இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label LTTE. Show all posts
Showing posts with label LTTE. Show all posts

Monday, June 7, 2010

ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.

புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாகின்றது.
இத்தொலைக்காட்சி ரிவி 24 எனும் பெயரில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக தெரியவருகின்றது. இத்தொலைக்காட்சி உருவாவது ஜிரிவி க்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு சொந்தமான ஜிரிவி தமது வியாபாரத்தினை விஸ்தரித்துக் கொள்வதற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொண்டதுடன் புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்திருந்ததுடன் தொலைக்காட்சியின் வருமானத்தின் பகுதி புலிகளியக்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் ஒர் தோற்றத்தை காட்டி வந்தனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்துகொண்ட கே.பி சார்பானதோர் நிலைப்பாட்டை எடுத்திருந்த ஜிரிவி யுடன் கே.பி யுடன் பதவிப்போட்டியில் நிற்கும் நெடியவன் முரண்பட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜிரிவி யை கைப்பற்றுவதற்கு பல குறுக்குவழிகளைத் தேடிய நெடியவன் அவை கைகூடாத நிவையில் தற்போது புதியதோர் ரிவி யை தொடங்குகின்றார்.

இத்தொலைக்காட்சியின் உருவாக்கத்தை சகிக்கமுடியாத ஜிரிவி யினர் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தின் இறுதி யுத்தத்தில் நடந்தவை, ராம் எங்கே? கே.பி சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? புலிகளின் பணம் எங்கே சென்றது என்ற விடயங்கை தொடர்சியாக அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

http://www.ilankainet.com/

Read more...

Sunday, June 6, 2010

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்

பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு

(அனந்த் பாலகிட்ணர்)


ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இரு குழுவினருக் குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிbழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Thinakaran

Read more...

Friday, May 28, 2010

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?

அருட் தந்தை கஸ்பர் ராஜ்

Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010


Read more...

Thursday, May 27, 2010

சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத் திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இன்னர் சிற்றிப் பிரஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது, சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக ளைப் பகிர்ந்து கொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாக இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

Read more...

மகத்தான மனிதாபிமானப் பணி

சரணடைந்த புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது பற்றியும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண் புலி உறு ப்பினர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டது பற்றியும் நேற்றுக் குறிப் பிட்டிருந்தோம். இந்தக் கையளிப்பைத் தொடர்ந்து 198 முன்னாள் போராளிகள் நேற்று முன்தினம் பெற்றோரி டம் கையளிக்கப்பட்டனர்.இவர்கள் எல்லோரும் பதினெ ட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் சிறுமியரும் என் பது குறிப்பிடத்தக்கது.

புலித் தலைமையினால் தமது படையணியில் சேர்த்துக்கொ ள்ளப்பட்ட சிறுவர், சிறுமியரில் 294 பேர் அரசாங்கத் திடம் சரணடைந்தனர். இவர்களுள் 96 பேர் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட் டனர். மற்றைய 198 பேரும் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் அனுசரணையுடன் இரத்மலானை இந்துக் கல் லூரியில் கல்வி கற்று வந்தனர். தங்கள் பிள்ளைகளைத் தங்கள் சொந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் சேர் த்துப் படிப்பிப்பதற்குப் பெற்றோர் விரும்பியதால் இவ ர்கள் இப்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ள னர். எதிர்காலத்திலும் இவர்களின் கல்விச் செயற்பாட்டு க்கான சகல வசதிகளையும் செய்து தருவதாக அரசாங் கம் உறுதியளித்திருக்கின்றது. அரசாங்கத்திடம் சரணடை ந்த சிறு வயதினர் அனைவரும் இப்போது பெற்றோரி டம் கையளிக்கப்பட்டுவிட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து அவர்களைப் பெற்றோரிடம் கையளிப்பது அந்நியப்ப ட்ட நிலையில் நின்று பார்ப்பவர்களுக்குப் பெரிய விட யமாகத் தோன்றாமலிருக்கலாம். பெற்றோரைப் பொறுத்த வரையில் இது சாதாரண விடயமல்ல. இந்தப் பிள்ளை கள் பிழையாக வழிநடத்தப்பட்டுப் புலிகளுடன் சேர்ந்தி ருக்கலாம். அல்லது பலவந்தமாகவும் சேர்க்கப்பட்டிருக்க லாம். எவ்வாறாயினும், தங்கள் பிள்ளை ‘இயக்கத்தில்’ சேர்ந்துவிட்டது என்பதை அறிந்ததும் ஒவ்வொரு தாயும் தந்தையும் எவ்வளவு துடித்திருப்பார்கள் என் பதை விபரிக்க வார்த்தை கிடையாது. இந்த மனத்துடிப்பு தங்கள் பிள்ளையைக் கையேற்ற நேரம்வரை நிச்சயம் அவர்களிடம் இருந்திருக்கும். தாங்கள் தொலைத்துவி ட்ட பிள்ளை மீண்டும் கிடைத்தபோது அவர்கள் அடை ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் மனிதாபிமான அணுகுமுறை. அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட அனைவ ரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள். அவர் கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவோ பலவந்தமா கச் சேர்க்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும் அரசுக்கு எதிரான யுத்தத்தில் பங்காளிகள். ஆனால் அரசாங்கம் இவர்களை எதிரிகளாகக் கருதவில்லை. தவறான பாதை யில் வழிநடத்தப்பட்டவர்கள் எனக் கருதிப் புனர்வாழ்வு அளித்தது. இளம் பராயத்தினர் கல்வியைத் தொடர்வதற் குத் தேவையான எல்லா வசதிகளையும் வழங்கியது. மற்றவர்களுக்கு அவர்களின் திறமைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஏதோவொரு விதத்தில் மறைந்து போயிருக்கக் கூடியவர் களுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்திருக்கின்றது. சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய வகையில் அவர் களை அரசாங்கம் தயார்படுத்தியிருக்கின்றது. அரசாங் கம் மேற்கொண்ட இந்த மனிதாபிமானப் பணி மகத்தா னது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடி யாது.

