இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Friday, January 8, 2010

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்?


மோனாலிஸாவின் மர்மப் புன்னகைக்கான காரணத்தைக் கண்டறிய வரலாற்று அறிஞர்கள் திணறிக் கொண்டிருக்கையில், அப்புன்னகைக்கு மோனாலிஸாவின் தோலின் கீழுள்ள கொழுப்பமிலங்களே காரணம் என இத்தாலிய மருத்துவர் உரிமை கோரியுள்ளார்.

பலேர்மோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான விதோ பிரான்கோவே இவ்வாறு உரிமை கோரியுள்ளார்.

அளவுக்கதிகமான கொலஸ்ட்ரோல் காரணமாக தோலின் கீழ் கொழுப்பமிலங்கள் சேர்ந்ததால் மோனாலிஸாவின் வலது கண்ணின் கீழ் கொழுப்புக் கட்டியொன்று ஏற்பட்டிருப்பதற்கான சான்று அவரது ஓவியத்தில் காணப்படுவதாக விதோ தெரிவித்தார்.

மோனாலிஸாவின் புன்னகையின் மர்மத்துக்கு கலைக்கண்ணோட்டத்தை விட மருத்துவ ஆராய்ச்சியே விடை பகர்வதாக அவர் வலியுறுத்தினார்.

விதோ தனது ஆய்வின் முடிவுகளை புளோரன்ஸில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில் சமர்ப்பித்தபோதே மேற்படி தகவலைத் தெவித்தார்.

பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்ஸியால் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் பெண் ஒருவரை மாதிரியாகப் பயன்படுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டது.

அப் பெண்ணிடமுள்ள மருத்துவக் குறைபாடுகளை ஓவியர் தன்னையறியாமல் ஓவியத்தில் பிரதிபலித்துள்ளதாக விதோ குறிப்பிட்டார்.

Read more...

இரு அணுகுண்டு தாக்குதல்களிலும் உயிர் பிழைத்த ஜப்பானியர் மரணம்


இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் நடத்தப்பட்ட இரு அணு குண்டுத் தாக்குதல்களிலும் உயிர்தப்பிய ஒரேயொருவராக உத்தியோகபூர்வமாக அடையாளங்காணப்பட்ட நபரான துஸுதோமோ யமாகுசி (Tsutomu Yamaguchi), தனது 93 ஆவது வயதில் இரைப்பை புற்றுநோய் காரணமாக மரணமானார்.


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி துஸுதோ· யமாகுசி, ஹிரோஷிமா நகருக்கு வர்த்தக சுற்றுலாவை மேற்கொண்டிருந்த போது முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.


இதன்போது கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந்நகரில் இரவைக் கழித்த அவர், மறுநாள் தனது சொந்த நகரான நாகசாகிக்கு திரும்பினார். நாகசாகி யில் இரு நாட்களில் அணு குண்டுத் தாக்கு தல் நடத்தப்பட்டது.

Read more...

Thursday, January 7, 2010

இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப மலேசியா நடவடிக்கை

மலேசியாவில் புகழிடம் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மீண்டும் அவர்கள் இலங்கைக்கு செல்லத் தயாராக இல்லை என தெரிவிப்பதாக மலேசிய மனித உரிமை கழகத்தின் தலைவர் சட்டத்தரணி க. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாச்சாப் உம்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகள் தற்போது கோலாலம்பூர் சர்வதேச விமானத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு திரும்ப அஞ்சுகின்றனர். நாடு திரும்பினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் எனவும் உள்துறை அமைச்சு அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது என ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Saturday, December 26, 2009

ஈரானில் பின்லேடன் மனைவி, பிள்ளைகள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஈரானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனின் மனைவி மற்றும் அவரின் 5 பிள்ளைகள் (Saad வயது 29, Uthman வயது 25, Fatima வயது 22, Hamza வயது 20, Bakr வயது 15,) கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வது பிள்ளை Iman, வயது 17 என்பவர் ஈரானில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.


பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவியும், சில குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ் தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.


நியூயோர்க் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் அங்கு இருந்து காணாமல் போயிருந்தனர்.


இந்நிலையில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தெஹ்ரானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஈரான் அரசு கைது செய்து, ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து இருப்பதாக ஒசாமாவின் நான்காவது மகன் Omar bin Laden வயது 29, சவுதி பத்திரிகை Asharq Al-Awsat ற்கு தெரிவித்துள்ளார்.

Read more...

நத்தார் ஆராதனையில் போப்பாண்டவரை வீழ்த்திய பெண்


கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திகானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வத்திக்கான் சிட்டி புனித பீட்டர் தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.


நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 82 வயதான அவரை பலத்த பாதுகாப்புடன் சர்ச்பாது காவலர்கள் அழைத்து வந்தனர்.


புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார்.


அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.


இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது.


பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.


ஆனால் போப் ஆண்டவரைபின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த 87 வயதான பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதக்குரு ரோஜர் கிட்கரே கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் காலில் முறிவு ஏற்பட்டது. அவர் ஏற்கனவே உடல் நலக் குறைவுடன் இருந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


இதையடுத்து சிறிது நேரத்தில் பரபரப்பு ஓய்ந்து சகஜ நிலை திரும்பியது. பதட்டம் இல்லாமல் காணப்பட்ட போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் பிறகு சுமார் 2 மணி நேரம் சிறப்பு பிரார்த்தளை நடத்தினார்.


ஆண்டவரை மோதிதள்ளி விட்டதால் மதக்குருமார்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் போப் ஆண்டவர் பெனடிக்ட் எந்தவித பரபரப்பும் இல்லாமல் பிரார்த்தனையை வழக்கம் போல் நடத்தினார்.


போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.


வத்திக்கான் புனித பீட்டர் ஆலய செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லம்பார்டி கூறிகையில், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இதே பெண் தடுப்பை தாண்டி போப் அருகில் வரமுயற்சி செய்தார். பாதுகாவலர்கள் அப்போது தடுத்து விட்டனர். இந்த ஆண்டு அந்த பெண் மீண்டும் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.



Read more...

Monday, December 21, 2009

ஒபாமாவை ஒத்த நபர் (படங்கள்)








Read more...

Sunday, December 20, 2009

43 இலங்கையர்கள் குவைத்திலிருந்து நாடு கடத்தல்

குவைத்தில் வீட்டுப் பணியாளர்களாகத் தொழில்புரியச்சென்று பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுள் 43 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (18) நாடு கடத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுள் 37 பெண்களும், ஆறு ஆண்களும் அட ங்குவர்.

குவைத் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட அவர்கள் குவைத் விமான நிலையத்தின் பின்புற நுழைவாயில் வழியாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட நிலையில் இலங்கைக்குத் திருப்பி அனு ப்பப்பட்ட இவர்கள் அடுத்த ஐந்து வரு டங்களுக்குக் குவைத்துக்குத் தொழில்புரிய செல்ல முடியாதென பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.

குவைத்துக்குப் பணிப் பெண்களாகச் சென்று ஓரிரு மாதங்கள் முதல் ஒன்றரை வருடம் வரை ஒப்பந்த காலத்துக்கு முன் னதாகவே பல்வேறு காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட நூற்றுக் கணக்கான பெண்கள் குவைத்தின் மூன்று சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுரிமையாளரின் கொடுமை தாங்காது வீட்டிலிருந்து தப்பியோடியவர்கள் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவ்வாறு தஞ் சமடைபவர்களை தூதரகத்தினர் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக் கானோர் ஒப்பந்த வீட்டிலிருந்து சென்று வேறு இடங்களில் தொழில்புரியச் சென்றதாலும் கைதாகியுள்னர். ஆண்களுள் சிலர் இவ்வாறு கைதானாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான 43 பேர் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர். இவர்களிடம் பெரிதாகப் பயணப் பொதியோ வேறு பொருள்களோ இருக்கவில்லை. சிலர் உடுத்த உடையுடன் காணப்பட்டனர். பெரும் பாலனவர்கள் மூன்று மாதம் மற்றும் ஒரு வருடத்திற்குள் கைதாகியுள்ளனர். எனினும் அவர்களுக்குரிய சம்பளப் பணமும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தனர். சிலரிடம் ஒரு குவைத் டினார் கூட இல்லையெனத் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், பொலிஸ் காவலில் இருந்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல பயண ஏற்பாடுகளும் பணமும் வழங்கப்படுவதாக குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.

