வன்னி மக்களுக்கு உதவியதால் ஆத்திரமடைந்த புலிகளின் ஆதரவு அமைப்பான BTF
கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை. ரொல்வத் பெண்கள் கல்லூரியின் கட்டட வசதிகளைப் பயன்படுத்தி, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்ற கலை சார் பயிற்சி வகுப்புக்களையும், தமிழ் வகுப்புகளையும் நடத்திவரும் கின்ஸ்டன் தமிழ் பாடசாலையின் துணை அமைப்பான பெற்றோர் வேலையாளர் நண்பர்கள் சங்கம்(PSFA) 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு பண உதவி வழங்கியதிலிருந்து பிரித்தானிய தமிழ் போரம்(BTF) சட்டரீதியான பல வகையான தொல்லைகளை வழங்க ஆரம்பித்தது.
காசாவில் இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்தும் போதும் தெருவுக்கு வந்து போராடுகின்ற இலட்சக்கனக்கான இங்குள்ள இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படும் பிரித்தானிய மக்களின் போராட்டம் அந்தத் தாக்குதலின் உக்கிரத்தை ஓரளவாயினும் குறைத்திருக்கிறது. ஈராக்கில் போர் நடந்த போது 2 லட்சம் ஈராக்கியரல்லாத பிரித்தானியர்களின் அழுத்தம் பிரித்தானியப் பிரதமர் பிளேய்ரையே அரசியல் அரங்கிலிருந்து அகற்றியது. ஆனால் இலங்கையில் கொத்துக் கொத்தாக மக்கள் கொலைசெய்யப்பட்ட போது, இவர்களில் யாருமே மூச்சுக்கூட விடவில்லை. BTF என்ற புலிகளின் பிரித்தானியத் துணை அமைப்பு முன்னெடுத்த போராட்டங்கள் மக்களைப் பற்றிப் பேசவில்லை. புலிகளின் சின்னம் பதித்த கொடிகளும், பிரபாகரனின் உருவப்படமும் போராட்டத்தின் தன்மையையே மாற்றியிருந்தது. போராட்டங்கள் மக்கள் நலனை முன்வைத்ததாக இருக்கவில்லை. இதனால் எந்த முற்போக்கு அரசியல் அணிகளும் பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் வழங்க இப்போராட்டங்களுடன் இணைந்து கொள்ள முன்வரவில்லை.
பிரித்தானிய தமிழ் போரம்(BTF) என்ற இந்த அமைப்பின் மக்கள் பற்றிற்கு இன்னொரு உரைகல்லாய் அமைந்தது தான் இந்த கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை குறித்த நிகழ்வுகள்.
2005ம் ஆண்டு ஜனவரி மாதம், கிங்ஸ்டன் தமிழ் பாடசாலையின் துணை அமைப்பான பெற்றோர் வேலையாளர் நண்பர்கள் என்ற அமைப்பினூடாக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சேகரிக்கப்பட்ட பணத்தை தன்னார்வ நிறுவனங்களூடாக சுனாமியால் பாதிப்புற்ற வன்னிப் பிரதேச மக்களுக்கு வழங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம், 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சுனாமியால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களான குழந்தைகளுக்கு படிப்பகம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்காக, பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டது.
இதேவகையான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் கிங்ஸ்டன் தமிழ்ப் பாடசாலை, பல வகைகளிலும் ஈடுபட்டதாக அதன் நிர்வாகிகள் இனியொருவிற்குத் தெரிவித்தனர். குறிப்பாக பாகிஸ்தானில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதேவகையான நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலுன் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் பீ.ரீ,எப் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களான இலங்கைத் தமிழர்களுக்கு பணம் வழங்கப்பட்டதும் BTF விசனமடைய ஆரம்பித்தது.
கிங்ஸ்டன் நகரசபையானது இந்தத் தமிழ்ப் பாடசாலைக்கு 13 ஆயிரம் பிரித்தானிய பவுண்ஸ் தொகையை வருடாந்த நிதியாக வழங்கி வருகிறது. இத் தொகையில் 90 வீதமான பகுதி நகர சபைக்கே வாடகைப் பணமாகத் திருப்பி வழங்கப்படுவதாக பாடசாலையின் அறிக்கை கூறுகிறது.
மாநகர சபையால் வழங்கப்படும் இத் தொகையின் ஒரு பகுதியே வன்னி மக்களுக்கு உதவியாக வழங்கப்பட்டதாகவும், அது பாடசாலையின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் BTF நகரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இதே வேளை 2005ம் ஆண்டில் குறித்த சில பெற்றோர், கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை BTF இன் ஒரு பகுதியாக மாற்றமடைய வேண்டும் என்றும், இலங்கையில் புலிகளின் போராட்டத்திற்குப் பங்களிக்க வேண்டுமென்றும், பண உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். நிர்வாகத்தில் இருந்தோர் நேரடியான அரசியலில் ஈடுபட மறுத்த அதேவேளை இது பாடசாலை என்ற வரம்பை மீறுவதாகும் என்றும் கருத்து வெளியிட்டனர்.
2006ம் ஆண்டு நிர்வாகிகள் தெரிவுக் கூட்டத்தில் BTF ஆதரவாளர்களான இந்தப் பெற்றோர் தேர்தலில் வேட்பாளர்களாகப் பதிந்து கொண்டனர். இந்த தேர்தலில் ஏனைய பெற்றோரின் போதிய வாக்குகள் இன்மையினால் தோற்றுப் போன BTF ஆதரவாளர்கள், நிர்வாகத்திற்குப் பல வகையான தொல்லைகளை வழங்க ஆரம்பித்தனர். 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களைக் கொண்ட பெற்றோர் கூட்டங்களில் கூச்சலிட்டும், குழப்பம் விளைவித்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சில சமயங்களில் வன்முறை பிரயோகிக்கவும் எத்தனித்தனர்.
பின்னதாக 2008 ஜூன் மாதம் இவர்கள் பாடசாலையிலிருந்து பிரிந்து சென்று புதிதாக ஒரு பாடசாலையை ஆரம்பித்தனர்.
இதேவேளை மாநகர சபை ஒரு நிதியாளரை நியமித்து கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலையை நிதிப் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர், அங்கு நிதி தவறாகக் கையாளப்படவில்லை என்ற முடிபிற்க்கு வந்தது. பாடசாலையுடன் தொடர்பற்ற பிரித்தானிய தமிழ் போரத்தின் முக்கிய உறுப்பினரான நந்தன் குமார் என்பவரே இந்த முறைப்படுகளை மேற்கொண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
பிரித்தானிய தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நந்தன் குமார் நகரசபையின் முடிபு தவறானது என்று மேன்முறையீடு செய்ய அதன் மறு விசாரணை எதிர்க்கட்சி, ஆளும் தரப்பு நகரசபை உறுப்பினர்களிடையே ஒக்டோபர் 12ம் திகதி நடைபெற்றது. அங்கும் நந்தன் குமாரினது புகார் மறுபடி ஆதாரமற்றது என நிராகரிக்கப்பட்டது. ஆனால் வன்னியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களான குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பணம் பிரித்தானிய அரச பணம் தான் என்று தான் நிறுவுவதாகச் சவால் விடுத்த BTF உறுப்பினர். இது தவறானது எனவும் கூறுகிறார். கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை மட்டுமல்ல ஏனைய பல பாடசாலைகளையும் BTF தனது கட்டுப்ப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னெடுத்த நடவடிக்கைகள், பல பாடசாலைகளைச் சிதைத்தும் உள்ளது.
inioru
0 விமர்சனங்கள்:
Post a Comment