எமலோகத்தில் பிரபாகரன் - மனம் திறந்து பேசுகிறார் பிரபாகரன்
தேசிய மாநாடு கூட்டப்பட்டது. இடையிடையே இப்படிச்சந்திப்புக்களை
ஏற்படுத்தாவிட்டால் எமலோகத்தில் உள்ளவர்களுடன் ரச் இல்லாமல் போய் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்
என்று தத்துவாசிரியர் டாக்டர் அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு
ஆலோசனை கூறியதால் பிரபாகரன் இரண்டாவது மாநாட்டையும்
கூட்டினார். எமலோகத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்
பட்டது. எமலோகத்தின் குரல் வானொலி நேரடி ஒலிபரப்புச் செய்தது.
எமலோகத் தேசியத் தொலைக்காட்சியான E.T.V யும் மாநாட்டை
சுடச்சுட நேரடி ஒளிபரப்புச் செய்தது. அது மட்டுமல்லாது சற்றலைற்
தொலைபேசி, சற்றலைற் தொலைநகல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்
டன. பூலோகத்தின் எந்த மூலையிருந்தும் சற்றலைட் தொலைபேசி
மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பிரபாகரன் பதிலளித்தார். கடந்த
மாநாட்டுக்கு வராமலிருந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உட்பட
பிரபாகரனால் எமலோகம் அனுப்பப்பட்டவர்களுக்கு கண்டிப்பான அழைப்
பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு வருகை
தந்திருந்தனர்.
பாலசிங்கம் தனது வழக்கமான ஜொனி வோக்கர் செருமலுடன்
பேச ஆரம்பித்தார்.அன்பார்ந்த எமலோகத் தேசிய மக்களே நீங்கள் இங்கு கூடியிருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. இந்த கார்த்திகை மாதத்தில் மாவீரர்களின் நினைவாக நாங்கள் இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறோம். எமது எமலோகத் தேசியத் தலைவர்
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மனந்திறந்து பதிலளிப்பார்.. தத்துவார்த்தமான கேள்விகளுக்கு நான்தான் பதிலளிப்பேன்.
.
நீண்ட காலமாக தனது உணர்ச்சிகளைப் பூட்டி வைத்திருந்த
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் எழுந்தார்.
நான் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம். நான் உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். நான் உங்களுக்கு எதிராக எந்தக்காலத்திலும்இயங்கியதில்லை. உங்களுக்கு எதிராக எந்தக்கருத்துக்களையும் வெளியிட்டதில்லை. எங்களோடை கதைக்கவெண்டு அறிவு,விசு எண்டு ரெண்டு விசுக்கோத்
துகளை அனுப்பி வச்சனீங்கள். நாங்கள் அவங்களை மதிச்சு எவ்வளவு நம்பிக்
கையோடை எங்கடை செக்கியூறிற்றி காட் கூட அவங்களை செக் பண்ணவோ
என்று கேட்டும் வேண்டாமென்று வீட்டுக்குள்ளை கூப்பிட்டு தேத்தண்ணியும் விசுக்கோத்தும் குடுத்தனாங்கள். ஒரு சொட்டும் விடாமல் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ஒரு துண்டும் விடாமல் விசுக்கோத்தையும் சாப்பிட்டிட்டு இந்த ரெண்டு விசுக்கோத்துகளும் எங்களை எமலோகம் அனுப்பிப் போட்டாங்கள். ஆனால் ஒண்டு சாப்பிட்ட விசுக்கோத்து செமிக்க முதலே என்ரை செக்கியூரிற்றி அந்த ரெண்டு விசுக்கோத்துகளையும் எமலோகம் அனுப்பி விட்டினம்.
இது வரலாற்றிலை நடக்கேல்லை. நீங்கள் துரையப்பாவை எமலோகம் அனுப்பிப்போட்டு களைச்சுப் போய் வர நாங்கள் தேத்தண்ணி தந்தனாங்கள். ஆனால் நீங்கள் எங்களிட்டை தேத்தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு எங்களை எமலோகம் அனுப்பிவிட்டியள். ஆனால் நீங்களும் இவ்வளவு கெதியா எமலோகம் வருவியளெண்டு நாங்கள் நினைக்கேல்லை.இனிக் காணுமண்ணை. அறிவும். விசுவும் உங்களைத்தான் பாத்துக்கொண்டிருக்கிறாங்கள் பேசாமல் இருங்கோ என்று அருகிலிருந்த யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்தின் சேட்டைப் பிடித்து இழுக்கிறார். உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பேச்சை நிறுத்தி விட்டு கதிரையில் அமர்கிறார்.
பாலசிங்கம் ஆத்திரத்துடன் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்க
பிரபாகரன் பதிலளிக்கத் தொடங்குகிறார்.
.அ….அ…அ..அ..அ…..அமுதலிங்கம் அவர்களே அங்கு தவறு நடந்து விட்டது.
நான் உங்களோடையும் யோகேஸ்வரனோடையும் பேசி முடிச்சிட்டு வரச்சொல்லித்தான் அறிவையும், விசுவையும் கொழும்புக்கு அனுப்பினனான். அவங்களுக்கு அது மாறி விளங்கி உங்களோடை பேசிப்போட்டு உங்களை முடிச்சு விட்டிட்டாங்கள் இது வேட் மிஸ்ரேக்காலை நடந்த துன்பியல் சம்பவம். என்ரை தளபதியளுக்கு முடிச்சுப் போட்டு வாங்கோடா எண்டு மட்டும் சொல்லக் கூடாது.
இந்த துன்பியல் சம்பவத்துக்காக நான் மனம் வருந்துகிறன். இனி நீங்கள் எங்களோடை சேர்ந்து இயங்கலாம்.
இங்கு யோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் சிவநேசன், சந்திரநேரு, தங்கத்துரை,
ஆலாலசுந்தரம் தருமலிங்கம், ராஜன் சத்திய மூர்த்தி, சாம் தம்பிமுத்து,
யோகேஸ்வரன், சறோஜினி இன்னும் கனபேர் இருக்கினம். அதாலை நீங்கள்இங்கையும் ஒரு எமலோகத் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி நீங்கள் தலைமை வகிச்சு எங்களோடு சேர்ந்து இயங்கலாம். நீங்கள் எங்கடை சொல்லைக் கேட்டு இயங்கினால் உங்களுக்கு எப்பவும் பிரச்சனையில்லை.
அமிர்தலிங்கம் சிரித்துக் கொண்டே அமர்கிறார்.
கூட்டமைப்பு எம்.பி சிவநேசன் எழுகிறார்.
நான்தான் சிவநேசன். கொழும்பிலையிருந்து வந்து கொண்டிருந்த என்னை
கிளேமோர் வச்சு கொண்டிட்டாங்கள். ஆழ ஊடுருவும் படையணிதான் எங்களைக் கொண்டது எண்டும் சொல்லுறாங்கள். உவ்வளவு சிங்கள இடத்தையெல்லாம் தாண்டி வந்த என்னை மல்லாவியிலை வச்சே கொல்ல வேணும். எமலோகத்திலையும் ஆழ ஊடுருவும் படையணி இல்லையெண்டு எப்பிடி நம்பிறது.
என்னெண்டால் சிவநேசன் அவர்களே கொழும்பிலை வச்சு நாங்கள்
ரவிராஜ்ஜை போட்டுத்தள்ள பழி சிங்களவனிலை விழுந்தது. மல்
லாவியிலை வச்சு உங்களைப் போட்டால் பழி எங்களிலைதான் விழும்
இதுதான் உண்மை.
அப்போது சற்றலைற் பக்ஸ் மெசின் ஒலி எழுப்பிகிறது.. அதில்
வந்த பக்ஸை பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலன் ஆதவன்
பிரபாகரனிடம் கொடுக்கிறார். பிரபாகரன் அதை பாலசிங்கத்திடம்
கொடுக்கிறார்.
என்ன பாலாண்ணை வந்திருக்கு. கே.பி. எதாவது அனுப்பியிருக்கிறானோ.
இல்லைத் தலைவர் சங்கரி கடிதம் அனுப்பியிருக்கிறான்.
உவனுக்கும் வேறை வேலை இல்லை. அப்பிடியோ கிழிச்சு குப்பைக்குள்
ளை போடுங்கோ அண்ணை.
இவ்வளவு ஆக்களுக்கு முன்னாலை நாங்கள் கிழிச்சுப் போட்டால் நாங்கள்
இப்படித்தான் கடிதங்களை வாசிக்காமல் கிழிச்சு போடுற நாங்கள் எண்ட
உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும். எதுக்கும் நான் வாசிக்கிறன்.
பூலோகத்திலையிருந்து ஆனந்தசங்கரி கேள்வி கேட்டு கடிதம்
அனுப்பியிருக்கிறாhர். நான் வாசிக்கிறன்.
அன்புத்தம்பி பிரபாகரனுக்கு
நான் ஆனந்தசங்கரி எழுதிக் கொள்வது
நீர்; வன்னியில் இருந்தபோது எத்தனையோ கடிதம் அனுப்பியிருக்கிறன்.
வாசித்திருப்பீரோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் நான் தொடர்ந்தும் நான்
கடிதம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். தம்பி பாலாவும் உம்முடன் கூட எமலோகத்தில் இருப்பதையிட்டு எனக்கு மிகுந்த ஆறுதல். தம்பி பாலாலண்டனில் நடந்த மாவீரர் விழாவில் உம்முடை மாவீரர் உரைக்கு பொழிப்புரை நடத்திக் கொண்டிருந்தபோது என்னைக் கட்டிப் பிடிச்சு கொஞ்சுவதற்காக தேடியதாக உமது உரையில் கேட்டேன். பாலாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக லண்டனுக்கு வந்தேன். ஆனால் தம்பி பாலா அதற்கு முன்பாகவே எமலோகம் சென்றுவிட்டீர். நான் எனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு செல்ல முடியாமலிருப்பதாகச் சொல்லி கவலைப்பட்டதாகவும் எனக்கு தெரிந்த இரண்டு
கிழவிகள் புளியம் பொக்கணையில் இருப்பதாகவும் அவர்களிடம் போய் நான் அவர்களிடம் போய் உடும்பு இறைச்சிக்கறி சாப்பிடுவதற்காகத்தான் கிளிநொச்சிக்கு போக ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்.
கிளிநொச்சியில் பொட்டம்மான் ஹோட்டல் ஒன்று கட்டி வைத்திருப்பதாகவும்அங்கு போனால் நல்லா சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தீர்.
நான் இறைச்சி சாப்பிடுவதில்லை. நீர் சொன்ன பிறகுதான் எனக்கும் உடும்பு இறைச்சி சாப்பிடவேண்டும் ஆசை வந்து விட்டது. இப்பொழுது என்னால் வன்னிக்கு சுதந்திரமாகப் போய்வரமுடிகிறது. புளியம் பொக்கணைக்குப் போனேன். நீங்கள் சொன்ன அந்தக் கிழவிகளைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. அங்கு உடும்புகளைக் கூட காணவில்லை. முல்லைத்தீவில் போய் தேடினேன். அங்கும் அப்படி உடும்பு இறைச்சி சமைப்பவர்கள் இல்லையாம்.தம்பி பிரபாகரனுக்கு ஆமை இறைச்சி சமைக்கிற கிழவிகள் தான் இருந்ததாக கூறினார்கள். அவர்களும் அங்கு இல்லையாம்.
.இனிஅவர்களைத் தேடுவதானால் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தான் தேடவேண்டும். அங்கு என்னால் செல்ல முடியாது. சிலவேளை அவர்கள்
உங்களுடன் எமலோகத்தில் இருக்கலாம். அப்படி இருந்தால் தம்பி பிரபாகரனுக்கும் உமக்கும் மிக உதவியாக இருக்கும். கிளிநொச்சியில் பொட்டம்மானின் பைவ் ஸ்ரார் ஹொட்டலைத் தேடினேன். அங்கு பொட்டம்மானும் இல்லை,பொட்டம்மானின் ஹொட்டலும் இல்லை. பொட்டம்மான் இப்போது ஹோத்தபாயாவின் செவிண் ஸ்ரார் லக்ஸறி ஹொட்டலில் மூன்று நேரமும் வடிவாகச்சாப்பிடுவதாகச் சொன்னார்கள். பொன்னி மாமியைச் சந்தித்தேன். அவ மிகவும்
ஆரோக்கியமாக இருக்கிறா. நான் கடிதம் எழுதினால் மருமோன் பிரபாகரனை தான் சுகம் விசாரித்ததாகவும் எழுதச் சொன்னா.தன்னோடை கூட வராததாலை தன்னிலை மருமோன் கோபமாக இருப்பதாகவும் சொன்னா.
எது எப்படியிருப்பினும் நீங்கள் எந்த லோகத்தில் இருந்தாலும் நான் உங்களுக்கு தொடர்ந்தும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன். எனக்கு யுனெஸ்கோ பரிசாகத் தந்த காசிலை பிரான்சிலை நிறைய லெட்டர் எழுதும் கொப்பிகள்தான் வாங்கிக் கொண்டு வந்தனான். அது முடியும் வரையும் எல்லாருக்கும் கடிதம் எழுதிக் கொண்டுதான் இருப்பன். உமக்கு உங்கு சற்றலைற் பக்ஸ் இருக்கிறதாலை எனக்கு வசதியாப் போச்சு. தம்பி பாலாவுக்கு எனது
நன்றிகள்
அன்புடன்
ஆனந்தசங்கரி
கடிதத்தை வாசித்த பாலசிங்கம் கடுப்பாகிப் போனார். கடாபியைக் கூப்
பிட்டு பக்ஸ் மெசினை ஓவ் பண்ணி விடச் சொல்லி விட்டார். என்னண்
ணை என்று பிரபாகரன் கேட்க என்னெண்டால் தலைவர் உவங்கள் நாங்
கள் பூலோகத்திலை சொன்னதுகளை ஞாபகமா வச்சுக் கொண்டு எங்
களை பழி வாங்கிறாங்கள்.. அமுதலிங்கத்தோடை பேசி முடிச்சிட்டு வரச்
சொல்லி அறிவையும் விசுவையும் அனுப்பினது மாதிரி உவன் சங்கரிக்
கும் ஆரையாவது அனுப்பியிருக்லாம் விட்டு வச்சிட்டியள் தலைவர்.
நான்தான ஜோசப் பரராஜசிங்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலை இருந்து
உங்களுக்கு சேவகம் செய்தனான். கோயிலுக்குள்ளை இருந்து என்னை
நேரடியா எமலோகம் அனுப்பி விட்டாங்கள். ஆரெண்டு தெரியாது. கனடாவுக்குப்
போனனான் என்ரை பிள்ளையளோடை அங்கை நிண்டிருக்கலாம். உங்களை
நம்பினதாலை வடக்கு கிழக்கு பிரதேசவாதத்துக்கு
நான் பலியாப் போனன். இப்ப எமலோகத்துக்கும் வந்து பயமாக்கிடக்கு.
எமலோகமும் வடக்கு கிழக்கா பிரியுமோ தேசியத் தலைவர் அவர்களே.
அ…அ….அ…அ… என்னெண்டால் பரராஜசிங்கம் அவர்களே
பிரதேசவாதியள் இன்னும் எமலோகம் வரவில்லை. அவர்களை நாங்கள்
எமலோகம் அனுப்ப ட்றை பண்ணி பிழைச்சது எமலோகத்திலை எங்களுக்
கு நல்லதாப் போச்சு. அவர்கள் பூலோகத்திலை இருக்கிறதாலை இப்
போதைக்கு எமலோகம் வடக்கு கிழக்கா பிரியிறதுக்கு வாய்ப்பில்லை.
சந்திரநேரு எழுகின்றார். நான் கூட்டமைப்பு சந்திரநேரு-உங்களை நம்பி
எமலோகம் வந்த ஆக்களிலை நானும் ஒரு ஆள். வன்னியை கட்டுப்பாட்
டுக்குள்ளை வச்சிருந்து பலமாக இருந்து நீங்கள் இப்பிடி தோத்துப்போய்
முள்ளிவாய்க்காலிலை ஆமியிட்டை சரணடைய வேண்டி வந்ததன்
காரணம் என்ன தேசியத் தலைவரே.
என்னெண்டால் சந்திரநேரு அவர்களே நாங்கள் ஒரு தற்காப்பு யுத்தம்
ஒன்றை நடத்தனோமோ தவிர எங்கள் முழுப் பலத்தையும் சேர்த்து
போராடவில்லை. அதற்கு காரணம் நாங்கள் ரணிலுடன் செய்து கொண்ட
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீற விரும்பவில்லை. இறுதிவரை யுத்த
நிறுத்தத்தை கடைப்பிடித்தோம்.
எம்மை நம்பிய வெளிநாடுகளுக்காக நேர்மையையும் பொறுமையையும்
கடைப்பிடித்தோம். மிகுந்த உறுதிப்பற்றுடனும் இருந்தோம். எமது
பொறுமையை மகிந்த அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்
டது இதுதான் உண்மை
தொலைபேசிக்கு பதிலளிக்கும் பொறுப்பு சூனா பானாவிடம் ஒப்படைக்
கப் பட்டிருந்தது.
சற்றலைற் தொலைபேசி அழைக்கிறது. சூனா. பானா பதிலளிக்கிறார்
ஹலோ நீங்கள் ஆ..ஆ..ஆ…ஆர் பேசிறது
நான் சுவிஸ்சிலையிருந்து குலம் பேசிறன்
சொ ..சொ…சொல்லுங்கோ
நாங்கள் இப்படி நடக்குமெண்டு கொஞ்சங்கூட எதிர்பாக்கயில்லை. நீங்கள்
நடேசண்ணை, புலித்தேவன், ஜெயம், இளந்திரையன் எண்டு எல்லாரும் எவ்வளவு கவர்ச்சியா சுவிஸ்சுக்கு வந்து போனனீங்கள். நீங்கள் சுவிஸ்சுக்கு வந்து வந்து போக நாங்கள் எவ்வளவத்தைச் சேர்த்தம். நாங்களும் எடுத்தம் உங்களுக்கும் தந்தம். எப்பிடி இருந்த நாங்கள் இப்பிடியாப் போட்டம்.
ஆனா இப்ப ஒரு பிரச்சனையொண்டு நாங்கள் தலைவரைச் சாகேல்லை
எண்டு சொல்லி வெளிநாட்டிலை இருக்கிற சனத்தை பேக்காட்டி காசு சேர்க்
கலாமெண்டு பாத்தால் நீங்கள் எமலோகத்திலை மாநாட்டை வச்சு தலைவர்
செத்துப் போனாரெண்டு புறூவ் பண்ணி எங்கடை பிழைப்பிலை மண் அள்ளிப்
போடுறியள்.
எ..எ…எ என்னெண்டால் குலம் தலைவர் இப்ப பிஸியாயிருக்கிறார்.
நான் தலைவர் தனியா இருக்கேக்கை மெதுவா அவரிட்டை சொல்
லுறன். சூனா பானா அழைப்பைத் துண்டிக்கிறார்.
மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. சூனா. பானா பதிலளிக்கிறார்.
ஹலோ ஆர் பேசிறது
நான் ஜேர்மனி ஒபர்காவுசனிலையிருந்து வெப்பீலம் வி.சபேசன் கதைக்
கிறன்.
நீங்கள்தான் அந்த விலாங்கு சபேசனோ
இல்லை நான் விசுக்கோத்து சபேசன். விசர்ச் சபேசன் எண்டும் என்
னைக் கூப்பிடுறவையள்.
ஓ சொல்லுங்கோ. எப்பிடி சுகமா இருக்கிறியளே.
இல்லை தமிழ்ச்செல்வன் அண்ணை நாங்களெல்லாம் நல்லா ஏமாந்து
போனம்.
ஏன் ஏமாந்தனீங்கள்.
இல்லை தமிழீழம் மலரும் மலர்ந்தால் தேசியத் தலைவர் தான் ஜனாதிபதியா
வருவார் எண்டு எண்டு எங்கடை வெப்பிலை எழுதினனான். தலைவர் முள்ளி
வாய்க்காலிலை சாகிறத்துக்கு ரண்டு நாளைக்கு முதலும் தலைவர் முற்
றுகையை உடைச்சுக் கொண்டு வெளியேறினார் எண்டு எழுதினனான். ஆனால்
ரெண்டாம் நாள் தலைவர் முள்ளி வாய்க்காலுக்கை முகம் பிளந்து போய்க்
கிடக்கிறார். தலைவர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவார் எண்டு எழுதினனான்.
உங்கடை வான் புலியளைப் பற்றியும் அவர்களுடைய தாக்குதல்களைப்
பற்றியும் எவ்வளவு விலாவாரியாப் பகழ்ந்து எழுதினனான். ஆனால் தலைவர்
ஆமியிட்டை சரணடைஞ்சு உச்சி மண்டையிலை கோடாலிக் கொத்து வாங்கிச்
சாவாரெண்டு நாங்கள் நினைக்கேல்லை. தேசியப் பூ, தேசிய மரம், தேசியப்
பறவை, தேசிய மிருகம் எண்டெல்hம் கனவு கண்டு எப்பிடியெல்லாம் எழுதின
எங்களை தலைவர் இப்பிடி ஏமாத்திப் போட்டார். இப்ப என்னத்தை எழுதிறது
எண்டு தெரியாமல் முழிசிக் கொண்டிருக்கிறம்.
தம்பி நீ ஒரு விசுக்கோத்து எண்டிறது உண்மைதான். நீ எங்களை நம்பி
ஏமாந்ததுக்கு நாங்களே பொறுப்பு. போராட்டத்திலை இதெல்லாம் சகஜமப்
பா.
போனை ஓவ் பண்ணிவிட்டு சூனா பானா சிரிக்கிறார்.
ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment