திப் போட்டார். இப்ப என்னத்தை எழுதிறது
எண்டு தெரியாமல் முழிசிக் கொண்டிருக்கிறம்.

தம்பி நீ ஒரு விசுக்கோத்து எண்டிறது உண்மைதான். நீ எங்களை நம்பி
ஏமாந்ததுக்கு நாங்களே பொறுப்பு. போராட்டத்திலை இதெல்லாம் சகஜமப்
பா.

போனை ஓவ் பண்ணிவிட்டு சூனா பானா சிரிக்கிறார்.

ஈழநாசம்

Read more...

Wednesday, October 7, 2009

மீண்டும் ஒரு விக்கிரமாதித்தன் கதை - வாசித்து மகிழுங்கள்


மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.


மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?” என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!’

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

களத்தில் சார்லஸ் !

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’ என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். “மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!’ என்கிறார்கள் உறுதி குறையாமல்.


நெருடல் இணையம்

Read more...

Saturday, September 19, 2009

முள்ளுகம்பி அறுக்க ஆட்கள் தேவையாம், விரும்புபவர்கள் விண்ணப்பித்துவிட்டு போய் நின்று அறுங்கோ

Read more...

Friday, September 18, 2009

Funny pictures



Read more...

நீங்களும் இப்படி செய்து பார்க்கவும்

Read more...

2011இல் நடைபெறவிருக்கும் உலக கிரிக்கட் கோப்பை போட்டியின் போது ஆசிய அணிவீரர்கள் அணிய வேண்டிய உடை இப்படித்தான் இருக்க வேண்டும்

Read more...

Product Complaint

Read more...

PRABAKARAN FUNNY VIDEO. SINHALA

Read more...

Velupillai Pirapaharan : Music Video

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top