குவைத்தில் சிக்கலுக்குள்ளாகும் இலங் கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் உரிய சேவைகளை வழங்குவதாகத் தூது வர் கே.எஸ்.சீ. திசாநாயக்க தெரிவித்தார். பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தலை யிட்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடு த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(குவைத்திலிருந்து விசு கருணாநிதி)

Thinakaran

Read more...

Friday, December 18, 2009

இரு வயது பாலகனின் உடலில் 40 தையல் ஊசிகள் கண்டுபிடிப்பு


உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தையொன்றின் உடலில் 40க்கு மேற்பட்ட தையல் ஊசிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரேசிலின் வடகிழக்கு பஹியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் மாற்றாந் தந்தையான ரொபேர்டோ கார்லொஸ் மகால்ஹேயஸ், (Roberto Carlos Magalhaes, 30,) மந்திர சக்தி பிரயோக நோக்கத்திற்காக மேற்படி குழந்தையின் உடலில் தையல் ஊசிகளை உட்செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


6 மாத காலத்திற்கு முன் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ள தனது மனைவியை பழிவாங்கும் நோக்கத்திலேயே தனது காதலியின் ஆலோசனையின் பிரகாரம் மனைவிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தையை கொல்ல தீர்மானித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ரொபேர்டோ கார்லொஸ் மகால்ஹேயஸ் கூறினார்.


தனது புதிய கணவனின் கொடூர செயல் குறித்து அறியாத குழந்தையின் தாய், தனது குழந்தை வயிற்று வலியாலும் வாந்தியாலும் அவதிப்படுவதைக் கண்டு அக்குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்.


குழந்தைக்கு உடனடியாக "எக்ஸ்ரே' படம் எடுக்கப்பட்டது. இதன்போது கழுத்து, உடல் பகுதி, கால்கள் என்பவற்றில் ஒரு தொகை தையல் ஊசிகளும் நுரையீரலில் ஒரு தையல் ஊசியும் ஏறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதில் ஒரு சில ஊசிகள் 2 அங்குல நீளமானவையாகும்.


தொடர்ந்து மகால்ஹேயஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சை மூலம் குழந்தையின் உடலிலிருந்து ஊசிகளை அகற்றும் நடவடிக்கை புதன்கிழமை ஆரம்பமானது.


உடலின் சில பகுதிகளிலிருந்து ஊசிகளை அகற்றுவது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் அவற்றை உடனடியாக அகற்ற முடியாதுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

Read more...

Monday, December 14, 2009

இத்தாலி பிரதமர் தாக்கப்பட்டார்


இத்தாலி பிரதமர் மூக்கு உடைந்தது , உதடு கிழிந்து 2 பல் போன நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இத்தாலியில் மிலன் நகரில் அவரது கட்சி சார்பில் நடந்த பேரணியில் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ( வயது 73 ) பேசினார். இதனையடுத்து காரில் ஏறி கிளம்ப சென்று கொண்டிருந்தார். இடையில் அவரது ஆதரவாளர்கள் பலர் ஆட்டோகிராப் வாங்கி கொண்டிருந்தனர்.


இந்நேரத்தில் கையில் ஒரு உலோக சிலையுடன் வந்த நபர் ஒருவர் பிரதமர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் பிரதமரின் உதடு கிழிந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் அவசர, அவசரமாக பாதுகாப்பு படையினர் அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில் பிரதமரின் மூக்கு உடைந்துள்ளது. இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், 2 பல் உடைந்து விட்டது. கிழிந்த உதடு தைக்கப்படும். என்றனர். சம்பவம் நடந்ததும் தப்பி ஓட முயன்ற அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததனர். இவரை விசாரித்ததில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இவரது பெயர் மாசிமோ டார்டாக்டலியோ என தெரிய வந்துள்ளது .

Read more...

Monday, December 7, 2009

தோழியை கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க மாணவிக்கு 26வருட கடூழியச்சிறை


The family of a slain British woman said they were pleased with the murder conviction of Amanda Knox but said there was no sense of celebration. From left, John Kercher, father, Stephanie Kercher, sister, John Kercher, brother, Lyle Kercher, brother, and Arline Kercher, mother, in Perugia, Italy, on Saturday.



தனது அறையில் தங்கியிருந்த பிரித்தானிய மாணவியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க மாணவிக்கு இத்தாலி நீதிமன்றம் 26வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.






 2007ம் ஆண்டு 21வயதான மெரடித் கர்ச்சர் (Meredith Kercher) என்ற மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்ட மாணவியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த அமெரிக்க மாணவி எமென்டா நொக்ஸ் (Amanda Knox வயது22) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இறுதியாக நேற்று முன்தினம் அதிகாலை முடிவடைந்த 13மணிநேர வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பு விதிக்கப்பட்டது. தீர்ப்பினை நீதிபதி வாசிக்கும்போது தண்டனைக்குரிய மாணவி கதறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது அதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக தான் போராடப் போவதாக அந்த மாணவியின் தந்தை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

Read more...

Saturday, December 5, 2009

வகுப்பறைக்கு அரை குறை ஆடையுடன் வந்த மாணவி நீக்கம் : பிரேசிலில் பெரும் சர்ச்சை


பிரேசிலில் வகுப்பறைக்கு அரை குறையாக உடையணிந்து வந்த மாணவி, பல்கலைகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




பிரேசிலின் சா பாவுலோ நகரில் உள்ள, பன்டரினேட் என்ற பல்கலைகழகத்தில் கெய்சி அர்ருதா (20) என்ற மாணவி படித்து வந்தார். புதுமையான உடைகளை அணிவதில் ஆர்வம் உடையஅர்ருதா, சில நேரங்களில் அரைகுறையான உடைகளை அணிந்து வந்தனார். இது குறித்து, பல்கலை நிர்வாகம் அவரை சில முறை எச்சரித்து இருந்தது. ஒரு நாள், இளம் சிவப்பு நிறத்திலான, உயரம் குறைவான உடைகளை வகுப்பறைக்கு அணிந்து வந்தார். இதையடுத்து, பாதுகாவலர்கள் உதவியுடன் அவர், வகுப் பறையை விட்டு வெளியேற்றப் பட்டார்.பின்னர், அவர் பல்கலையில் இருந்து நீக்கப்பட்டார்.


அரை குறை ஆடை அணிந்து வந்ததன் மூலம், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பல்கலையின் பெருமையை சீர்குலைக் கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.


மேலும், பல்கலை சார்பில் வெளியாகும் ஒரு பத்திரிகையில், அர்ருதாவை பற்றிய செய்தியை வெளியிட்டு, மாணவர்கள் வகுப்பறையில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் தற்போது பிரேசிலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ருதா, பல்கலையில் இருந்து நீக்கப் பட்டதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தபட்ட பல்கலைகழகத்துக்கு, பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more...

ஸ்பெயின் நாட்டில் அடைக்கலம் கேட்கும் பின்லேடன் மகன்


சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா தீவரவாத இயக்கத்தின் தலைவருமான ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் (வயது 27) பின்லேடனின் 19 மகன்களில் இவரும் ஒருவர்.
இவர் இங்கிலாந்தை சேர்ந்த ஜானெ பெலிஸ்- பிரவுனே என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இப்பெண் ஏற்கனவே திருமணமாகி 5 குழந்தைகளை பெற்றவர்.


இவர் லண்டனில் தங்கியிருக்க இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது. எனவே இவர் எகிப்தில் இருந்து செஷிரில் உள்ள மோல்தான் கிராமத்துக்கு புறப்பட்டார். இவர் சென்ற விமானம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்பாரஜாஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையே அவர் அங்கு வருவதை அறிந்த ஸ்பெயின் போலீசார் ஒமரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர் ஸ்பெயின் நாட்டில் தங்க அடைக்கலம் கேட்டார். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

பின்னழகை எடுப்பாக்க ஆபரேஷன் செய்யப்போய் உயிரைப்பறிகொடுத்த முன்னாள் அர்ஜென்டினா அழகி (Miss Argentina)


பின்னழகை அழகாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மிஸ் அர்ஜென்டினா அழகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் சோலங்கே மக்னானோ (Solange Magnano). 37 வயதாகும் இவர் 2 குழந்தைகளுக்குத் தாயாவார். கடந்த 1994ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா அழகிப் பட்டம் வென்றவர். இவர் தனது பின்னழகை எடுப்பாக காட்ட அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இது பலமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரலில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் உயிரிழந்து போனார். பின்னழகை எடுப்பாக்க நடந்த அறுவைச் சிகிச்சையின்போது மக்னானோவுக்கு போடப்பட்ட ஊசி மருந்துகள், நேரடியாக அவரது மூளையையும், நுரையீரலையும் தாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் கான்சாலோ கார்ட்ஸ் (Dr. Gonzalo Cortes y Tristan) என்பவர் தனது பின்னழகை சற்றே எடுப்பாக மாற்றிக் கொள்வதற்காக செய்து கொண்ட சிகிச்சையால் தற்போது தனது உயிரை பரிதாபமாக இழந்துள்ளார் மக்னானோ என்றார் வருத்தத்துடன். மக்னானோவின் இறுதிச் சடங்கு அர்ஜென்டினா டிவி யில் ஒளிபரப்பானது.

Read more...

சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்!


கர்ப்பமாக இருக்கும், சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மா லட்சுமி ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொணட்வர் மாடல் பத்மா லட்சுமி. தற்போது இவர் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் மனைவியான இவர் கடந்த 2007ம் ஆண்டோடு ருஷ்டியை விட்டுப் பிரிந்து விட்டார். இந்த நிலையில், பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இந்த போஸ் உள்ளது. இவர் மாடலிங்குக்காக நிர்வாண போஸ் தருவது இது முதல் முறையல்ல என்றாலும கர்ப்பமாக இருக்கும்போதும் மாடலிங் போஸ் தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அந்தப் பத்திரிகையின் உள்பக்கம் இடம் பெற்றுள்ள இன்னொரு புகைப்படத்தில், மைலி சைரஸ் வானிட்டி பேர் பத்திரிகைக்கு கொடுத்த குஜால் போஸை காப்பி அடித்து அதேபோல போஸ் கொடுத்துள்ளார் பத்மா. இதுகுறித்து பத்மா கூறுகையில், நிர்வாணத்தின்போது நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன். உடைகள் அணிந்திருக்கும்போது அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. ஆனால் நிர்வாணம் அப்படியல்ல. நம்மை அப்படியே வெளிக்காட்டும் முக்கிய குறியீடாக நான் கருதுகிறேன்.


நிர்வாணத்தின் மூலம் மட்டுமே நம்மை அப்படியே வெளிக்காட்ட முடியும் என்கிறார். 39 வயதாகும் பத்ம லட்சுமி, தனது தற்போதைய வாழ்க்கை குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்திக் கொண்டு வருகிறேன். என்னை பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.


சரி பத்ம லட்சுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை?. அந்தக் கேள்விக்கு பத்மா லட்சுமியே இன்னும் பதில் அளிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்!..

Read more...

Friday, December 4, 2009

5 ஆண்டுகளின் முன் காணாமல் போன நாய் உரிமையாளருடன் இணைந்தது


டொம் என்பவன் பூந்தோட்டத்திலிருந்து 5 வருடங்களின் முன் காணாமல் போன ஸ்கிரப்பி டூ என்ற நாய் மீண்டும் அதன் உரிமையாளருடன் இணைந்துள்ளது. பல வருடங்களாகத் தேடியலைந்த பின்னர் டொம் அதனை கைவிட்டுவிட்டார்.
இந்நிலையில், டொம்மின் வீட்டிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள போர்ன்மௌத் டோர்செட் என்ற இடத்திலிருந்து நகர சபையதிகாரிகள் இந்நாயை மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட நாயை ஸ்கான் பண்ணிப் பார்த்தபோது அதிலிருந்த தகவல் சேமிப்பு மைக்ரோசிப்பில் டொம்மின் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கத் தகவல்கள் இருந்துள்ளன. அவற்றைக் கொண்டு டொம் மை இனங்கண்டு கொண்ட அதிகாரிகள் ஸ்கிரப்பியை டொம்மிடம் சேர்த்தனர்.

Read more...

ஐரோப்பாவின் செல்வந்தப் பெண்மணியை நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு மகள் கோரிக்கை


தன்னிடம் உள்ள பணத்தை சுய உணர்வின்றி பிறருக்கு வழங்கி வருவதாகத் தெரிவித்த ஐரோப்பாவின் செல்வந்தப் பெண்மணியின் மகள், தாயை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வைத் திருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேயேர்ஸ் என்பவன் லிலியான் (வயது 87) என்ற தாயார் 910 மில்லியன் பவுண்ஸ்சை நண்பர் ஒருவருக்கு பரிசாக வழங்கியுள்ள சம்பவத்தை அடுத்தே அவர் இக்கோரிக்கையை ன்வைத்துள்ளார்.
இவ்வழக்கு பரிஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, லிலியான் தனது நண்பரான மேரி பானியர் (Marie Banier வயது 62) என்ற புகைப்படக்காரற்கு பணப்பரிசை வழங்கியபோது ழுமையான சுயஉணர்வுடன் இருந்ததாகவே தெவித்தார்.
எனினும் ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தாயைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மேயேர்ஸ் இக்கோக் ரிகையை முன்வைத்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெவித்தார்.


ஆனால் தாயின் சொத்துக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதற் காகவே மேயேர்ஸ் இம்யற்சியை மேற்கொள்வதாக லிலியானின் வழக் கறிஞர் வாதாடுகிறார். உலகின் அதி செல்வந்தர்களைப் பட்டியல்படுத்திய போப்ஸ் சஞ்சிகை லிலியானை 21ஆவது இடத்தில் இணைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது சொத்துக்கள் சுமார் 13 பில்லியன் யூரோக்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட எல் ஓரல் என்ற பிரம்மாண்ட சர்வதேச அழகு சாதனக் கம்பனியில் 30% பங்குகளையும் இவர் கொண்டுள்ளார்.


மேலும், பெருந்தொகையான பணத்தை, தனது தாயிடம் இருந்து அவரது வயதான காலத்தில் அபகரித்துள்ளதாக, மேரி பானியர் மீது மேயேர்ஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

Read more...

Wednesday, December 2, 2009

ஷு வீசியவருக்கே ஷு வீச்சு


அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி, பாரீஸ் சென்றபோது அவர் மீது ஷூ வீசப்பட்டது.


நேற்று செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார்.


பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்ட முன்டாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்துதான் நான் புஷ் மீது ஷூ வீசினேன். ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டவே இவ்வாறு செய்தேன். எனது சக நாட்டவர் மீது நான் ஷூ வீசவில்லை.


இந்த ஆக்கிரமிப்பை என்னால் தடுக்க முடியாது என எனக்கு தெரியும். அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போது எனது டெக்னிக்கையும் அவர்கள் களவாடியுள்ளனர் என்றார் சிரித்தபடி. ஜெய்தி மீது ஷூ வீசிய ஈராக்கிய பத்திரிக்கையாளரின் பெயர் ஷெய்ப் அல் கயத் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த புராணத்தைப் பாடிக் கொண்டிருந்ததால் ஜெய்தி மீது எனக்குக் கோபம் வந்தது. இதனால்தான் எனது ஷூவைக் கழற்றி வீசினேன் என்றார்.


அதன் வீடியோ காட்சியை கண்டு மகிழவும்

Read more...

Tuesday, December 1, 2009

Sri Lankan maid and her Indian lover caught conducting immoral activities

KUWAIT CITY: A Sri Lankan maid and her Indian lover were arrested for conducting immoral activities in her sponsor’s house in Firdous on Sunday.
The maid’s sponsor — a Kuwaiti citizen in his forties - discovered the two in a compromising position after he entered the house and heard sounds from her room. He immediately called up Operation Room, who sent security officials to the scene. They apprehended the guilty persons and referred them to the authorities. A case was registered.

Read more...

சுவிட்சர்லாந்தில் மதக் கசப்பு!

சர்வதேச அரங்கில் அரசியல் சாராநிலையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காக்கும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது சுவிட்சர்லாந்து. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. இரு உலகப்போர்களின்போதும் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆதரவு தேடிவந்த அச்சு நாடுகளுடனும் நேச நாடுகளுடனும் வெறுப்பைச் சம்பாதித்தபோதும், நடுநிலைமை தவறவில்லை என சுவிட்சர்லாந்தைப் பற்றி வரலாறு சொல்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைத்த இரண்டாவது நாடு என்கிற பெருமையும் சுவிட்சர்லாந்துக்கு உண்டு. அரசு இயற்றும் சட்டங்களை கருத்தறியும் தேர்தல்கள் மூலமாக மக்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்க முடியும். அந்த அளவுக்கு மேம்பட்ட மக்களாட்சியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நாடாகவும் சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து, தனது அடையாளங்களை இழக்கும் அபாயத்தில் இப்போது சிக்கியிருக்கிறது.


்சுமார் 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். யுகோஸ்லாவியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும் துருக்கியப் பிரதேசங்களில் இருந்தும் இவர்கள் வந்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரையில் பெரிய அளவிலான மத வன்முறைகள் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் இல்லை. வெளிநாடுகளிடம் எப்படி நல்லபேர் எடுத்திருக்கிறதோ, அதே போல் உள்நாட்டிலும் சர்ச்சைகள் எழாவண்ணம் அடுத்தடுத்து வரும் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கு மதங்களுக்கு இடையே கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

சில காலம் முன்பு தனது பணியாளர்கள் தொப்பி வைத்து வருவதற்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் நிர்வாகிகள் தடை விதித்ததையடுத்து சர்ச்சை கிளம்பியது. சிறிய அளவிலான போராட்டத்திலேயே இந்தத் தடை உடைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளில் நீச்சல் பயிற்சியின்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை மாணவிகள் அணிவதற்கும் போராட்டத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழவில்லை. நாட்டின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கசப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கும் முஸ்லிம்களுக்கு சுமார் 150 மசூதிகளே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றிலும் நான்கில் மட்டுமே சிறிய வகையிலான மினார்கள் எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மசூதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொழுகை நடத்துவதற்கான அறைகளும், கட்டங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் மினார்கள் அமைக்க அனுமதி கோரினால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி தருவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மினார்கள் என்பது மதம் பரவுவதற்கான மூலமாகவும் அடையாளமாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம்.

இந்த நிலையில், 2004}ம் ஆண்டில் மசூதி ஒன்றில் மினார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் புதிய வடிவிலான பிரச்னை தலைதூக்கியது. மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே மினார்கள் அமைக்க திட்டமிடப்படுவதாக அந்த மசூதியைச் சுற்றியிருந்தவர்கள் சிலர் கூறியதால் விஷயம் விவகாரமானது. அரசியல் ரீதியாகவும் மத அடிப்படையிலும் மினார் அமைப்பதற்கு நெருக்கடி தரப்பட்டது.ர்ஒருவழியாக குறிப்பிட்ட அந்த மசூதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மினார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால், அதனால் எழுந்த பிரச்னையின் தீவிரம் குறையவேயில்லை. இதுவே தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்தது. மினார்கள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சில மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மினார் கட்ட அனுமதிப்பது ஷரியத் போன்ற பிரத்யேகமான சட்டத்தை பின்பற்றச் சொல்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்பட்டது. கொஞ்ச காலத்தில் மக்களுக்கான போராட்டம் என்பது போன்ற தோற்றம் இதற்கு ஏற்பட்டது.

இதன்பிறகுதான் சுவிட்சர்லாந்து அரசு விழித்துக் கொண்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க முடிவெடுத்தது. வெவ்வேறு தருணங்களில் கூடிய இரு அவைகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மினார்கள் தடை செய்யப்படுவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை காக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.ர்ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து வரும் சவிட்சர்லாந்து மக்கள் கட்சி, மினார்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. அவ்வளவுதான், மினார்கள் பிரச்னை அரசியல் பிரச்னையானது. தெருக்களிலிருந்து இணையம் வரையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. மினார்கள் கட்டுவது உலகப் பிரச்னையானது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை முன்பே கூறியதுபோல், மக்கள்தான் பிரதானம். மற்ற நாடுகளுடனான அரசியல் உறவுகள், பன்னாட்டு நிறுவனங்களுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் மக்கள் கருத்தறியப்படுகிறது. அந்த வகையில் மினார்கள் கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டதால், இதையும் மக்கள் முடிவுக்கே விட்டுவிட சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்தது. அதன்படி, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான உறவில் அதிர்வு ஏற்பட்டது. தடை விதிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துவிட்டால், உலக அரங்கில் சுவிட்சர்லாந்தின் மரியாதை சரிந்துபோகும் என்பதை உணர்ந்த அரசு, மினார்களுக்குத் தடை விதிக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனப் பிரசாரம் செய்தது. கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முந்தைய கணிப்புகளில், மினார் அமைக்கத் தடை கோருவதை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பாளர்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், முடிவுகள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்றன. மினார்கள் கட்டுவ தற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்து 57% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவுக்கு மொத்தமுள்ள 26 பிரதேசங்களில் 22 பிரதேசங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் இந்தத் தடை சட்டமாக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.சுவிட்சர்லாந்தின் அரசியலிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளாலும், மினார் கட்டுவதற்கு விதிக்கப்படும் தடைகளாலும் இஸ்லாம் இன்னும் வீரியமாகப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தினமணி

Read more...

Wednesday, October 28, 2009

"நான் மெல்லியவன் என்பதற்காக கடுமையற்றவன் என எடை போடாதீர்கள்''


"நான் மிகவும் உடல் மெலிந்தவன்தான். ஆனாலும் கடுமையானவன்'' என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெற்றிகரமான ஜனாதிபதியொருவராக திகழ்வதற்கு தேவையான உறுதிப்பாடு தனக்கில்லை என அஞ்சுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


"நான் மிகவும் மெலிந்தவனாக இருக்கிறேன் என்பதற்காக நான் கடுமையற்றவன் என அர்த்தம் கொள்ளக் கூடாது.
நான் எனது திட்டங்களிலிருந்து பின்வாங்கவில்லை. நான் அது தொடர்பில் முன்னநகர்வுகளை மேற்கொண்டு வருகிறேன்'' என ஒபாமா குறிப்பிட்டார்.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top