சொன்னாலென்ன சொல்லாவிட்டாலென்ன கார்த்திகை 27 கொலைகாரர் தினம் தானடா சனீஸ்வரா! - சனீஸ்வரனுக்கு பதில் மடல்
டக்ளஸ் சொன்னாரா நவம்பர் 27 கொலைகாரர் தினமென்று! அவர் சொன்னது உண்மையா? அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறாடா சனீஸ்வரா!
சனீஸ்வரன்களால் 35,000 பேர் மண்ணுள் புதைந்தார்கள். அவர்களை நீங்கள் மாவீரர்கள்;, வீரச்செல்வங்கள் என்று கொண்டாடுகிறீர்களோ? எத்தனை இளைஞர் யுவதிகளை பலாத்காரமாக மாவீரர்கள் ஆக்கினீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியுமடா சனீஸ்வரா. பிரபாகரன் என்ற சனீஸ்
வரனிடமிருந்து தப்பியோடி படையினரிடம் சரணடைந்து அம்பேபுஸ்ஸ முகாமில் மறுவாழ்வு பெற்றுவரும் சிறுவர்களைக் கேட்டால் தெரியும் மாவீரர்கள் எப்படி உருவாக்கப் பட்டார்கள் என்று!
உண்மையாக தமிழ் மக்களுக்காகத் தியாகம் செய்தவர்களை நாம் மதிக்கிறோம். இதில் எல்லாஇயக்கப் போராளிகளும் அடங்குவர். அனால் பிரபாவின் கட்டளைக்காக தங்களை அப்பாவிகளைக் கொல்ல தங்களை அழித்தவர்கள் கொலைகாரர்களே!
தமிழர்களின் ஒட்டுமொத்த சனீஸ்வரனாக வல்வெட்டித்துறையில் உருவெடுத்து உங்கள் போன்ற சனீஸ்வரன்களால் தேசியத் தலைவர் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய சர்வதேச
பயங்கரவாதி பிரபாகரனே முதலாவது கொலைகாரனடா சனீஸ்வரா!
அல்பிரட் துரையப்பா, பாலசிங்கம்,பஸ்தியாம்பிள்ளை, செட்டி, மைக்கல், செல்லக்கிளி, சீலன் என்று வரிசையாகக் கொலை செய்து தன்னைத் தானே தேசியத் தலைவனென்று மகுடம் சூட்டி அப்பாவிச் சிறுவர் சிறுமியரை பலாத்காரமாக் கடத்தி மூளைச்சலவை செய்து நீ சொல்கிற முப்பத்தையாயிரம் பேர்வரை புதைகுழிக்குள் தள்ளி இறுதியில் மண்டை சிதறி முள்ளி வாய்க்காலில் முகம் குப்புறக் கிடந்தவன் தானடா நவம்பர் 27ன் முதல் கொலைகாரன்.
புன்னாலைக்கட்டுவனில் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் தம்பாபிள்ளையைக் கொலை செய்த சங்கர் என்கின்ற சத்தியநாதன் இன்று நீங்கள் முதல் வரிசையில் வைத்து மாவீரன் என்று கொண்
டாடும் கொலைகாரனடா சனீஸ்வரா!
மீசாலையில் சுப்பிரமணியம் என்கின்ற பொலிஸ்காரரை அவர் தனது கடமையைச் செய்ததற்காக பிள்ளைக்கு முன்னால் வைத்து அவரது தலையைத் துண்டாடிய கொலைகாரன் கிட்டு. பல்கலைக்
கழக மாணவன் விஜிதரன் முதற்கொண்டு நூற்றுக்கணக்கான ரெலோ இயக்கப் போராளிகள் பலரை உயிருடன் ரயர் போட்டு எரித்த உங்கள் காவிய நாயகன் கிட்டு உங்களுக்கு மாவீரனடா!
எங்களைப் பொறுத்தவரையில் மாபெரும் கொலைகாரனடா சனீஸ்வரை!
உட்பகையில் கிட்டுவைக் குண்டு வீசிக் கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு அதைச் சாட்டாக வைத்து கந்தன் கருணை பூட்டிய வீட்டிற்குள் அடைத்துவைத்திருந்த மாற்று இயக்கப்
போராளிகளை வெலிக்கடைப் படுகொலையையே மிஞ்சுமளவிற்கு ஈன இரக்கமின்றி சுட்டுக் கொன்ற அருணா உங்களுக்கு மாவீரனடா! எங்களைப் பொறுத்தவரையில் அவன் கொலைகாரனடா சனீஸ்வரா!
முதியவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பகிரங்கமாக கொலை செய்த திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் உங்களைப் பொறுத்தவரையில் தியாக தீபம் மாவீரனடா! எங்களைப் பொறுத்தவரையில் கொலைகாரனடா சனீஸ்வரா!
பல்கலைக்கழகப் பேராசிரியை ராஜினி திராணகமவைக் கொன்ற பொஸ்கோ கொலைகாரனடா!
விமலேஸ்வரனைக் கொன்றவனும் கொலைகாரனடா!
செல்வியைக் கொன்றவனும் கொலைகாரனடா!
கூட்டணித் தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் அகியோரைக் கொன்ற அறிவு, விசு ஆகியோரும்; கொலைகரர்களடா!
சரோஜினி யோகேஸ்வரன். தங்கத்துரை. ஆகியோரைக் கொன்வர்களும் கொலைகாரர்களடா!
நீலன் திருச்செல்வத்தைக் கொன்றவனும், ராசிக்கைக் கொன்றவனும் கொலைகாரர்களடா!
ஜெயராஜ் பெர்னாண்டோப்பிள்ளையைக் கொன்றவனும் கொலைகாரனடா!
றேலங்கி,கணவர் செல்வராஜா, கேதீஸ் லோகநாதன்,சின்னபாலா, இவர்களையெல்லாம் கொன்றவர்கள் மாவீரர்களாடா சனீஸ்வரா!
கதிர்காமரைக் கொன்றவன் மாவீரனா?
ஒளிந்திருந்து சுபத்திரனைக் கொன்றவன் மாவீரனாடா?
வன்னியில் தப்பியோட முயன்ற சொந்த இனத்தையே சுட்டுக் கொன்றவர்கள் மாவீரர்களா? அல்லது கொலைகாரர்களா சனீஸ்வரா?
விசுவமடுவில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி அங்கு இராணுவத்திடம் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை சொந்த இனம் என்று கூடப் பாராமல் குழந்தைக உட்பட கொன்ற கொலைகாரியை மாவீரி என்று சொல்கிறாயா சனீஸ்வரா!
இன்று வெளியில் வந்த வன்னி மக்கள் உண்மைகளைக் கூறுகிறார்களே சனீஸ்வரா?
மாத்தயாவையும் சகாக்கள் 600 பேரையும், பதுமனை, இளந்திரையனை இவர்களை எல்லாம் கொலை செய்தவர்கள் யார் சனீஸ்வரா? மாவீரர்களா அல்லது கொலைகாரர்களா?
ஒரு பெண் என்று கூடப் பார்க்காமல் மகேஸ்வரி வேலாயுதத்தை நாடகமாடிக் கொன்றவர்கள் மாவீரர்களாடா சனீஸ்வரா1
டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல அனுப்பிய இரண்டு பெண் புலிகளும் கொலைகாரிகளடா சனீஸ்வரா!
ராஜீவ் காந்தியையும் அவர் அருகில் நின்ற அப்பாவிகளையும் கொன்ற தனு மாபெரும் கொலைகாரியடா!
சந்திரிக்காவின் பாவாடை,பிரேமதாசாவின், மகிந்தவின் வேட்டிக்குள் ஒளிந்திருக்கும் டக்ளஸ் என்று குறிப்பிடும் சனீஸ்வரா பிரேமதாசாவின் கோவணத்தை மணந்தபடி கொழும்பில் உல்லாசம் கொண்டாடி இந்தியப் படையுடன் புலிகள் மோதியதை மறந்து விட்டாயா?
இறுதி நேரத்தில் தங்கள் உயிர் காக்க மட்டும் முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சிப்பாய்களிடம் உயிர்ப் பிச்சை வேண்டி சரணடைந்ததையும் மறந்து விட்டாயா சனீஸ்வரா!
தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் இன்று நீங்கள் துரோகிகள் என்று குறிப்பிடும் ராம் இவர்கள் எதற்காகவடா சிங்களப் படைகளிடம் சரணடைந்தார்கள்?
