தங்கச் சங்கிலிக்காக ஒரு அப்பாவிப் பெண் பலியான பரிதாபம்
பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தனர். பட்டதாரி படிப்புக்காக கல்வி கற்றுக் கொண்டிருக்கையில் ஊருக்கப்பால் தொழிலுக்குச் சென்றார்.
அன்று 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் திகதி சனிக்கிழமை பட்டதாரி பரீட்சைக்கு இன்னும் இரண்டு தினங்களிருந்தன.
பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு முன் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குச் சென்று வணங்கி புத்தபிரானின் ஆசியைப் பெற வேண்டுமென நினைத்து பால்தானமளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார்.
கவனமாகச் செல்லும்படியும் தாமதமானால் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படியும் பெற்றோர் இவரிடம் கூறினர். விளக்கு ஒளியிட கையில் தேங்காய் எண்ணெய் போத்தலும் தயாராகியிருந்தது.
சமய விடயங்களை முடித்துக் கொண்ட இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஐராங்கனியின் தந்தை அடிக்கடி தம் கையடக்கத் தொலைபேசி மூலம் மகளுடன் தொடர்பு கொண்டார்.
வீட்டை வந்தடைய மலைப் பகுதியிலேறிவிட்டதாக கடைசியாகக் கிடைத்த தொலைபேசி தகவலில் தெரிவித்திருந்தார்.
மகளுக்கு விருப்பமான பொலொஸ்மீன் சமையலைச் செய்ய தாய் தயாரானார். அனேகமாக இப்போது வீட்டை நெருங்கியிருக்கலாம், சற்று சென்று பார்க்கும்படி உறவுமுறை மகளொருவரிடம் ஐராங்கனியின் தாய் கூற மகள் கீழ் நோக்கி சென்ற பார்த்த போது இளைஞனொருவனைக் கண்டு என்ன விவரமென வினவினார்.
இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளாரென அவ்விளைஞன் கூறியதும் இவர் அதிர்ச்சியடைந்து ஸ்தலத்துக்குச் சென்று பார்த்த போது ஐராங்கனி முகம் கீழ் நோக்கிய நிலையில் கிடந்தார்.
கழுத்துப் பகுதி வெட்டப்பட்டிருந்தைக் கண்டு அழுது சப்தமிட்டதும் ‘அம்பலகல’ பிரதேசம் அவதியுற்றது.
இவைபற்றிய தகவல் பொலிஸ் அவரைப் பிரிவு 119க்குக் கிடைக்கப்பெற்றது. ‘தெல்தெனிய’ பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதம பொலிஸ் பிரிசோதகர் பாலசூரிய தமது குழுவினருடனும், சோகோ அதிகாரிகள், பொலிஸ் நாய் ஸ்தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
கொலை செய்யப்படட ஐராங்கனி சம்பந்தமான மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றதையடுத்து மரண விசாரணைக்காக சடலம் தெல்தெனிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் பத்தொன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கடமைக்கு வந்தார். மரண விசாரணையையடுத்து பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படடது. இதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகின.
ஐராங்கனி வீட்டுக்கு வரும் பாதை பாழடைந்த பகுதியாகும். அத்துடன் மலைப் பகுதியில் ஏறுவதும் இறங்குவதும் இலேசான காரியமல்ல.
சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோப்பி மரங்கள் காணப்பட்டன. ஊர்வாசிகளை ஸ்தலத்துக்கு வரச்சொன்ன பொலிஸ் பரிசோதகர் காட்டுமிராண்டித்தனமான இச்செயலைக் கண்டித்ததுடன் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த ஊர்மக்களின் ஒத்துழைப்பை வேண்டினார்.
நேரடியாக இதனை சொல்ல முடியாவிட்டால், எழுத்து மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தனக்கு தெரிவிக்குமாறும், தெரிவிப்பவர் தங்கள் விபரங்களை தெரிவிக்க அவசியமில்லையென்றும் தெரிவித்தார்.
ஓரிரு நாட்களாகியும் கொலை பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்காதது. பொலிஸாருக்கு பிரச்சினையாயிருந்தது.
அத்துடன் ஊரில் சிலர் இக்கொலையை பொலிஸார் கொன்றுள்ளனர் அதனால்தான் குற்றம் புரிந்தவன் கைது செய்யப்படாமலிருக்கிறான் என ஊர் முழுவதும் கட்டுக்கதைகள் பரவின.
பொலிஸ் நிலையத்தின் கெளரவம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க இதன் உண்மை விபரத்தையறியுமாறு வட்டாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ‘ஜயந்த கம்மன்பில’ தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் ஆலோசனை வழங்கினார்.
இறந்த மாணவி பல வருடங்களாக ஒரு இளைஞனுடன் காதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவ்விளைஞர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காதல் தொடர்பு அறுந்துள்ளதாகவும் இதன் பின்னர் மாணவிக்கு தொலைபேசி பயமுறுத்தல் விடுக்கப்பட்டதால் வீட்டார் காதலனான கான்ஸ்டபிளை சந்தேகித்துள்ளதாகவும் பொலிஸாருக்குத் தெரியவந்தது. இக்கான்ஸ்டபிளின் தினக்குறிப்பேடு பரிசீலிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெறும் போது இவர் தென்னக்கும்புர வீதி சோதனை சாவடியில் கடமையிலிருந்துள்ளார். மற்றுமுண்டான எழுத்து மூல ஆவணங்களும் பரீசிலிக்கப்பட்டன.
இவர் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென தெரியவந்ததாக தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
மாணவி ஐராங்கனியை கொலை செய்த நபர் கூரிய ஆயுதத்துடன் கோப்பிமரப் பகுதியினூடாக ஓடுகையில் அவ்வாயுதம் மரத்துடன் மோதியதின் காரணமாக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிஸார் ஊகித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் பற்றிய சந்தேகம் நிவர்த்திக்கப்பட்டதும் மேலும் இருவர் பற்றிய தகவலையொட்டி அதனை ஆராய்ந்தனர். ஒருவர் அருகிலுள்ள ஹோட்டலொன்றின் சிப்பந்தியாவார்.
மற்றவர் கொலை செய்யப்பட்ட இளம் யுவதியுடன் ஒரு நிறுவனத்தில் கடமையாற்றும் மேற்பார்வையாளராவார். இவர்களிருவரும் ஐராங்கனியின் காதலுக்காக தவித்தவர்கள். இவ்விருவர் பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகின.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஹோட்டலொன்றினுடையதாயிருக்கலாமென சந்தேகமெழுந்தது.
இருப்பினும் இவ்விருவரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென விசாரணைகளில் தெரியவந்தது. அவ்வாறெனில் கொலை செய்தவர் யார் என்ற பிரச்சினை பொலிசாருக்கு எழுந்தது.
எவ்வித தடயங்களும் கிடைக்காததால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் இரு பொலிஸ் குழுக்களை விசாரணைகளுக்கு நியமித்தார்.
இறந்த இளம்யுவதி பாதையில் வருகையில் ஒருவரை பார்த்து ‘மாமா’ எனக் கூறியதாகவும், மேல் பகுதியில் ஒருவர் குரங்குகளை விரடடிச் சென்ற போது ‘அம்மா’ என்ற சப்தம் கீழ் பகுதியிலிருந்து nகேட்டதாகu தகவல் கிடைத்தது.
குற்றவாளி பல நாளாகியும் கண்டுபிடிக்கப்படாததால் பொஸிசார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அதிகரித்தது. இந்நிலையில் ஊரிலுள்ள ஒருவர் பற்றிய தகவல் பொலிஸாருக்குக் கிடைத்தது. இந்நபர் நீதிமன்றில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவர்.
கொலைச் சம்பவத்தின் பின் இவருடைய நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளதால் இவரை பொலிஸார் கண்காணித்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற தினம் மலைப் பகுதியின் கீழாகவுள்ள கடையொன்றில் அந்நபரைக் கண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இக்கொலை சம்பந்தமாக மூன்று பிரிவுகளாக விசாரணைகள் நடைபெற்றன. ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள எத்தனித்தவர் முடியாமல் போக கழுத்தை வெட்டியிருக்கலாம்.
அல்லது இளம் யுவதியின் காதலை வேண்டிச் சென்றவர் கிடைக்காமல் போக கொலை செய்திருக்கலாம் மூன்றாவதாக பெண்ணின் கழுத்திலுள்ள தங்கச் சங்கிலியை எடுப்பதற்காக கொலை சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. வெட்டுக்காயத்தைப் பார்க்கும் போது குற்றம் புரிந்தவர் திடகாத்திரமானவர் என ஊகிக்க முடிந்ததாம்.
ஐராங்கனியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது அவள் கழுத்தில் தங்கச் சங்கிலியிருக்கவில்லை. மேலும் அவள் உபயோகித்த கையடக்கத் தொலைபேசியுமிருக்கவில்லை.
காதுகளிலுள்ள ஆபரணங்களிருந்தன. இப்பெண் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறெனில் தங்கச் சங்கிலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது.
சந்தேக நபர் ஏற்கனவே திருமணம் செய்தவர் தற்போது மற்றுமொரு பெண்ணுடன் வாழவதாக தகவல் கிடைத்ததும் பொலிஸார் அவரை தெடிச் சென்று நீதிமன்றில் உனக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது தங்களுடன் வருமாறு பொலிஸார் கூற “அப்படியொன்றும் இல்லை சார்” எனக் கூறிய அந்நபரின் உடலில் நடுக்கமேற்பட்டதை பொலிஸார் அவதானித்தனர்.
பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்ட இந்நபரை குற்றஞ் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி.
‘ரஞ்ஜித் பாலசூரிய’ விசாணை செய்தார். ‘நீ அன்று மலைப்பகுதியின் கீழ்ப்பக்கமாக சென்றாய் அல்லவா, பொய் கூற எத்தனிக்காதே எம்மிடம் சாட்சியங்களுள்ளன. எம்மிடமிருந்து நீ தப்பிக்க முடியாது” என பொறுப்பதிகாரி கூற அவன் உண்மை விபரத்தை வெளியிட்டான்.
“சார், எனக்கு பராமரிப்பு வழக்கொன்றுள்ளது என் முதல் மனைவிக்கு மாதம் ரூபா ஆறாயிரம் வழங்கவேண்டும் இரண்டு மாதங்களாக நான் பணம் செலுத்தவில்லை.
இருபதாம் திகதி வழக்குள்ளது இம்முறை பணம் கட்டத் தவறினால் நான் விளக்கமறியல் செல்ல வேண்டிவரும் ஏற்கனவே ஒருமுறை விளக்கமறியல் சென்று மிகவும் துன்பப்பட்டேன். மீண்டும் சிறைசெல்ல முடியாது அதனால் இக்குற்றத்தை செய்தேன் சார்’ என்றான்.
“அன்று நான் பலா காயொன்றை வெட்ட மண்வெட்டியுடன் மலையின் அடிவாரத்துக்கு சென்றேன். அப்போது இவ்விளம்யுவதி தனியாக வந்து கொண்டிருந்தார் அவர் கழுத்தில் தங்கச் சங்கிலியிருப்பதைக் கண்டேன். இப்பெண்ணை பார்த்து சிரித்த நான் இரண்டு வார்த்தைகள் பேசினேன்.
இதையடுத்து என் மண்வெட்டி அவரது கழுத்தை தாக்கியதும் சங்கிலி உடைந்து விழுந்தது. அவள் கையிலிருந்த கையடக்க தொலைபேசி கீழே விழுந்தது.
தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி, மண்வெட்டி ஆகியவற்றை எழுத்துக் கோப்பி மரங்கள் பக்கமாக ஓடுகையில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தன.
சந்தேக நபரின் வாக்குமூலத்தையடுத்து திகன அடகு கடைக்குச் சென்ற பொலிஸார் பதினெட்டாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்திருந்த ஐராங்கனியின் தங்கச் சங்ககிலியையும், விற்பனை செய்யப்பட்டிருந்த கைடயக்கத் தொலைபேசியையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி சந்தேக நபரின் வீட்டு விறகு மடுவத்தில் ஒளித்து வைத்திருந்ததையும் கைப்பற்றினர்.
சந்தேக நபர் சம்பவதினத்தன்று அணிந்திருந்த உடையை தேடிய போது அவை எரிக்கப்பட்டிருந்தன. தான் செய்த கொடூர செயலுக்காக வருந்துவதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சட்டத்தின் முன் வருத்தத்துக்கு இடமில்லையல்லது, சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். திட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளாரென்றும் பணம்தான் மூலகாரணமென்றும் விசாரணையிலிருந்து தெரியவந்தன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரவி சந்திரசிங்கவின் பணிப்பின் பேரில் தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் யு. பீ. பலிஹவதன குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்ஜித் பாலசூரிய, சார்ஜன்ட் ஜயவர்தன, கான்ஸ்டபிள்களான உடுபிடிய, சேனாரத்ன ஆகியோர் விசாரணைகளுக்குதவினர்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்
0 விமர்சனங்கள்:
Post a Comment