தமிழ் மக்களின் தனிப் பிரதிநிதிகளென அடிக்கடி உரிமை கோருபவர்களுக்கு இப்பணியின் முக்கியத்துவம் புரியா மலிருப்பது அதிசயமாக உள்ளது. அரசாங்கத்தை விமர் சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதே நேர த்தில் நல்லதைப் பாராட்டும் பண்பும் வேண்டும்.

Thinakaran

Read more...

Saturday, February 13, 2010

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டெழும் சாத்தியமிருக்கிறது

“விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை "Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka" என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது. ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது.

போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது,

“உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன.

விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை“ எனப் பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,

பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.

“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள். பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள்.

இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.

பேராசிரியர் அடேல் பார்க்கர் -தமிழாக்கம்: கோபி

Read more...

Friday, January 29, 2010

கஸ்ரோவின் இளவரசர்களை நம்பி மோசம் போன மலேசிய பொறுப்பாளர் ராஜன்

விடுதலைப்புலிகளின் மலேசிய பொறுப்பாளரான‌ “மலேசியா ராஜன்” கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து முதலில் கைதுசெய்யப்பட்டார். தனது குடும்பம் சகிதமாக பிலிப்பைன்ஸ்சில் தலைமறைவாக இருந்துவிட்டு மலேசிய திரும்புகையில் மலேசிய புலனாய்வுப்பிரிவினரிடம் கைதானார்.கேபியின் கைதை தொடர்ந்து மலேசியாவை விட்டு தப்பியோடிய ராஜன் நீண்ட காலமாக மலேசிய புலனாய்வுப்பிரிவின் வலைவிரிப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42)அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த மலேசிய‌ நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கடந்த ஒருமாதகாலமாக மலேசியாவில் விசாரணைக்குட்படுத்திய மலேசிய புலனாய்வுப்பிரிவினர் ராஜனுடன் இணைந்து செயற்படும் மலேசிய குடியுரிமை கொண்ட சிலரையும் கைதுசெய்துள்ளதாக மறுஆய்வுக்கு தெரியவருகிறது. மலேசியாவை மையங்கொண்டு செயற்படும் புலிகளை கட்டுப்படுத்தும் மலேசிய புலனாய்வுப்பிரிவினருக்கு சிறிலங்காவின் நாடுகடந்த புலனாய்வுத்துறையும் கூட்டாக சேர்ந்து இந்த நடவடிக்கையில் கடந்த பல மாதங்களாக ஈடுப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையின் நிமித்தம் அனைத்துலக செயற்பாட்டில் இருந்த வன்னியில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகளும் மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக நம்பகமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மலேசியாவில் தனது விசாரணையை முடித்துக்கொண்ட மலேசிய புலனாய்வுப்பிரிவு நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ராஜனை ஒப்படைத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் -

அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்..

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வுபிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டுவந்தார் என்றும் அவர் கூறினார்.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்க பங்கம் விளைவிக்கக்கூடி பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.

மே18 க்கு பின்னர் அனைத்துலக கஸ்ரோவின் இளவரசர்களின் தொடர்பில் இருந்து வந்த ராஜனின் கைது கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் நிகழ்ந்தது.எனினும் அது பற்றிய எந்த கரிசனையின்றி மௌனம் காத்து வந்த கஸ்ரோவின் இளவரசர்கள் இந்த கைதின் பின்னணியில் இருப்பதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.


மறு ஆய்வு

Read more...

புதிய கிளிநொச்சி

கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Read more...

Thursday, January 28, 2010

பிரபாகரன் தம்பி கண்ணீர் பேட்டி

இலங்கையில் அதிபர் தேர்தல் களைகட்டியுள்ளது.​ அதிபராக இருக்கும் ராஜபக்úஸயும்,​​ அவரை எதிர்க்கும் முன்னால் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவும் கடும் போட்டியில் இருக்கிறார்கள்.​ இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணம் அடைந்ததாத திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.​ அவர் நீண்ட நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார் என்றும்,​​ அதனால் இறந்துவிட்டார் என்றும் இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.​ "அப்படிப்பட்ட மோசமான உடல்நிலையிலும் கூட ஏன் இலங்கை அரசு வேலுப்பிள்ளையை ராணுவ முகாமில் அடைத்து வைத்தது?​ மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு ஏன் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கவில்லை?' என்ற கேள்வி எழுகிறது.​ அது மட்டுமின்றி வேலுப்பிள்ளை தமிழகம் திரும்ப ஆர்வமாக இருந்த நேரத்தில் இப்படியொரு செய்தி வந்தது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

Read more...

Wednesday, January 27, 2010

தமிழ்நேஷன் இணையத்தளம் மூடப்பட்டுவிட்டது


தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது.


நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது.


விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூட, தொடர்ந்து செயல்பட்டு வந்தது.


விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிர, தமிழரின் தொன்மைச் சிறப்பு, இலக்கிய வரலாறு, தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


முடிவுரையாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்...' என்ற கனியன் பூங்குன்றனார் கவிதையைச் சொல்லி தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது தமிழ்நேஷன்.

Read more...

புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொன்றவர் பா.சிதம்பரம் தான்

டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி 2009, மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொல்ல வைத்தவர்கள், சந்தேகமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முத்த அமைச்சரும் தமிழருமான பா.சிதம்பரம் தான்.

பா.சிதம்பரம் ஈழத்தமிழருக்காக அல்லது காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்காக நடத்திய ஒரே கூட்டம் 15-02-2009 சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் தான். அன்று அவர் பேசியதை திரும்பவும் கேட்டால் - http://www.youtube.com/watch?v=V1NgzyF1pgE தெளிவாய் புரியும், யார் டெல்லியில் இருந்த காங்கிரஸ் பெரியவர் என்று. இன்னும் தமிழன் ஏறமாறக்கூடாது.

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்ல

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.
அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonli...icle6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள்.

காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!

- இறைவன்

Tamilwin

Read more...

Monday, January 25, 2010

ஜபிசி வானொலியை மையங்கொண்டு இந்தியாவிலிருந்து இயங்கும் சட்னி EX-PRESS

விரைவில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் ஏற்பாட்டில் மற்றுமொரு புலிகளின் அதிகாரபூர்வ ஊடகம்




மற்றுமொரு அதிகாரபூர்வ ஊடகம்!!

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஜபிசிக்குள் ஊடுருவிக்கொண்ட இந்திய உளவுத்துறையின் கையாளான குண்டப்பாவின் நெறிப்படுத்தலில் இந்தியாவிலிருந்து ச.தமிழ்மாறன் என்று யூனியர் விகடனுக்கு செவ்வி கொடுத்த சுடர் என அறியப்படுவரின் ஏமாற்றுதலில் உருவாகிய கருவே புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகத்துறை.

தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூர்வ தளமென கூறிக்கொண்ட மக்குகள் புலிகளின் பழைய இலட்சினையை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்கள். இந்த பரதேசி மக்குகளுக்கு புலிகளின் இலட்சினை மாற்றியது கூட தெரிந்திருக்கவில்லை. அதுக்கும் மேலாக தங்களது அறிக்கையில் தலைமை செயலகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களின் தலைமை செயலகம் என்பது யார்?




நடைமுறையில் உள்ள சின்னம்



காலாவதியான சின்னம்



குண்டப்பா


1.வரதராஜ்-அல்லது-குண்டப்பா-அல்லது-மண்டை கண்ணன் வல்வெட்டித்துறை

மே 18க்கு முன்னர் கஸ்ரோவால் கொடுக்கப்பட்ட 50ஆயிரம் பவுண்ஸ்க்கு இன்றுவரை கணக்கில்லை. வெறும் 5000ஆயிரம் பவுன்ஸ்க்கு மட்டும் வாசுகி வரதராஜ் என்ற தனது மனைவியின் பெயரிலான வெற்றுகாசோலை சுவிஸ் பாண்டியன்( நாதன்) இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. மணி வல்வெட்டித்துறை இவர் தமிழீழ விடுதலை புலிகளில் அங்கத்தவராக இருந்தது கூட இல்லை. இவர் சமாதான காலத்தில் நாட்டுக்கு போய் கஸ்ரோவையும் பிரபாகரனையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து திரும்பியவர்.

3.குகதாஸ் வல்வெட்டித்துறை இவர் ஜபிசியில் கணக்காளராக குண்டப்பரால் உள் நுளைக்கப்பட்டவர்.ஜபிசியை கவனிக்க‌ சுவிசிலிருந்து மூவேந்தர் பாண்டியன் லண்டன் வரும் வேளைகளில் குகதாஸ் தனது காரில் ஏற்றி இறக்குவாராம். மற்றும்படி இவருக்கும் கணக்கியலுக்கும் வெகுதூரமாம்.

லண்டனில் இயங்கிய NSR என்ற தனியார் இறக்குமதி நிறுவன உரிமையாளரின் மகளை திருமணம் செய்தவர். இந்த நிறுவனத்தில் இவரை வேலைக்கு அமர்த்திய இடத்தில் அங்கு பணமோசடியில் ஈடுபட்டதால் இவரது மைத்துனர்களால் துரத்தப்பட்டவர் என அறியப்படுகிறது.

கடந்த வருடம் யூன் மாதத்துக்கு பின்னர் ஜபிசி வானொலிக்கு என கூறி 10ஆயிரம் பவுண்ஸ் சேகரித்துள்ளதாகவும் அந்த பணத்துக்கு என்ன நடந்தது என ஜபிசி நிறுவனத்தில் கணக்கில்லை என தெரியவருகிறது.

4. நிருபன் வடமராட்சி நெல்லியடி

5.சின்ன ரஞ்சித் இவர் தான் ஜபிசியின் பிரதான கட்டுப்பாட்டாளர்

6.ரங்கன் அல்லது குபேரன் முன்னாள் போராளி நல்லூர் இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தில் கைதாகி விடுதலையாகி நீண்டகாலம் சிறையிருந்து விடுதலையாகி லண்டன் வந்தவர்.

இவர்களை இந்தியாவில் இருந்து இயக்குபவர் சுடர் என அறியப்படுகிறது. இவரே தமிழ்மாறன் என்ற பெயரில் அண்மையில் தலைவர் இருப்பதாக யூனியர் விகடனுக்கு செவ்விகொடுத்துள்ளார் என அறியப்படுகிறது.

அ. மறுஆய்வுக்கு கிடைத்த நம்பகத்தகவல்படி சிவாஜிலிங்கத்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்ததே மேலே உள்ள பரதேசி புலிகள் என அறியப்படுகிறது. இப்படியிருக்க இந்த ஏமாற்று புலிகள் 26ம் திகதி நடக்க இருக்கும் தேர்தலை துக்கதினமாக கொண்டாடும்படி மறைமுகமாக பகிஸ்கரிக்கும்படி கூறி மக்களை குழப்பும் இவர்களின் வேடம் விரைவாகவே கலையப்போகிறது.

ஆ. இந்த ஏமாற்றுக்கூட்டம் சிறிலங்காவில் புலிகளின் அரசியல் கட்சியாக பதியப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணியை தூசிதட்டி மீண்டும் இயக்குவதற்கு முயல்வதாக அறியப்படுகிறது. விடுதலை புலிகள் மக்கள் முன்னணியின் தலைவரான கோ.மகேந்திரராஜா என்ற மாத்தையா உயிருடன் இல்லாத சூழலில் இதன் அதிகாரம் பொருந்திய பொதுச்செயலாளரான யோகரட்ணம் யோகியை தடுப்புகாவலில் இருந்து விடுவித்து யோகியை முன் நிறுத்த அரசாங்க தரப்புடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்த இரகசிய பேரத்தில் அவுஸ்ரேலியாவிலிருந்து யோகியின் நண்பரும் உறவினருமான மெல்பேர்ண் சபேசன் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நோக்கத்துக்காக சபேசன் இந்தியாவில் முகாமிட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

இ. அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி என்ற பெயரில் தேர்தல் களத்தில் குதித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை முற்றாக இல்லாது ஒழிப்பதும் இந்த நீண்ட சதிதிட்டத்தின் அங்கம் என கூறப்படுகின்றது. தற்போது இந்தியாவுக்கு புலிகள் என்ற பெயரிலான ஒரு அமைப்பின் இருப்பு சிறிலங்காவின் மீதான தலையீட்டுக்கு தேவையானதாக உள்ளதாக கருதப்படுகின்றது. இந்த பின்னணியில் தமிழ் தேசிய மக்குகளை சுற்றி பல்வேறு வடிவங்களில் சதிவலை பின்னல்கள் பிணைந்துபோயுள்ளது.

மறுஆய்வின் குறிப்பு:-

2009 யூலை மாத இறுதிப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கேபி அவர்கள் வழங்கிய செவ்வியே இன்று வரை புலிகளின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ உலகறிந்த புலி உறுப்பினரின் இறுதி செவ்வியாகும். ஆகஸ்ட் 5இல் கேபி கைதான பின்னர் தலைமை செயலகம், புலனாய்வுத்துறை எனக்கூறிக்கொண்டு ஒரு அறிக்கை என வெறும் இணையத்தள மின்னஞ்சல் அறிக்கைகளே வெளிவருகின்றன.

இந்த இடைவெளியை பாவித்து இதுபோன்ற இணையத்தள கீபோட் புலிகள் பலர் புதிது புதிதாக கிளம்பியுள்ளனர். இங்கு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உண்மையான இயங்கு சக்திகள் தங்களை சரியான வகையில் வெளிப்படுத்தி ஒரு ஊடக பேச்சாளரை நியமித்து சரியான வகையில் மக்களை வழிப்படுத்தாத வரைக்கும் இவ்வாறான போலிகள் ஒரு பெரும் இயக்கத்தை உரிமைகோருவதற்கு இடமளிக்கவே செய்யும்.

இங்கு மறுஆய்வு கூட தம்மை வெளிப்படுத்தாமல் கீபோர்ட் இணையத்தளம் நடத்துவதாகவே பலர் எமக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மறுஆய்வு தம்மை அடையாளப்படுத்துவதற்கான நேரம் வரும்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறோம். அப்போது மறுஆய்வு தங்களையும் அம்பலப்படுத்தும் . ஆக மறுஆய்வை யார் இயக்குவது என்பதை ஆராய்வதை விட்டு விடுதலை புலிகள் இயக்கத்தை சீரமைக்க விரைவாக முன்வாருங்கள். இல்லையேல் மறுஆய்வு பாண்டவர் யுத்தத்தை தொடர்ந்து கீபோர்ட்டில் நடாத்தும், துச்சாதனன்கள் துகிலுரியப்படுவார்கள்………

நன்றி:மறுஆய்வு

Read more...

Friday, January 22, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்


புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு

கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள்.''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும்.

இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது...'' எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.

அவர்களின் துணையுடனேயே நாம் 'ச.தமிழ்மாற'னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?''

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''

''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''

''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''

''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''

''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''

''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''

''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''

''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''

''இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''

ஏன் இந்த இணைய அறிவிப்பு?

இலங்கைஅதிபர் தேர்தலில் ஃபொன்சேகா வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு தெரிவதாக உலகெங்கிலும் உள்ள கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ராஜபக்ஷே புதியதொரு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்! போரின் வெற்றிதான் பிரதான பிரசாரப் பொருளாக இருப்பதால், போரின் அச்சத்தை மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கிறாராம் அவர்.

இதற்கென்றே சில சிங்களப் பகுதிகளைக் குறிவைத்து புலிகளின் பெயரால் தாக்குதல்களை அரங்கேற்ற ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. முகாம்களில் தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் புலிப் போராளிகள் மற்றும் சில தளபதிகளை கருணாவின் உதவியுடன் தங்கள் திட்டத்துக்கு சாதகமாகத் திருப்பவும் திட்டமாம்.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் முகாம்களுக்கு வந்த கருணா, கிட்டத்தட்ட ஆயிரம் போராளிகளை முகாம்களிலிருந்து விடுவித்து தனியே அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே விடப்பட்டிருக்கும் தளபதி ஒருவர் இந்தப் போராளிகளை வழிநடத்துவாராம். இவர்கள் பல அணிகளாகப் பிரிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப் பணிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதே வேளையில் இவர்களின் தாக்குதல்களினால் மக்களுக்கு உயிர்சேதம் ஏற்படாமல், பீதி மட்டும் ஏற்படும் வகையில் நாடகம் அரங்கேறுமாம்.





இதையெல்லாம் கருத்தில்கொண்டு இப்போதே சிங்கள ராணுவத்தின் பல்வேறு படையணிகளும் ஆங்காங்கே தயாராக உலவி வருகின்றன. 'புலிகள் மீது எதிர் தாக்குதல். மிச்சம் மீதி இருந்த புலிகளை யும் ராணுவம் அழித்தது' என்று செய்திகள் வெளியிடத் திட்டமாம்.

புலிகளுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த ராணுவத் தின் அவசரத் தாக்குதல் படையணி-1 மற்றும் 2 தற்போது அம்பிலிப்பிட்டி நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் படையணி சம்பந்தமில்லாமல் இந்தப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரணம் தெரியாமல், சிங்கள மக்களே குழம்பித்தான் வருகின் றனர்.

ஃபொன்சேகாவோ இதை எப்படியோ மோப்பம் பிடித்து, தனது தேர்தல் பிரசாரத்தினூடே இந்த சதித்திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறார்!

சிங்கள மக்களுக்கு போர் பயத்தை ஏற்படுத்தி, அப்பாவி மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த இயக்கத்துக் கும் அவப் பெயர் ஏற்படுத்தி ஒரே கல்லில் ரெண்டு மாங் காய் அடிக்க அதிபர் தரப்பு முனைவது குறித்து நிஜமான புலிகளுக்கு தெரியவந்ததன் விளைவுதான், 'பிரபாகரன் பத்திரமாக உள்ளார்' என்று இணையதளம் மூலம் அவர்கள் சீறிக் கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல் செயல்படாமல் இருந்த புலிகளின் மாவீரர் பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர் பகம் ஆகியவையும்இனி செயல்படத் தொடங்கும் என்றும் இந்த இணைய தளத் தில் அறிவித்திருக்கிறார்கள். இந்த அலுவலகங்கள் எங்கு செயல்படும், எப்படி செயல்படும் என்பது சம்பந்தப்பட்ட போராளிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரியும். ராணுவத் துக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்குவதற் கான புலிகளின் ஆரம்பகட்ட ஒன்றுகூடலுக்கான அழைப்பு தான் இது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இலங்கை அரசு மிரட்டலின் மூலமாக புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களை வளைத்து வருகிறது. அவர்களிடமிருக்கும் பெருமளவிலான பணத்தையும் மொத்தமாகக் கைப்பற்றி வருகிறது. கடந்த வாரம் கூட இதற்காக லண்டன் சென்ற ராஜபக்ஷேவின் புதல் வன் இளைஞர்களின் எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷே, அங்குள்ள புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை சந்தித்திருக்கிறார். பிறகு அயர்லாந்து, கனடா, அமெரிக்காவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களையும் சந்தித்திருக்கிறார்.

தற்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதோடு, இயக்கமும் செயல்படப் போகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்தால்தான் இந்த நிதி கொட்டும் முகவர்கள் எவருக்கும் பயப்படாமல் இயக்கத்தின் பக்கம் நிற்பார்கள் என்ற நோக் கமும்கூட இந்த இணையதள அறிவிப்புக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மா. செட்டிகுளம் அகதி கள் முகாமில் இருந்து வந்த இவர், டிசம்பர். 1-ம் தேதி முகாம்களில் இருந்து மக்கள் மீள்குடியேறலாம் என்று அரசு அறிவித்ததும், முகாமிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்தார். முகாமில் இருந்து வெளியே வந்த பிறகு பல்வேறு சிங்களப் புலனாய்வு அமைப்புகளும் இவரிடம் மதிவதனியின் இருப்பிடம் குறித்தும் இன்ன பிற தகவல்களை வேண்டியும் பல்வேறு அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். இதனால் இவர் மனமுடைந்திருந்த வேளையில் நடந்த விஷயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கூறியிருந்திருக்கிறார். உடனே சிவாஜிலிங்கம் லண்டனில் இருந்த மதிவதனியின் அக்காவை தொடர்பு கொண்டு ஏரம்பு சின்னம்மாவை லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், வேறு சில காரணங்களுக்காக அவரை மாலத்தீவில் சிலரிடத்தில் கையளிக்கும்படி சிவாஜிலிங்கத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட... கடந்த ஞாயிறன்று மாலத்தீவு சென்று அவரை ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறார்.

- டி. தீபக்.
விகடன்

Read more...

Tuesday, January 19, 2010

யாழ்பாணத்தில் தினகரன் விழா

யாழ்ப்பாணம் உட்பட இலங்கைத் திருநாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென்னிந்தியக் கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர். “அமைதியும், சமாதானமும் நிலவுவதால் யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும், நாம் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வந்து போவோம் இந்த நிலையை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்” என அவர்கள் கூறினர்.


‘தினகரன்’ பொங்கல் விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பங்குகொண்டனர். இந்த விழாவையொட்டி மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்தது. எம். மோகன் ராஜின் அப்சராஸ் இசைக் குழுவினருடன் தென்னிந்தியக் கலைஞர்கள் பங்குபற்றினர். பிரபல பாடகர்களான ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீராம், பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோகரன், மாணிக்க விநாயகம், மாலதி, ரோபோ சங்கர், அரவிந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

‘யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியதை என்றுமே எங்களால் மறக்க முடியாது’. ‘30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி நள்ளிரவு வரை ஒரு இசை நிகழ்ச்சி நடத்த கிடைத்தது மறக்க முடியாத நினைவாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என மேற்படி கலைஞர்கள் கூறினர். “யாழ்ப்பாணத்திலு ள்ள தமிழ் மக்கள் கலையையும் கலைஞர்களையும் நன்கு ரசிப்பவர்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என்றாலும், இங்கு வந்து மேடையில் ஏறியதும், மெய்சிலிர்த்துப் போனேன்’ என்றார் மூத்த கலைஞரான மாணிக்க விநாயகம்.

“இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். யாழ்ப்பாண மக்கள் கலையை நன்கு ரசிப்பவர்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். எனினும் காலத்தின் சூழ்நிலை எங்களை 1983க்குப் பின்னர் விலக்கி வைத்தது. இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய சமாதானத்தால் மீண்டும் கலை நிகழ்ச்சி ஏற்படுத்த கிடைத்த சந்தர்ப்பம் பெரும் பாக்கியமாகும் என்றார் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த நமது பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ. ஈ. மனோகரன்.

“நள்ளிரவையும் தாண்டி பாடல்களை கலாரசனையுடன் ரசித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை என்றுமே மறக்க முடியாது. மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் வந்து மிகப் பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்றார் ஸ்ரீலேகா பார்த்தசாரதி.

தினகரன் பொங்கல் விழா, இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்திருந்த மேற்படி கலைஞர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ, லேக்ஹவுஸ் நிறுவன நிதிப் பணிப்பாளர் சான் சண்முகநாதன், தினகரன் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

ஏ-9 வீதி முழுமையாகத் திறக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய இசை நிகழ்ச்சி இதுவாகும். இசை நிகழ்ச்சியில் பங்குகொண்ட மக்களின் வசதி கருதி யாழ். இ.போ. ச. பஸ் டிப்போ விசேட பஸ் சேவையை நடத்தியது. ஏ. ஈ. மனோகரனின் ‘சின்னமாமி’ பாடல் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது. நிகழ்ச்சியில் சிங்களப் பாடல்களும் இடம்பெற்றன.

Read more...

Monday, January 18, 2010

Circumstances of Pirapakaran’s death questioned.


"A public trial in large and a hearing attended by local and international media would have kept alive the spirits of the Sinhala nationalism in an amazing scale. Knowing the mindset of the government this is what it would have wanted to achieve like what is being done to LTTE’s KP in a small way."


LTTE leader Pirabakaran’s death was a gimmicky driven prop up to increase the support base of President Mahinda Rajapakse to hold on to power to cover up his failures in good governance during his four year term in office.

The rudimentary way in which Pirabakaran’s body was paraded and the degrading methods adopted to reflect the gruesome injuries to his head and displaying his semi naked body are state managed drama to cultivate a precedence of another war victory against the Tamils of a yesteryears sense to be recorded in the history of Sri Lanka.

To achieve an outright victory claim, the government did everything to cover up and avoid due process of dealing with Pirabakaran’s death. The government feels it has succeeded in giving its message that has not been contested by the questioning mindsets within or outside Sri Lanka. The government’s dictatorial conduct towards the questioning media and the outspoken civil society bolstered its calculated agenda to mislead and fabricate the facts and to stamp its version of events as the only factual account surrounding the death of Pirabakaran.

Any one saying anything outside government’s version of the story or reveal some hard facts about Pirabakaran’s death are threatened of dire consequence. The government’s threatening conduct in its mission to uphold its only version of events has so far stood grounds. When there were no questions asked or debated about the circumstances of Pirabakaran’s death, the government’s story becomes the Sinhala story of how the President Mahinda Rajapakese (the Raja) has defeated the Tamil uprising in a brutal way like the historical Dutugemunu-Elharan war in which Tamil King Elharan was slain by Dutugemunu.

The children of Sri Lanka when they learn the modern Sri Lankan history, the Education Department approved version of events will be that Pirabakaran was slaughtered with the butcher’s knife in the war and there are ample photographs to display the brutality inflicted and the rudimentary treatment to his dead body.

There were various stories from the government side relating to Pirabakarans death. One official said he was shot and killed by a specialist army unit. It was even reported that Pirabakaran was captured and taken to Colombo and then executed. One even said that Pirabakaran put his hands up and surrendered to the army. Another story said when Pirabakaran refused to apologise for his conduct to a senior army official, he was axed to death by the said officer. All what was fed to the Sinhala masses were tantalising stories for them to rejoice over Pirabakaran’s death.

Let us consider some of the circumstantial evidences that were left behind in the trail of stage managed events that the government has put across to the people to digest.

Pirabakaran’s dead body displayed by the state confirms not a single bullet injury to his body.

Then the story of capturing and slaughtering him with a crude weapon has been cleverly framed to extend the government’s Machiavellian agenda. What is very intriguing is why the Defence Secretary Gotabaya Rajapakse allowed him to be murdered in captivity without producing him before the Court of Law to justify his violent conduct for over thirty years. If Pirabakaran was taken into captivity the euphoria in the south would have been ongoing. If he was held behind the bars and time to time his plight and appearance before the judges were shown in the state television, it would have kept the momentum high in the South for Mahinda for many years until the death sentence is executed after a judicial decision.

A public trial in large and a hearing attended by local and international media would have kept alive the spirits of the Sinhala nationalism in an amazing scale. Knowing the mindset of the government this is what it would have wanted to achieve like what is being done to LTTE’s KP in a small way.

The stories emerging so far confirm the circumstances under which Pirabakaran died was not helpful for the government to claim that they ‘got him alive’. The government could not claim maximum mileage from his death unless a sham and rudimentary show of brutality inflicted on his body is propagated to prop up the nationalist feeling in the South.

It purposely thwarted any effort to undertake a post-mortem examination on Pirabakaran’s dead body. If it had undertaken a post-mortem examination, factual account of his death would have been established. The circumstantial evidence available could have been corroborated to the real story behind his death.

There is beyond doubt from the reasons established that Pirabakaran did commit suicide to avoid being slaughtered by the enemy. Committing suicide when death is imminent is the motto of the LTTE movement he created and nurtured for such a long time. If a proper post-mortem examination had been undertaken all traces of suicide evidence would have been revealed.

A proper post-mortem would have identified when the brutal attack on his head after his death. If it was post event of his suicide, the medical evidence would have authoritatively proved this. Even the government’s claim of him being shot and killed would have been revealed in the post-mortem report as the bullets lodged in his body would have analysed.

Soon after Pirabakaran’s death, I spoke to one of his former bodyguards. He told me the instructions given to him by his leader Pirabakaran how to handle an ultimate life threatening situation for him. The instructions were very clear that he will pull the trigger from his pistol on to his head and the bodyguards must ensure to burn his body immediately using the flammable liquid stored in the vicinity. In an extreme difficult situation, the bodyguards must at least burn his face and prevent his facial identity. The circumstances confronted by Pirabkaran was possibly that his bodyguards were either killed before his death or they were not near enough or were unable to execute their orders when he pulled the trigger.

This appears to be a plausible cause of his death. Those who were very close to Pirabakaran are very assertive that he would not have died like a coward by either surrendering or without putting up a fight. He was a hardened man who devised suicide as the mission in his war strategy.

If a post-mortem was conducted, it would have identified the bullet lodged in the head of Pirabakaran and this would not have been helpful to the government. The gruesome injury on his head must have been a post event to hide the suicide gun shot injury. In order to score points the government has to stage manage and demonise the death of Pirabakaran to sensationalise the Southern Sinhala feelings.

The true story that Pirabakaran committed suicide would have hyphened the feelings of LTTE supporters. With all the truth being circumvented in a calculated manner, they are still waiting to hear the true circumstances of Pirabakaran’s death.

The government became pathetically desperate in handling the death of Pirabakaran that it decided to burn and dispose the body in a secret way without holding it in a mortuary until such time proper procedures were followed to certificate his death. It finally issued the death certificate to India under pressure after dragging on for some months. Issuing a death certificate without following the due process, when death was under tragic circumstances is a questionable conduct of the government. The death certificate too was not publicised and if it is published it will further embarrass the government. The cause/s of death must be reflected in the death certificate and why such important document is held in the tight grip of the Secret Service of Sri Lanka confirms sinister intent.

A section of the LTTE claimed that Pirabakaran was not killed and the body displayed was a dummy look of their leader. The government did nothing to counter this claim. An expert DNA test could have produced substantive evidence either to confirm or reject the body was Pirabakaran’s. DNA test could have been corroborated with his children killed by the army.

Why did the government handle the important closure procedures in an irregular manner? The only intention of the government had is to score political mileage on Pirabakaran’s death. Unfortunately, such irregular and rudimentary behaviour has not helped the President in his elections campaigns and he is unable to elongate the death of Pirabakaran as expected for his advantage.

Why did the government fail to follow the due process by holding Pirabakran for a full scale trial? Why post-mortem or independent DNA tests not undertaken and also why his body was not retained in the mortuary to facilitate a thorough process later? All these questions stack up against the government. The body of such an important criminal in the eyes of government was secretly reduced to ashes without a burial. Why did this happen? If Pirabakaran’s body was buried, the truth could have been analysed scientifically even at a later date. This is what the government wanted to avoid at any cost.

By Rajasingham Jayadevan

Read more...

Saturday, January 16, 2010

புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம் வைத்துள்ள அரசாங்கம் புலிகளின் பணத்தினை என்ன செய்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கம் இன்று தேசப்பற்றை வியாபாரமாக்கியுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விமர்சித்து பிழைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் தேசத்துரோகிகள். ஆனால் அரசாங்கத்தின் மோசடிகளுக்கு துணைபோனால் அவர்கள் தேசப்பற்றாளர்கள். தமிழர் கூட்டமைப்புடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா செய்துகொள்ளவில்லை.

மக்களை மீளக் குடியேற்றுவது அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது போன்ற பொதுவான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு கண்டே தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்றது இதுதான் உண்மை.

கே.பியை கைது செய்த போது புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகளும் 16 கப்பல்களும் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அக் கப்பல்களில் ஒரு கப்பலே மக்களை ஏமாற்ற இங்கு கொண்டு வரப்பட்டது. ஏனைய கப்பல்களுக்கு என்ன நடந்தது?

600 வங்கிக் கணக்குகளுக்கு என்ன நடந்தது. கே.பி எங்கிருக்கிறார். போன்ற விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது .

சர்வதேச புலி முக்கியஸ்தர் எமில்காந்தனுடன் ""இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன? புலிகளின் தங்கத்தையும் பணத்தையும் பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மேற்குலக சதிகாரர்களுடன் அரசாங்கமே தொடர்பு வைத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைகள் சுத்தமானவையா என்றார்

Read more...

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!

கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

Read more...

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்ஸ லண்டனில் சந்தித்துள்ளார்


இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஸ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சந்திப்பு எந்தவிதத்தில் நடைபெற்றது என்பது குறித்து உடனடியாக நாட்டிற்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை வலியுறுத்தியுள்ளனர்.


சரத் பொன்சேக்காவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.


எமில் காந்தன் மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றையும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் வழங்கினர்.


அதேவேளை, இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக எவ்வாறு பணம் கிடைத்தது என்பது குறித்து நாமல் ராஜபக்ஸ வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


புகைப்படத்தில் (மொட்டையடித்துள்ளவர்) நாமல் ராஜபக்ஸவிற்கு மிக அருகில் எமில் காந்தன் காணப்படுகிறார்.


Lankanewsweb

Read more...

தமிழ்மாறன் என்ற பெயரில் இவர் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் - இப்படியானவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்கவும்

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.







தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.


எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.


அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.


சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.


எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.


இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.


சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.


சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.


எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.




புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்


ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .

14.01.2010

Read more...

புதிய வடிவில் புலுடாவிடும் புலத்துப்புலிகள் - மக்களே கவனம் ஏமாந்துவிடாதீர்கள்

அனைத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்


எமது இயக்கத்தின் அனைத்து அதிகாரபூர்வ அறிக்கைகள், வெளியீடுகள் யாவும் எமது அதிகாரபூர்வ இணையத்தளத்திணூடக மட்டுமே வெளிவரும் என்பதை தெரிவிப்பதோடு

மேலும் 19.05.2009ன் பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான அனர்த்தத்தின் காரணமாக தற்காலிகமாக இயங்காதிருந்த மாவீரர்பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர்பகம் ஆகிய எமது முக்கிய அங்கங்கள் 08.01.2010 தொடக்கம் செயற்படும் என்பதை எமது மக்களுக்கும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

எமது அதிகாரபூர்வ செய்திகளை பெற எமது இணையத்தளத்திணூடகவோ அல்லது இணைய மின்னஞ்சல் ஊடகவோ தொடர்புகொள்ளலாம்.

பின்குறிப்பு:
தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ புலிச்சின்னத்தையுடைய கடிதமாதிரியை எமது அனுமதியின்றி பயன்படுத்துவதும் எமது மக்களை குழப்புகின்ற வகையில் வேறுபட்ட செய்திகளை எமது கடிதமாதிரியை பயன்படுத்தி வெளியிடுவதும் தவிர்க்குமாறு சம்மந்தப்பட் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நன்றி

தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச் செயலகம்
தமிழீழம் .

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top