பிரேமதாசாவின் கோவணத்துக்குள் ஒளி;ந்திருந்த காலத்தில் தும்பன் எனப்படும் பாலராஜா என்பவனும் நீர்வேலி அக்காச்சி என்பவனும் செய்த கொலைகளை தமிழர்கள் மறக்கவில்லையடா!
அது எப்படியடா முள்ளிவாய்க்காலோடு இலங்கை நாட்டில கொலைகளும் நின்றுவிட்டது? இதிலிருந்தே தெரியுமடா எங்கள் மண்ணில் யார் கொலைகாரர்கள் என்று சனீஸ்வரா!
விடிவதற்குள் யாரைக் கொல்லலாம், விடிந்தால் யாரைக் கொல்லலாம் என்று உங்கள் தலைவன் தொடக்கம் அடியாள் வரைக்கும் இருபத்திநான்கு மணிநேரமும் அலைந்தது தமிழ் மக்களுக்குத் தெரியுமடா சனீஸ்வரா?
மாபெரும் கொலைகளுக்கெல்லாம் சூத்திரதாரியான பொட்டன் மாவீரனாடா சனீஸ்வரா!
மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம் என்றீர்களே! அப்படியென்றால் எதற்காகவடா மக்களடக்ளஸ் பின்னால் செல்கிறார்கள்?
பீற்றல் சனீஸ்வரா உங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள். அவர்களையெல்லாம் மண்டையில்போட்டும் உங்களால் ஈழம் பெற்றுக் கொள்ள முடியவில்லையே! முள்ளி வாய்க்காலோடு உங்கள் அராஜகங்கள் சங்கமித்து விட்டது.
நீங்கள் தேசியத் தலைவன் என்று தூக்கி வைத்து ஆடியவன் இறந்ததை உரிமை கோரிஅஞ்சலி செய்ய வக்கில்லாத நீங்கள் வீரப்பிரதாபங்கள் பேசிக் கொண்டு பிரபாகரனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பிரபாகரனின் படத்திற்கு ஊட்டுகிறீர்களே நீங்கள் எப்பேர்ப்பட்ட அறிவிலிகள் என்று உலகிற்கு உணர்த்த இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை.
பிபாகரனும் அவன் அடியாட்களும் அழிந்த பிறகுதான் தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கின்றாhகள். மக்கள் அச்சத்தினால் தான் இவ்வளவு காலமும் மௌனிகளாக
இருந்தார்கள். இன்று மாவீரர் நாள் சொன்னால் கூட அதைப்பற்றி அக்கறை கொள்ளாதஅளவிற்கு அந்த மக்களின் மனதில் பிரபாகரனும் அவனது அடியாட்களும் அழிந்து போனதுஅவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது..
அது சரி இன்று புலிகளை இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பவர்கள் யார்? சரணடைந்த புலிகள் தானே!
நீ என் வீணாய் டக்ளஸ் தேவானந்தாவை நோகிறாய் சனீஸ்வரா? அமைதியாக இருந்து நாட்டில் நடைபெறும் நல்ல மாற்றங்களைப பார் சனீஸ்வரா! சிலவேளை நீயே மனம் மாறி பிரபாகரனைக்
கொலைகாரனென்று சொல்லும் நிலை வரும் சனீஸ்வரா!
முடியாதென்கிறாயா சனீஸ்வரா? ஏன் முடியாது! உன் போல கருணாவும் பிரபாகரனை எப்படிப் புகழ்ந்தவர். சுவிஸ் நாட்டில் கருணா உரையாற்
றியபோது பிரபாகரனை எப்படியெல்லாம் கருணா பகழ்ந்திருந்தார். அடிக்கடி அண்ணை என்று விழித்திருந்தார். தலைவருடைய சிந்தனை என்னவென்று எங்களுக்கே தெரியாது அநுரத்ர ரத்வத்தைக்கு எப்படித் தெரியும் என்று கூறிய கருணா இன்று சுதந்திரக் கட்சியின் அமைச்சராக் இருக்
கிறாரே! பிரபாகரனைக் கொலைகாரனென்று கூறியவர் அவர்தானே! முகமாலையில் மழையில் குடைபிடித்தபடி நின்று கொண்டு ஈ.பி.டி.பியினர் குடாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று
கூறிய கருணா இன்று என்ன சொல்கிறார். கருணா ஈ.பி..டி.பியினரிடம் சரணடைந்தது உனக்குத் தெரியாதோ சனீஸ்வரா?
தயா மாஸ்டர் என்ன சொன்னார்.? ஏன் ஜோhஜ் மாஸ்டா என்ன சொன்னார். புலிகள் கொலை செய்தார்கள் என்று தானே சொன்னார்கள். அப்போ டக்ளஸ் தேவானந்தா நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம் என்று சொன்னதற்கு நீ ஏன் கவலையடைகிறாய். .ன்னம் சில நாட்களில் புலிகள் செய்த பல கொலைகள் அம்பலத்திற்கு வர இருக்கிறன. எத்தனை கொலைகள் செய்தவர்கள் இந்த மாவீரர்கள்.
அதில் ஒருபகுதி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும் சனீஸ்வரா!
புலிகள் இயக்கத்தில் உட்படுகொலைகள் எல்லாம் எங்களுக்குத் தெரிந்திருக் வாய்ப்பில்லை சனிஸ்வரா!
அது பெரிய சனீஸ்வரன் பிரபாகரனுக்கும் சின்ன சனீஸ்வரன் பொட்டனுக்கும் தான் தெரியும் சனீஸ்வரா!
உனக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது தொல்புரத்தைச் சேர்ந்த புலிக் கொலைகாரன் லெப்டினன்ட் தும்பன் இந்தியப்படையால் கொல்லப்பட்டபோது சுழிபுரத்தைச் சேர்ந்த மக்கள்
ஆடு அடித்து விருந்துண்டு மகிழ்ந்தார்கள். இதற்காக பொட்டர் நடராசா என்பவரை புலிகள் கடத்திச் சென்று கொன்றனர்.
சனீஸ்வரா பிரபாகரனைப் போல உனக்கும் வாழ்க்கையின் அர்த்தம் புரியவில்லை.
முடியாதென்றால் மனிதன் காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள். பிரபாகரன் அல்லது உன் போன்றவர்களுக்கு மேல்த் தட்டுக்குள்
ஒன்றும் இல்லாததால் அதனைச் செய்ய முடியவில்லை. 600 புலிகள் இறந்தபோது கிடைத்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருந்தால் நீ குறிப்பிட்டது போல முப்பத்தையாயிரம் பேர் புதைகுழிக்
குள் சென்றிருக்க மாட்டார்கள்.
சனீஸ்வரா வன்னியில் இறுதி நேரத்தில் பலாத்காரமாக புலிகளால் பிடிக்கப்பட்டு யுத்தத்திற்கு அனுப்பி கொல்லப்பட்டவர்கள் மாவீரர்களா?
அவர்களைக் கொலை செய்துவிட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அருகதை உங்களுக்கு இருக்கிறதா சனீஸ்வரா? அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்களின் முன்னால் செல்லும் துணிவு உங்கள் போன்றவர்களுக்கு இருக்கிறதா சனீஸ்வரா? அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் இன்
னமும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கொன்றது புலிகள் தான் என்று கூறுகிறார்கள்.
சனீஸ்வரா சிங்களவர்கள் தமிழர்களைக் கொன்றதனால் தான் எல்லோருமே ஆயுதமேந்திப் போராடினார்கள். அவர்களையெல்லாம் அழித்தது நீ மாவீரர்கள் என்று குறிப்பிடுபவர்களும்
அடங்;குவார்கள்.இதனால்தான் ஏனையவர்கள் சிங்கள அரசாங்கங்களுடன் இணையவேண்டி ஏற்பட்டது. சொந்த
இனத்தையே புலகள் கொல்கின்றபோது அவர்கள் தங்களைப் பாதுகாக்க அரசாங்கத்துடன் இணைவதில் என்ன தவறு சனீஸ்வரா? புலிகள் பிரேமதாசாவின் கோவணத்தில் தொங்கியபோது
அதனை ராஜதந்திரம் என்றார்களே! பிரேமதாசாவைக் கண்ணியவான் என்று பிரபாகரன் புகழ்ந்தது சனீஸ்வரனுக்குத் தெரியாதா?
புலிகள் இயக்கத்தில் இருந்தவனே அரசாங்கத்துடன் இணைந்திருக்
கிறான். நீ என் டக்ளஸ் தேவானந்தாவை நோகிறாய். யார் துரோகிகள் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ்மக்கள். நீயல்ல சனீஸ்வரா!
நன்றி ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment