கனடாவில் பொன்னிமாமி
ஈழநாசம் நிருபர் நாசமுனியின் சந்திப்பும்
பொன்னி மாமியின் விசேட செவ்வியும்
மருமகன் பிரபாகரன் கொல்லப்பட்டபின் கதியற்றுப் போன பொன்னிமாமி கனடாவில் குடியேறியுள்ளார். பலத்த சிரமத்தின் பின்பொன்னி மாமியைச் சந்திக்கும் பொன்னான சாய்ப்புக் கிட்டியது. பொன்னிமாமி சுறுட்டுப் பிரியர் என்று தெரிந்ததால் கியூபாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட சுறுட்டு ஒன்றையும் பொன்னி மாமிக்கு அன்பளிப்பாகக் கொண்டு சென்றேன். பொன்னிமாமி நகைச்சுவையாகவும் சீரியசாகவும் செவ்வியளித்தார்.
வணக்கம் பொன்னி மாமி
வணக்கம் தம்பி வாணை உள்ளுக்கு.
இந்தாங்கோ பொன்னிமாமி என்று நான் கொண்டு சென்ற சுறுட்டை பொன்னி மாமியிடம் கொடுத்தேன்.
தம்பி நான் வை.சி.சி.கு சுறுட்டுத்தான் குடிக்கிறனான்;உதென்ன சுறுட்டுத் தம்பி?
வை.சி.சி.கு சுறுட்டு வைச்சு சிரிச்சு சிரிச்சு குடிக்கிற சுறுட்டு.
இது வை.தி.தி.கு சுருட்டு மாமி.வைச்சு திரும்ப திரும்ப குடிக்கிற சுறுட்டு மாமி. ஒரு சுறுட்டு உங்களுக்கு ஒருமாதத்துக்கு போதும். இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் மாமி
சரி மாமி நீங்கள் எப்பிடி கனடாவுக்கு வந்தனீங்கள். ஏன் வேலுப்பிள்
ளை மாமா வரேல்லை.
தம்பி நான் மடைச்சியில்லை. நான் மருமோனோடை நிண்டு ஒருக்காலும்
போட்டோ எடுக்கேல்லை. மருமோன் எத்தினை தரம் கேட்டவன்! மாமி
வாணை என்னோடை நிண்டு ஒரு போட்டோ எடுக்கவெண்டு. நான் காய்வெட்
டிப் போட்டன். எனக்குத் தெரியும் உவனோடை நிண்டு போட்டோ எடுத்தால்
பின்னாலை இடைஞ்சலெண்டு! உவன் வேலுப்பிள்ளையும் மனிசியும்
மருமோன் பிரபாகரனோடை கூடநிண்டு எடுத்த போட்டோ அல்பத்தை ஆமிக்
காரன் மருமோன்ரை பங்கருக்கை கிடந்து எடுத்துப்போட்டான். வவுனியாக்
காம்பிலை இருந்த வேலுப்பிள்ளையை அந்தப் போட்டோவை வச்சுத்தான்
அடையாளம் பிடிச்சவன். இல்லையெண்டா வேலுப்பிள்ளையும் கனடாவுக்கு
வந்திருப்பான். பேரன் சாள்ஸ் அன்ரனியையும் ஆமிக்காரனுக்கு தெரியாது.
போட்டோவை வச்சுத்தான் அடையாளம் பிடிச்சவன். இந்த மடையன் பங்
கரை விட்டுட்டு ஓடேக்கை அல்பத்தை போட்டுக் கொழுத்திப் போட்டு
வந்திருக்கலாம்;. அந்த அல்பத்தாலைதான் மருமோன்ரை வண்டவாளம்
வெளியிலை தெரிஞ்சது.
அது சரி பொன்னி மாமி நீங்கள் எப்பிடி வவுனியாக் காம்பிலை
இருந்து வெளியிலை வந்தனீங்கள்.
உனக்குச் சொன்னாலென்ன தம்பி மருமோனிட்டை எக்கச்சக்கமான காசு கட்
டுக்கட்டா கிடந்தது. கடைசி நேரத்திலை முள்ளிவாய்க்காலிலை வச்சு எனக்
கும் பேரன் சாள்ஸ் அன்ரனிக்கு ஆயிரம் ரூபாயத் தாளிலை கட்டுக்கட்டாத்
தந்து கெதியாத் தப்பியோடச் சொன்னவன். ஆனா சாள்ஸ் அன்ரனி
காசோடை மாட்டுப்பட்டுச் செத்துப் போனான். நான் காசைச் சீலைக்கை
ஒளிச்சு வச்சிட்டன். என்னைக் கிழவியெண்டு ஆமிக்காரன் செக் பண்ணேல்
லை. அந்தக் காசிலை வவுனியாக் காம்பிலை மற்ற இயக்ககாரன் ஒருத்
தனிட்டை குடுத்து வெளியிலை வந்தனான். பிறகு வள்ளத்திலை இந்தியா
போய் அங்கையிருந்து தலைமாத்தி மருமோள் என்னைக் கனடாவுக்கு கூப்பிட்
டவள். மருமோனோடை நிண்டு நான் போட்டோ எடுத்திருந்தால் நான் இப்ப
உயிரோடை இருந்திருப்பனோ தெரியாது.
அது சரி பொன்னிமாமி உங்கடை மருமகன் பிரபாகரன் முள்ளிவாய்க்
காலிலை சாகவேண்டி வந்ததன் காரணம் என்ன?
தம்பி உனக்குச் சொன்னாலென்ன! என்ரை மருமோன் முள்ளிவாய்க்காலிலை
நந்திக்கடலிலை கவிண்டு போகக் காரணமே அவன்தான். அவன் ஆற்றை
புத்திமதியைக் கேட்டான். இத்தினை ஆயிரம் சனத்தைச் சாக்காட்டி முடமாக்
கி சனத்தின்ரை சொத்துப்பத்தை அழிச்சு தன்ரை குடும்பத்தையும் அழிச்சு
தானும் அழிஞ்சு போனான். கடைசியிலை வேறை வழியில்லாமல் ஆமிக்காரன்
ரை காலிலை விழுந்தவன் ஆமிக்காரன் கிநொச்சியைப் பிடிச்ச உடனையே
சனத்தை வெளியிலை விட்டிட்டு ஆமிக்காரனிட்டை சரணடைஞ்சிருக்கலாம்.
உவ்வளவு சனமும் செத்திருக்காது. உவன்ரை குடு;ம்பமும் அழிஞ்சிருக்காது.
அது சரி மாமி நீங்கள் எப்பவாவது மருமோன் பிரபாகரனுக்குப்
புத்தி சொன்னீர்களா?
உனக்குச் சொன்னாலென்ன தம்பி கொலையள் செய்யிறதை நிப்பாட்டு. மற்ற
இயக்கப் பிள்ளையளை கொல்லாதை எண்டு சொல்லிப்பாத்தன் கேட்டானா?
பிறகு இவன் வடமராட்சியிலை சாகப் போற நேரத்திலை இந்தியப் படை
வந்துது. அவங்கள் வந்து சனங்கள் சந்தோசமாயிருக்கிற நேரத்திலை எனக்
கு வந்து சொன்னான் மாமி இந்தியனாமிக்கு அடிக்கப் போறனெண்டு! டேய்
அவங்களோடை கொழுவாதை சனம் பயமில்லாமல் சந்தோசமாயிருக்
குதுகள். அதைக் கெடுக்காதை! நீ அவங்கடை நாட்டிலையிருந்துதான்
இயக்கம் வளத்தனீ! அவங்கள் இஞ்சையிருந்தால் சிங்கள ஆமி எங்
கடை சனத்திலை கை வைக்க மாட்டான். அவன் பெரிய ஆமி.
அவனோடை கொழுவினியெண்டால் எங்கடை சனத்துக்குத்தான் நட்டம்.
உனக்கும்நட்டம். அதுதான் மாமி எனக்குப் பிரச்சனை. இந்தியனாமி இஞ்சை
நிண்டானெண்டால் சனம் என்னை மறந்திடும். எனக்கு மதிப்பில்லாமல்
போயிடும். சனம் அழிஞ்சால்தான் எனக்கு மதிப்புக் கூடும். இருந்து பார் நான்
என்ன செய்யிறனெண்டு எண்டு சொல்லி இந்தியாவோடை கொழுவி பெரிய
அழிவை உண்டாக்கினான். எங்கடை சனத்துக்கு ஆதரவாக வந்த இந்தியன்
இண்டைக்கு சிங்களவனுக்கு ஆதரவாக நிக்கிறான். இதுதான் மருமோன்
நந்திக்கடலுக்கை கவிண்டுபோகக் காரணம். அண்டைக்கு இவன்
இந்தியாவோடை சேர்ந்து மற்ற இயக்கப் பொடியளோடையும் சமாதானமாப்
போய் தன்னோடை சேத்திருந்தானெண்டால் எங்கடை சனத்தின்ரை
நிலைமை எங்கோ போயிருக்கும். சரி அதுக்குப் பிறகெண்டாலும் இந்தச் சிங்
கள் அரசாங்கம் சமாதான ஒப்பந்தம் செய்து பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்
டது. இவனை ஒரு மனிசன் எண்டு மதிச்சு கிளிநொச்சிக்கு ஹெலி அனுப்பி
இவன் அடிச்ச எயாப்போட்டுக்குள்ளாலையே இவன்ரை ஆக்களை வெளிநாட்
டுக்கு அனுப்பி பேச்சு வார்த்தை நடத்தினவன். அதையெல்லாம் குழப்பி ஆக்
களையும் கொலை செய்து ஆமிக் கொமாண்டருக்கும் குண்டனுப்பினவன்.
மாவிலாத்து அணையைப்பூட்டி சண்டையைத் தொடக்கினவன். கிழக்கு
மாகாணத்தை ஆமிக்காரன் பிடிச்ச உடனையே இவனுக்குத் தெரிஞ்சிருக்க
வேணும்
இவனாலை சிங்கள ஆமிக்காரனை ஒலுக்காலும் வெல்லேலாதெண்டு! இப்ப
என்ன நடந்தது. நந்திக்கடலுக்கை தலை பிளந்து செத்துப் போனான். உதுக்
குததான் சொல்லுறது அடுத்தவன்ரை புத்திமதியையும் கேக்க வேணுமெண்டு!
அதுசரி பொன்னிமாமி கனடாவைப் பற்றி என்ன நினைக்கிறியள்.
கனடா உங்களுக்குப் பிடிச்சிருக்கா?
கனடா எனக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கெல்லையோ எண்டிறது வேறை
விசயம். சுறுட்டுப் பத்தினபடி கடற்கரையிலை காத்தோட்டமா அடிக்குப்
போற சுதந்திரம் இஞ்சை இல்லையெண்டாலும் சனம் வாழ்க்கையை என்
னமாதிரி அனுபவிக்குதுகள்.
நேற்று மருமோள் என்னை நயக்கரா போல்ஸ் காட்டக் கூட்டிக் கொண்டு
போனவள்.
போன கிழமை பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு போனவள்.
எத்தினை நாட்டுச் சனங்கள் எவ்வளவு சந்தோசம். துவக்கோடை ஒரு ஆமிக்
காரனையோ ஒரு இயக்கப் பொடியனையோ காணேல்லை. குழந்தையிலை
இருந்து கிழடு கட்டை வரைக்கும் வாழ்க்கையை அனுபவிக்குதுகள். ரொறன்
ரோவிலை நிலத்துக்கு மேலாலையும் றெயிலோடுது. நிலத்துக்குக்
கீழாலையும் றெயிலோடுது. யாழ்ப்பாணத்திலையும் வன்னியிலையும்
மேலையும் றெயிலில்லை! கீழையும் றெயிலில்லை. மேலையிருந்து தண்
டவாளங்களை மருமோன் பிரபாகரன் புடுங்கி தனக்கு கீழை பங்கர் கட்டிப்
போட்டான். இப்ப இருக்கிற பிள்ளையளுக்கு றெயிலெண்டால் என்னண்டே
தெரியாது. வன்னியிலை இருக்கிற சனம் வாழ்க்கiயிலை என்னத்தை
அனுபவிச்சதுகள் ஒவ்வொரு நாளும் செத்த வீடு கொண்டாடினதும் சுடலை
கட்டி மாவீரர் விழாக் கொண்டாடினதும் தான் மிச்சம். நான் இப்ப கவலைப்
படுகிற விசயம் உந்தச் சிங்கள அரசாங்கம் கோடிக்கணக்கிலை சிலவழிச்சு
ஆயுதம் வாங்கி ஆயிரக்கணக்கிலை ஆமிக்காரங்களையும் சாக்காட்டி, சொத்
தியாக்கி சனங்களையும் சொத்துப் பத்துகளையும் அழிச்சதிலும் பாக்க
மருமோன் பிரபாகனையும். தங்கடை கணக்கிலை வெளிநாடுகளுக்கு அனுப்
பி ஒவ்வொரு நாட்டிலையும் ஒவ்வொரு மாதம் விட்டிருந்தால் மருமோனுக்கு
வாழ்க்கையெண்டால் என்னண்டு விளங்கியிருக்கும். வெளிநாடுகளிலை
கொலையள் செய்யிறதுக்கு வரவேற்பில்லை. மனிச உயிருக்கு எவ்வளவு
மதிப்பு எண்டு விளங்கி அவன் மனம் மாறி சமாதானத்துக்குச் சம்மதிச்சிருப்
பான். நான் சொல்லுறது என்ன பொய்யே? கருணா தாய்லாந்துக்குப்
போனாப் பிறகு மனம் மாறேல்லையே.
அது சரி மாமி பிரபாகரனை உலகத்திலை ஒருத்;தராலையும் அசைக்
க முடியாது எண்டல்லோ சொல்லிக் கொண்டிருந்தவங்கள்.
பிறகெப்படி அசைச்சவங்கள்?
தம்பி உனக்குச் சொன்னாலென்ன! உவன் சில காம்புகள் அடிச்சு வெற்
றியாப் போனது. ஆனையிறவு வெற்றிதானே! அதிலை ஆயிரம் பொடியளுக்
கு மேலை செத்தவங்கள். கருணா பிரிஞ்ச பிறகு இவனுக்கு எல்லாம்
தோல்வியாப்போச்சு. பிறகுதான் எல்லாருக்கும் விளங்கினது மட்டக்கிளப்பு
பொடியளதான் துணிஞ்சு அடிபட்டவங்கள் எண்டு. பிறகு சமாதான காலமும்
வர பெரிய தளபதியள் எல்லாரும் கலியாணம் கட்டி குடும்பம் குழந்தை
குட்டி யெண்டு அகியிட்டாங்கள் . அவங்கள் பிறகு அடிபடுவங்களோ? பிறகு
வன்னியிலை உள்ள குழந்தை குஞ்சுகளை பலாத்காரமாக் கடத்தி
றெயினிங் குடுத்து சண்டை பிடிக்க அனுப்பினால் அவங்கள் சண்டை பிடிப்
பங்களோ? பிறகு ஆமிக்காரன் முழுவீச்சாத்தாக்கினால் இவன் அசையாமல்
என்ன செய்யிறது தம்பி.
அப்ப உங்கடை மருமோள் தன்ரை தம்பிக்கு ஆபத்தில்லை
ஆனால் அவனை உயிரோடை பிடிக்க முடியாது எண்டு கனடாப்
பேப்பருக்கு குடுத்த றிப்போட்டைப்பற்றி என்ன சொல்லிறியள் பொன்
னிமாமி?தம்பி உதைமட்டும் கேளாதை. நான் ஏதும் இசக்கு பிசக்காச் சொன்
னால் அவள் என்னை வீட்டை விட்டுத் துரத்திப் போடுவாள்
சரி பொன்னி மாமி உங்களோடை கதைச்சது நல்ல சந்தோசம்.நீங்கள் ரயேட்டா இருக்கிறியள். பிரபாகரன் மருமோனாய் இருந்தும் ஞாயமாக் கதைக்கிறியள். உங்கடை நேர்மைக்குப் பாராட்டுக்கள்.இன்னொருதடவை உங்களை சந்திச்சுக் கதைக்கிறன். நீங்கள்
இப்ப றெஸ்ற் எடுங்கோ. நானும் விலக பொன்னி மாமி ரி.வி றிமோட்
டைக் கையிலெடுக்கிறா!
ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment