இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label மக்களே விழிப்பாக இருங்கள். Show all posts
Showing posts with label மக்களே விழிப்பாக இருங்கள். Show all posts

Wednesday, June 2, 2010

புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி

கனடாவில் கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் தமிழர் தேசிய தொலைக்காட்சி புதிய நிர்வாகத்தின் கீழ் தனது பணியைத் தொடர்வதாக கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாயகம், தேசியம் என்பனவற்றைப் உயிர் மூச்சாகக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மேற்படி தொலைக்காட்சியின் பங்குத்தாரர்களின் முடிவின் பிரகாரம் மேற்படி தொலைக்காட்சி அதன் இணை அமைப்புக்களாக இதுவரை இயங்கி வந்த சி.எம்.ஆர், சி.ரி.ஆர் வானொலிகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும்,

தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டு வரும் பணியை எந்தவித தடங்கலுமின்றி முன்னெடுக்கும் அதேவேளை, மக்களின் இடர்களைய தான் மேற்கொண்டுள்ள பணியையும் தொடர்ந்து செய்யும் எனவும் தெரியவருகிறது.

தமிழர் தேசிய தொலைக்காட்சியின் புதிய நிர்வாக இயக்குனராக மூத்த ஊடகவியலாளரான திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். தமிழர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அந்தத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளிற்கு பொறுப்பாக இருந்த திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள்,

தமிழ்மக்கள் போரின் பேரவலத்தைச் சந்தித்தப்போது அது தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி அதனை மக்கள் பால் சென்றடையப் பெரிதும் பங்களித்த ஒரு விடுதலை விரும்பியாவார். இவரைப் பற்றிய காழ்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மூன்று ஊடகங்களும் ஒரு நன்னம்பிக்கை நிறுவனத்தின் கீழ் வரும் பட்சத்தில் இணைந்து செயற்பட மேற்படி தொலைக்காட்சி விரும்புவதாகவும் தமிழ்த் தேசியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊடகம் தனியார் மயமாகும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே புதிய நிர்வாகம் பிரிந்து செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.

Read more...

Monday, November 23, 2009

குண்டுகளால் பொட்டு வைத்ததால் பொட்டம்மானாம் இப்படியான கொலைகாரனின் பெயரால் மாவீரர் உரையாம்!?

தமிழ் மக்களை”தேசியத்தின்”பெயரில் மொட்டை அடித்த கும்பல்கள் மக்களின் காதுக்கு பூ வைத்து தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவ முனைகின்றது புலத்து புலிக் கும்பல்.தன்னிடம் சரணடைந்த பிரபாகரனைக் கொன்று அவனுக்கு கோமணத்தைக் கட்டி அவமானப்படுத்திக் காட்டியது இலங்கை அரசு.புலத்துப் புலிகள் தமிழ் மக்களிடம் எஞ்சிய கோமணத்தையும் எப்படியும் உருவலாம் என்று எண்ணுகின்றது.
புலத்து புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க பிரபாகரனை உயிருடன் இருப்பதாக காட்ட முனைந்தது. ஆனால் பிணத்துக்கு உயிரூட்ட முடியாத நிலையில் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பவைக்க முடியவில்லை.கொஞ்சப் புலிகள் மட்டும் அப்படி நம்பி பிதற்றித் திரிகின்றனர். தலைவரை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றி புலி வியாபாரத்தை இனியும் செய்ய முடியாதநிலை. இதனால் காணாமல் போனவராக உள்ள பொட்டரைக் காட்டி தமிழ் மக்களின் கோமணத்தை உருவ முடியும் என்று புலத்து புலிகள் கணக்கு போடுகின்றனர்.

கைது செய்தவர்களின் நெற்றி பொட்டில் சுட்டுக் கொல்வதால்”பொட்டர்”என்ற பெயர் பெற்று தலைவனானவன் தான் பொட்டன்.இந்தக் கொலைகாரனும் மானிட விரோதியுமான பொட்டரை புலத்துப் புலிகள் தங்கள் தொடர்ச்சியான பண அறுவடைக்குரிய சோளக்காட்டு பொம்மையாக மக்கள் முன் நிறுத்த முனைகின்றனர்.வேடிக்கை என்னவென்றால் புலத்து புலிகள் தங்களுக்குள் நடக்கும் குத்துவெட்டுகளையும், அதைத் தொடர்ந்து பல குழுக்களாக சிதையும் சிதைவையும் பொட்டுப் பொம்மை மூலம் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இங்கு பொட்டரைக் காட்டியும்,பொட்டரைக் கொண்டு மிரட்டியும், தங்களுக்கான ஒற்றுமையை நிலைநிறுத்த முடியவில்லை.மறுபக்கத்தில் தமிழ் மக்களிடம் கோமணத்தை உருவ பொட்டரை முன்னிறுத்த முனைகின்றனர்.

பொட்டரின் பெயரால் ஒரு மாவீரர் உரை!?தலைவருடன் சேர்ந்து சரணடைந்த பொட்டர் கொடுஞ்சிறையில் சிக்கி எல்லாவற்றையும் கக்கிவிட்டார்.அவர் இன்னமும் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இலங்கை அரசு தலைவரைப் கொன்றது போல் கொன்று தள்ளிவிட்டதா என்று தெரியாத நிலை.அது பற்றி புலத்து புலிக்கு அக்கறையும் கிடையாது.தமிழ் மக்களை ஏமாற்ற பொம்மை தேவை.

சரணடைந்தவர்களைக் கொன்றது போர்க் குற்றம் என்பதால் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் எப்படியோ இறந்ததாக மட்டும் காட்டியது இலங்கை அரசு. சரணடைந்தவர்களை கொன்றதாக அது காட்டவில்லை.ஆனால் அவர்கள் உடலை இலங்கை அரசு காட்ட வேண்டியிருந்தது.

ஆனால் பொட்டரைக் காட்டவில்லை.மாறாக பொட்டரை உயிருடன் வைத்து சித்திரவதை செய்ததன் மூலம் புலி மூலத்தையே கறந்தனர்.இதன் மூலம் அனைத்தையும் இனம் கண்டு வருகின்றனர்.சின்னச்சின்ன நடவடிக்கைகள் உள்ளடங்கலாக.மறுபக்கத்தில் இனி அவரை உயிருடன் முன்னிறுத்துவதோ, உடலைக் காட்டுவதோ போர்க் குற்றத்தை நிறுவப் போதுமான மற்றொரு சாட்சியமாகிவிடும்.

இப்படி வதைக்கப்படும் தங்கள் கொலைகாரத் தலைவரின் பெயரால், எல்லாவற்றையும் காட்டிக் கொடுக்கும் தலைவரின் பெயரால், புலத்து புலிகள் தமிழ் மக்களுக்கு காதுக்கு மீண்டும் பூ வைக்க நினைக்கின்றனர். இது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம் என்பது சொல்லாமல் விளங்கும்.

தாம் போற்றுவதாக காட்டும் தலைவரோ இலங்கை அரச வதைமுகாமில்.தாங்கள் வழி காட்ட சரணடைந்தவர்கள்.அவர்களின் மரணத்தையும்,அவர்கள் மேலான சித்திரவதைகளையும் மூடிமறைத்து புலத்து புலிகள் நடத்தும் பொறுக்கித்தனமான அரசியல் பிழைப்பு தமிழ் மக்கள் சார்ந்தல்ல.

இலங்கை அரசு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தங்கள் தலைவர்களை சரணடைய வைத்து காட்டிக்கொடுத்த கும்பல் தான் புலத்துப் புலித்தலைமை.சரணடைந்த தலைவரை கொன்ற செயலை கூட்டாக மறைத்து பொறுக்கித் தின்னும் பொறுக்கிகள் இவர்கள்.தங்கள் இழிவான அரசியல் பிழைப்புக்கு ஏற்ப காட்டிக் கொடுத்ததால் கொடுஞ் சித்திரவதையை சந்திக்கும் பொட்டரின் பெயரில் தமிழ்மக்களை ஏமாற்றி தின்ன மீண்டும் முனைகின்றனர்.

கடந்தகாலம் முழுவதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் போட்ட பாசிச ஆட்டத்தையிட்டு இந்த புலத்து புலிக் கும்பல் இன்று வரை வருந்தவில்லை.அதை மறந்து விடும்படியும் தங்களுக்கு தொடர்ந்தும் பணத்தை வாரி வழங்கும்படியும் கோரி ஆயிரம் குறுக்கு வழிகளில் தமிழ் மக்களை மீள மீள ஏமாற்றவே முனைகின்றனர்.

இந்த புலத்துப் புலிகளின் மோசடிகளை இனம் கண்டு கொள்ளாத வரை மக்களுக்கான உண்மையான குரல்கள் எழுவது என்பது தொடர்ந்து பல தடைகள் கொண்டதாகவே நீடிக்கும்.

எங்கள் தேசம்

Read more...

Sri Lanka hunts for Tiger overseas human trafficker


Security and intelligence agencies have turned the spot light on Ravi Shanker Kanagarajah alias Shangili, a most wanted transnational terrorist cum kingpin of overseas based human trafficking and illegal arms smuggling activities, the Defence Ministry said.


According to the Defence Ministry Ravi Shankar is also found to be the owner of MV Ocean Lady alias Princess Eashwary, vessels extensively used in human smuggling activities- in the LTTE’s overseas network based in Indonesia, Malaysia and Thailand. Earlier, on October 2009, Canadian immigration authorities arrested MV Princess Eashwary (MV Ocean Lady) while smuggling-in 76 bogus asylum seekers into Canadian waters from South Asia. The vessel "Princess Eashwary" is also said to be used extensively for gunrunning activities of the LTTE outfit, prior to its military defeat in May, 2009, the Defence Ministry said.


“His activities abroad have to be very closely monitored by the Law enforcement and intelligence agencies in the countries where he is taking shelter. It is the responsibility of such authorities to take him into custody and deport to Sri Lanka”, the Defence Ministry said.


According to the Defence Ministry, Sri Lankan Law enforcement authorities are working hand-in-hand with the concerned government’s for an extradition order on such criminals cum terrorists.


Ravi Shanker is a great threat for the security on the entire south Asian region. He is also one of the very important and most wanted figure in the organized crimes and human smuggling in the region, the Defence Ministry said.


Ravi Shanker alias Shangili is a Sri Lankan passport holder who had claimed bogus asylum to evade Canadian immigration authorities. He is a key LTTE gunrunner also allegedly engaged in human smuggling, who owns three vessels which are currently under operation and registered in Panama.

Read more...

Friday, October 9, 2009

“சுவிஸ்சுரேஸ்” சுத்துமாத்துப் பேர்வழி என்கிறது அறங்காவலர் சங்கம்..!


புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவைச் சேர்ந்த சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டமை. புங்குடுதீவுக்கும் புங்குடுதீவு வாழ்மக்களுக்கும் உதவப் போவதாக கூறிக்கொண்டு புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை.

மேல் மருவத்தூர் அம்மன் கோயிலை சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை. தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு மூலம் வெளியிட்டு மக்களிடம் பணம் சம்பாதிக்கின்றமை தொடர்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

வவுனியா நலன்புரி முகாம்களுக்கு எவரும் தன்னிச்சையாகச் செல்லவோ பார்வையிடவோ எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ முடியாதென்பதை குறிப்பிட்டு நாம் வெளியிட்ட இச்செய்தியினையடுத்து குறித்த சுவிஸ்சுரேஸ், வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகமே தங்களிடம் உதவி வழங்குமாறு கேட்டதென்றும் அதன் காரணமாகவே தாம் இறுவெட்டு(சீ.டீ)க்களை வெளியிட்டு இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றார்.

இதுதொடர்பில் வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரிடம் அதிரடி இணையதளத்தினர் உட்பட பல ஊடகங்களைச் சேர்ந்த பலரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு எவரும் தமக்கு உதவி செய்யவில்லையென்றும், லண்டன் கனகதுர்க்கையம்மன் ஆலய நிர்வாகமும், அவுஸ்திரேலியாவில் உள்ள ஓர் அமைப்பினரும் மற்றும் ஜெர்மனியிலிருந்தும் தனிப்பட்ட ஒருசிலருமே தமக்கு உதவி வருவதாகவும், சுவிசிலிருந்து எவரும் இவ்வாறான உதவிகளைச் செய்யவில்லையென்றும், சிவன்கோயில் நிர்வாகத்தினர் உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் தொடர்பில் சிவன்கோயில் நிர்வாகத்தினர் எழுத்து மூலமாகவும் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினரும், அதிலுள்ள அறங்காவலர் சபையினரும் வடக்கில் மோதல்கள் இடம்பெற்றவேளையில் மக்கள் பெருமளவில் வவுனியா நோக்கி இடம்பெயர்ந்தபோது பல்வேறு உதவிகளை செய்வதில் முன்நின்று செயற்பட்டவர்கள். இடம்பெயர்ந்த மக்களில் கர்ப்பணிகள், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்க்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றனர். தவிர இறுதிக்கட்ட மோதல்களின் போது மிகத் தொகையிலான மக்கள் வன்னியிலிருந்து ஒரேயடியாக இடம்பெயர்ந்தபோது அவர்களுக்கு சமைத்த உணவினை வழங்குவதில் கணிசமான பங்களிப்பினை சிவன்கோயில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர்.

தற்போதும் முகாம்களிலுள்ள முதியர்கள் பலரைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்ற இவர்களின் பணியானது மிகவும் வரவேற்கத்தக்கதும், நன்றியுணர்வோடு பாராட்டக்கூடியதுமான விடயமாகும். இதுதவிர தற்போது செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவரும் கர்ப்பிணிகள், தாய்மார் குழந்தைகளைக் கூட பொறுப்பெடுத்து உணவு உள்ளிட்ட உதவிகளைப் புரிந்த அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வரையிலான உதவிகளைச் செய்வதிலும் சிவன்கோயில் நிர்வாகத்தினர் கணிசமானளவு பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுவிஸ்சுரேஸ் போன்றவர்கள் சிவன்கோயில் நிர்வாகத்தினரின் பெயரை தமது சுயநலத்திற்காக பயன்படுத்துவதானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

சிவன்கோயில் நிர்வாகத்தினருக்கும் அறங்காவலர் சபையினருக்கும் சுவிஸ்சுரேஸ் உள்ளிட்ட குழுவினர் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இவ்வாறான செயலைப் புரிகின்றனர். தாம் சுருட்டிய மற்றும் சுருட்டவுள்ள பணத்தை சிவன்கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சேகரித்து வழங்கவுள்ளதாக பொய்க் கதையொன்றினை சோடித்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இதனை அதிரடி இணையதளமான நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவலநிலையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பெயரைப் பயன்படுத்தி சுயநலனுக்கான நிதிவசூல் செய்வது, மட்டுமல்லாது புனித சேவையைப் புரிகின்ற சிவன்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் சபையின் பெயர்களைப் பயன்படுத்துவது என்றுமே ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமல்ல என்பதையும் நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.

–அதிரடி இணையத்தினர்!!

Read more...

Wednesday, October 7, 2009

மீண்டும் ஒரு விக்கிரமாதித்தன் கதை - வாசித்து மகிழுங்கள்


மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.


மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?” என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!’

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

களத்தில் சார்லஸ் !

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’ என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். “மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!’ என்கிறார்கள் உறுதி குறையாமல்.


நெருடல் இணையம்

Read more...

தொலைக்காட்சி பார்க்கும்படி குறுந்தகவல் அனுப்பியது யார்

நேற்று முன்தினம் எஸ்.எம்.எஸ் மூலம் பரப்பப்பட்ட இரவு 8.15மணிக்கு தொலைக்காட்சி பார்க்கவும் என்ற செய்திக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


இலங்கை புரியும் சாதனையை தெரிந்துக் கொள்வதற்காக இரவு 8.15மணிக்கு தொலைக்காட்சியை பார்க்குமாறு தெரிவிக்கப்பட்ட இச்செய்தியால் பலத்த பரபரப்பு ஏற்பட்டது.


ஆனால் அது அரசாங்கத்தின் அறிவிப்பு இல்லையென மறுத்த அமைச்சர் யாப்பா இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். தாமோ அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரோ தொலைக்காட்சியை பார்க்கும்படி மக்களுக்கு அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லையென்றும் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

Read more...

Sunday, October 4, 2009

அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுங்கள்!!

எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகபிரதிநித்துவ, மந்தைத் தத்துவத்தினால் இன்று எமது தாயக மண்ணில் ஏற்படுத்தியுள்ள அவலநிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின், குழந்தைகளின், அப்பாவி மக்களின், சொந்தங்கள் சுற்றத்தினரின் உயிர்களை காவுகொண்ட இந்த திசைதவறிய ஆயுதப்போராட்டம் பல கோடி சொத்தழிவையும்,
என்றும் எம்தினத்தின் பெருமைக்குரிய அழியாச் செல்வமாகவும் அடையாளமுமாக இருந்த கல்வி வளத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி முட்கம்பி வேலிகளுக்குள் உணவுக்காக கையேந்தும் ஒரு இழிநிலையில் எமது இனத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதை இப்போதாவது விளங்கிக் கொள்வோம். புலிகளின் போராட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டு முள்ளிவாய்க்காலில் முடிந்து எஞ்சியோரை செட்டிகுளத்தில் அகதிகளாக கொண்டுவந்து நிறுத்தி விட்டிருக்கிறது. எனவே, இந்த மக்கள் இனியாவது சுதந்திரமாகவும், ஜனநாயகத்துடனும் வாழ வேண்டும். இவர்களை இன்னுமொரு மாயைக்குள்ளும், கனவுகளுக்குள்ளும் தள்ளிவிடுவதற்கு எத்தனிக்கும் எந்த அரசியல் தலைமைத்துவத்திற்கும் நாம் இடமளிக்கக் கூடாது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிப் பினாமிகள் சிலர் முகமூடி தரித்து நாடுகடந்த தமிழீழம் என்ற ஏமாற்று நாடகத்துடன் உங்களை மீண்டும் ஏமாற்ற தயாராகி விட்டார்கள். தாயக மக்களை மென்மேலும் அவலத்திற்குள்ளாக்கி அந்த அவலத்தை காட்டி மீண்டும் உங்களிடம் காசு, பணம் சேர்த்து தாங்கள் சொத்து சுகம் அனுபவிக்க புது வடிவம் எடுத்துள்ளார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தாயகத்தில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை, நல்வாழ்வு மற்றும் அவர்களுக்கான ஆறுதல்பற்றி கூட சிந்திக்காமல் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூசுதட்டி புதிய வடிவம் என ப+ச்சுற்றி நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் போகிறார்களாம். நீங்கள் கஸ்டப்பட்டு, வேர்வை சிந்தி, பல பிரச்சனைகளுடன் சம்பாதிக்கும் உங்களின் பணத்தை பிடுங்கவும் அதில் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கவும் மட்டுமே இந்த சுத்துமாத்துக்கள் என்பதை நீங்கள் உணராதவரை தாயக தமிழரின் இறந்த உடல்களை விற்று பிழைப்பு நடாத்தும் இவ்வாறான அயோக்கியர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமானது எமது மக்களின் விடுதலையைப் பெற்றுத் தரும் என்பதை மக்கள் நம்பத் தயாரில்லை. அவ்வாறாக முன்னெடுக்கப்படுகின்ற ஆயுதப் போராட்டங்களானது மென்மேலும் எமது இனத்தை அழிவுக்கே இட்டுச் செல்லும். வெறும் தமிழீழம் என்ற கோசத்தினால் எமது மக்களின் அவலநிலை இனிமேலும் தொடரக் கூடாது. இந்நிலையைத் தொடரவிடாது தடுக்க வேண்டிய தேவை எம்மனைவருக்கும் இருக்கின்றது.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயக வழிமுறைகளில் போராட வேண்டிய அவசியமும் எமக்குள்ளது. எமது உரிமைகளுக்கான ஒரு ஆரம்பப் படியாக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்தலாம். இது பற்றிய ஆராயலாம். இதன் ஊடாக 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், இன்னும் தேவையான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி ஆராய்ந்து அவற்றை உள்வாங்கச் செய்து நடைமுறைப்படுத்த அரசின் மீது அழுத்தங்களை பல்வேறு மட்டக்களிலிருந்தும் தரப்புகளிலிருந்தும் பிரயோகிக்கலாம். தமிழீழம், நாடுகடந்த தமிழீழம் என்ற கனவுலகில் சஞ்சரிக்காமல் தாயகத்து தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிசெய்ய வேண்டும்.

இதுவரை காலம் நாங்கள் ஒவ்வொருவரும் போராட்டத்திற்காக புலிகளிடம் கொடுத்த பணம் அந்த மக்களின் அழிவிற்கே வழிவகுத்தது என்பதை இப்போதாவது சிந்தித்து புரிந்துகொள்வோம். புலிகளின் இந்த திடீர் அழிவுடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பல பில்லியன் பெறுமதியான முதலீடுகளும் ஒருசில நபர்களின் கைகளில் அகப்பட்டுவிட்டுள்ளது. போராட்டத்திற்காக என சேர்த்த இந்தப் பணம் போராட்டத்தால் அழிவுகளைச் சந்தித்த அந்த மக்களின் துயரினை ஓரளவிற்காவது போக்ககூடிய வகையில் பயன்படுத்தப்படல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தினையும், சொத்துக்களையும் புலிகளின் புலம்பெயர் பொறுப்பாளர்களும், பினாமிகளும் தாம் பதுக்கிக் கொள்ளாமல் அவற்றை வெளிக்கொணர்ந்து தாயகத்தில் அவயங்களை இழந்து, வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கு செலவிடல் வேண்டம். ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், பாதிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் குடும்பத்திற்கும், அங்கவீனமாக்கப்பட்ட போராளிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டுமென ஒவ்வோர் புலம்பெயர் தமிழரும் புலம்பெயர் புலிகளிடம் வலியுறுத்த வேண்டும்.

மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்ற மாயைக்குள் மக்களைத் தள்ளாமல் அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும்பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்தவும் முன்நின்று செயற்படுவோம்.

“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) -நோர்வே

Read more...

Wednesday, September 30, 2009

மாவீரர்களை பிரதேச ரீதியாக , சாதிரீதியாக ஓரங்கட்டிய நோர்வே புலிகள்.

நோர்வேயில் பாதுகாப்பு பிரிவின் இரகசிய கவனிப்புடன் திலீபன், சங்கர், குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு தினங்கள் சென்ற சனிக்கிழமை (26.09.2009) ஒஸ்லோவில் நடைபெற்றது.




இந்த மூவரும் யாழ்பாணத்தை சேந்தவர்கள்.




ஆனால் இதே திகதியில் இதே காலப்பகுதியில் கடந்த 30 வருட யுத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த பல நுற்றுக் கணக்கான போராளிகள் நினைவுகூரப்படாது ஒஸ்லோவில் அவமதிக்கபட்டுள்ளனர்.


அன்றையதினம் (26.09.2009) கிளெநொச்சி நகர் மீட்பின்போது 403 போராளிகள் இறந்தனர் ஆனால் அவர்கள்ஒஸ்லோவில் நினைவு கூரப்படவில்லை.


லெப்.கேணல் சுபன் நினைவு தினம் 25ம்திகதி ஆனால்அவர் நினைவு கூரபடவில்லை.




அவருடைய படம் அகற்றபட்டிருந்தது அல்லது காணவில்லை.




முல்லை கடற்பரப்பில் நீரடி கரும்புலி தாக்குதல் நடாத்தபட்டபோது 3 கரும்புலிகளும் லெ.கேணல் சூட்டா நினைவுநாளும் அதே 26 திகதி.  ஆனால் அவர்களின் படங்கள் அகற்றபட்டிருந்தது.


இதற்கும் அப்பால் இதே வாரத்தில் நடந்த நகர்கோவில்பாடசாலை படுகொலையை நினைவுகூரத்தெரியாத நோர்வே புலிகள்




மூத்த உறுப்பினர் பரமதேவா


திருமலை மாவட்ட துனை தளபதி சுரேந்திரன்


மணலாறு மாவட்ட தளபதி அரவிந்தன்


ஆகியோரை அவமதித்து




அவர்களை மாவட்டரீதியாக ஒருங்கட்டி பிரதேச ரீதியாக புறந்தள்ளி




நோர்வெ புலிகள் யாழ்பாணத்து மாவிர்களுக்கு மட்டும் மாலைபோட்டு கூத்தாடினர்.


இவர்களின் படங்கள் இல்லை என்று நோர்வெ புலிகள் சொல்லவரலாம்.




இது பம்மாத்து




நோர்வே புலிகளிடம் எந்த இடத்தில் இத்தனை மாவீரர்களின் படங்களும்உண்டு என்பதனை இந்த செய்தி எழுதுபரால் காட்டமுடியும்.

Tamilnewsweb

Read more...

Tuesday, September 22, 2009

எஸ். எம். எஸ். ராசாக்களுக்கு.....

இன்றைய நாள் புலரும் முன்னரே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. நண்பர் ஒருவர் எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அது "AB + blood Required for a heart surgery in chennai. Please contact arun 98414XXXXX" . நான் தொடர்ந்து "ரத்த தானம்" செய்து வருவதாலும், AB + ரத்த பிரிவை உடைய, தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில் இருப்பதாலும் இது முக்கியமான குறுஞ்செய்தியாக எனக்கு பட்டது. எங்கே வர வேண்டும், என்றைக்கு தேவை படுகிறது, எவளவு தேவைபடுகிறது என்பதை அறிய குறுஞ்செய்தி அனுப்பிய நண்பரை தொடர்பு கொண்டேன். அவரோ தனக்கு தெரியாது எனவும், தனக்கு வந்த செய்தியை தான் எனக்கு பார்வர்ட் செய்ததாகவும் கூறினார். உடனே அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.


சற்று தாமதமாகவே எதிர் முனையில் இருந்தவர் "ஹலோ" என விளிக்கும் குரல் கேட்டது, தூக்கம் இன்னும் கலையவில்லை என்பது மட்டும் புரிந்தது . நான் மெதுவாக "சார் பிளட் வேணுமுன்னு மெசேஜ் வந்தது....." நான் முடிக்கவே இல்லை.... அதற்குள் அவர் "அது ஏதோ பரதேசி பய என்னோட நம்பர கொடுத்திருக்கான்............" திட்டி கொண்டே இருந்தார் . "ரொம்ப சாரி சார் டிஸ்டர்ப் பண்ணினதுக்கு" என்று கூறி இணைப்பை துண்டித்தேன்...


ஒரே நேரத்தில் அழுகையும் கோபமும் என்னையும் மீறி பீறிட்டு வந்தது.... எனக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நண்பரிடம் கத்தி தீர்க்க அலைபேசியை எடுத்து விட்டு பின் மனம் மறுதலித்ததால் "நீ அனுப்பிய குறுஞ்செய்தி பொய்" என்பதை மட்டும் செய்தியாகவே அனுப்பி வைத்தேன்.


இது போல் எண்ணற்ற குறும் செய்திகள் எனக்கு வருவது உண்டு, ஆனால் பெரும் பாலும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளவே முடியாது. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் என் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ உதவியும் செய்து இருக்கிறோம்.


அறிவியலின் அசுர வளர்ச்சியில் குறும் செய்தி ஒரு அற்புதம் என்பேன். அதே வளர்ச்சியை தன் சொந்த காள்புணர்ச்சியை வெளிப்படுத்த உபயோகிப்பவர்களை மனிதன் என்பதா?மிருகம் என்பதா ?


தயவு செய்து இது போன்று குறும் செய்திகள் வரும் பட்சத்தில் கூடிய மட்டும் நாமே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு செய்தியின் உண்மையை அறிந்து கொள்வோம், அதன் பின் நம்மால் நேரடியாக உதவ முடியா விட்டால் அதை பார்வர்ட் செய்வோம். இப்படி செய்யும் பட்சத்தில் நல்லதை நாம் செய்ய இயலா விட்டாலும் கெட்டதற்கு துணை போக வில்லை என்ற நிம்மதியாவது நம்மோடு இருக்கும்.


குறும் செய்திகள் வழியாக பரப்பப்படும் மோசடிகளை கீழே கொடுத்து உள்ளேன். இப்படி வரும் குறும் செய்திகள் 100% பொய் ஆனவை.


"pls forward and help... +9190477XXXXX. I am kavitha studiying 1st B.Sc ............. college, chennai. I lost my left eye in an accident. The operation cost 1 lakes. I dont know u but, if u send this sms i'll get 1 rs. If u have free sms plz fwd atleast 10 members. You dont neglect htis s tru. May God bless U 4 ever."


"Pls who love your mother ples help 2 dis mother. I am anitha 98947XXXXX? My son heart operation. I u forward dis mgs i will get 10 ps? I beg u 2 save my child plz"


எனவே இப்படி வரும் குறும் செய்திகளையும் அதை அனுப்பும் எஸ். எம். எஸ். ராசாக்களையும் முற்றிலும் புறக்கணிப்போம். நன்றி.



Read more...

Sunday, September 20, 2009

இன்று கனடாவில் நிதி சேர் நடையாம்

Read more...

Saturday, September 19, 2009

இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன்


இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர்.

வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர்.

ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரியர் ஹம்சாவிடம் பணம் பெற்ற குற்றச்சாடையும் முன்வைத்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களின் உணர்விகளின் மீது ஒரு போரையே தொடுக்குமளவிற்கு அம்சாவின் நிகழ்ச்சித் திட்டங்கள் அமைந்திருந்தன. நிதி வழங்கல், களியாட்டங்கள், ஐந்து நடசத்திர விடுதிகள் விருந்து, வியாபார உறவுகள் என்று போர்க்காலத்தில் தமிழகத்தின் கட்சி தலைவர்களைக் கையகப் படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டிவிடவும் ஹம்சாவின் முன்னெடுத்த நடவடிக்கைகள் அபாரமானவை.

தனது வரலாறு முழுவதும் தமிழ் உணர்வை மையப்படுத்தியே அரசியல் செய்த கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இலங்கை அரச அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பை வளர்த்தெடுப்பதிலும் கூட ஹம்சாவின் பங்கு முதன்மைப் படுத்தப்படாலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கை அரசு இனப்படுகொலையை எதிர்ப்பின்றி, எழுச்சிகள் பற்றிய பய உணர்வின்றி நடாத்தி முடிப்பதற்கு இவர் வகித்த பங்கிற்குப் பரிசாகவும் புலம்பெயர் தமிழ் மக்களைக் கையாளவும் ராஜபக்ஷ அரசால் இங்கிலாந்திற்கான துணைத்தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் ஹம்சா.

தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம் பெயர் தமிழ் அரசியற் சூழலிலும், அரசியல் முரண்பாடுகள் தெளிவாகத்தெரிய ஆரம்பித்துள்ள காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்க்கும், சரிக்கும் பிழைக்கும் இடையேயான போராட்டங்கள் தான் மக்களியக்கங்களின் வரலாறு. இங்கு நீதியின் பக்கத்திலும், உண்மையின் பக்கத்திலும் தம்மை நிறுத்திக்கொள்கின்றவர்களுக்கான அரசியல் தான் அதிகாரத்திற்கெதிரான அரசியல்.

இன்று கொடிய அதிகாரத்தை, அதிலும் மனிதப்படுகொலை நிகழ்த்திவிட்டு எந்தச் சலனமுமின்றி உலக அரங்கில் இறுமாப்புடன் உலா வருகின்ற ரஜபக்ஷ குடும்ப அரசை நியாயம் சொல்லும் ஒரு புதிய வியாபாரக் கூட்டம் இந்திய அரசியல் வாதிகளின் மத்தியில் முளைவிட்டிருப்பது போல புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் உருவெடுத்திருக்கிறது.

புலிகள் புலம் பெயர் தேச தமிழர்கள் மத்தியில் கோலோச்சிய போது, அவர்களின் கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை புலியெதிர்ப்பாக உருவெடுத்திருந்தது. இந்த அடக்கு முறையைச் அடிப்படையாகக் கொண்டு இணைந்து கொண்டவர்கள் பல சந்தர்பங்களில் பேரினவாத அடக்குமுறை குறித்துக் கூடக் கவலை கொண்டதில்லை.

இந்தப் புலியெதிர்ப்பு வட்டத்திற்குள் சந்தர்ப்ப வாதிகளும், அரசியல் வியாபாரிகளும், தன்னார்வ அமைப்புக்களின் பண முதலைகளும் கூட இணைந்து கொண்டனர்.

நீதியின் பக்கத்தில் நின்ற புலியெதிர்ப்பாளர்களோ புலிகளிடம் இலங்கை அரசிற்கெதிராகப் போராடும் உரிமையைக் கோரியே போராடினர். புலிகளின் போராட்டம் பாசிசத் தன்மை கொண்டது, இது அழிவிற்குத் தான் வழிகோலும் என்ற இவர்கள், இலங்கை அரசின் பேரின வாத அடக்குமுறைக்கு எதிராகப் போராட புலிகளிடம் உரிமை கோரியே புலியெதிர்ப்பாளார்களானார்கள்.

இவர்கள் எப்போதுமே அரச சார்பு நிலையோ அதிகாரம் சார்ந்த சந்தர்ப்ப வாதத்தையோ தமது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டதில்லை.

புலிகளின் அழிவின் பின்னர் சந்தர்ப்பவாத புலியெதிர்ப்பாளர்களும், சமூகவிரோதிகளும், இலங்கை அரசையும் ரஜபக்ஷ குடும்பத்தையும் நியாயப்படுத்தும் அரசியல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் ஒரு சாரார் இலங்கை அரசின் தொடரும் இனப்படுகொலைகள் குறித்து பேசக் கூடாது என்றும் அப்படிப் பேசினால் அவர்கள் தம்மை தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி புரிய அரசு அனுமதிக்காது என்றும் எந்தக் கூச்சமுமில்லாமல் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றனர்.

இவர்கள் தான் இன்று ஹம்சாவின் முதற் குறி. இம்மாதம் 3ம் திகதி லண்டனில் நிகழ்வுற்ற, தமிழ் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணிவந்த உபாலி குரே யின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஹம்சா, தனது அரசியல் பிரசன்னத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இதற்கு மறு நாளே வைற் சப்பல் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் மத நிகழ்விற்கு பல புலம் பெயர் தமிழ்ப் புலியெதிர்ப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு ஹம்சாவைச் சந்திப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு சென்ற பல தமிழ் ஜனநாயத் தூதுவர்கள் முன்வைத்த காரணம் இந்து இஸ்லாமிய மத ஒற்றுமை. இவ்வாறான நிகழ்வுகளை எட்டிக்கூடப் பார்த்திராத பல அரசியல் வியாபரிகளுக்கு மத ஒற்றுமை பளிச்சிட்டதோ ஹம்சாவின் வருகையோடு தான். தெருவோரங்கள் நாய்கள் நிணம் புசிக்கக் கொன்று போட்டுவிட்டு நியாயாயம் கூறும் ஒரு பௌத்த மேலாதிக்கவாத கொலைகாரக் கூட்டத்தின் இஸ்லாமியப் பிரதிநிதியோடு, இந்து அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்தும் மத ஒருங்கிணைப்பு கிரிமினல்களின் ஒன்று கூடலே தவிர வேறில்லை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மறுபடி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர் நாடுகளிலிருருந்து புலி எழுந்து விடுமாம். ஹம்சாவின் இங்கிலாந்துப் பிரசன்னமும் இந்த எச்சரிக்கையும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை.

புலம் பெயர் நாடுகளிலிருந்து புலி வருகிறதோ இல்லையோ, நிச்சயமாகப் புதிய கருத்துக்கள் வரும். நாளைய சமூகத்தின் மாபெரும் சக்தியாக இலங்கையில் நடாத்தப்படும் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிபிற்கும் நியாயம் கோரும் ஒரு சில மனிதர்களாவது வெளிவருவார்கள். அவர்களின் ஆரம்பம் ஹம்சாவிற்கு முளைத்திருக்கும் புதிய புலம்பெயர் வியாபார வால்களை அறுப்பதிலிருந்தே உருவாகும்.

இனி ஒரு இணையம்

Read more...

Thursday, May 14, 2009

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது.

அதிர்வு (athirvu.com) மற்றும் தமிழ்வின் (tamilwin.com) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும் அவர்களின் சடங்களில் இருந்து உடலுறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாகவும் படங்களோடு செய்திகளை வெளியிட்டு புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருந்தன.

இந்தப் படங்கள் குறித்து நேற்றைய (மே. 13) தினம் ஜிரிவி (GTV) முழு அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல உரையாடல்களை நிகழ்த்தி இருந்தது.

இந்திய வைத்தியசாலை ஒன்றில் சடலகங்களை எவ்வாறு போஸ்மார்ட்டம் செய்கிறார்கள் என்பதை விபரிக்க ஒரு ஆங்கில இணையத்தளம் 17, ஏப்ரல் 2008 இல் வெளியிட்ட படங்களை `சுட்டு` மேற்படி தமிழ் இணையங்கள் ஒரு `கப்சா` செய்தியை வெளியிட்டுள்ளன. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று அதிர்வும் (athirvu.com) தமிழ்வினும் (tamilwin.com) ‘பொலநறுவையில் தமிழ் இளைஞர்களின் பொலி போடப்படுவதாக’ வெளியிட்ட புகைப்படங்களை அடையாங்கள் காணுங்கள்.

http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

சில காலத்துக்கு முன்னர், கிளிநொச்சியில் சிறையுள்ளதாகவும் அங்குள்ள கைதிகள் நிர்வாணமாக உள்ளதாகவும் வெளியான படங்கள் கூட பொய்யானவை என்பதை புரிந்து கொள்ள `கூகுள்` இணையத்தில் சிலமணிநேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த வகையான பொய்ப் பிரச்சார செய்திகள் வெளியிடும் யுக்தியால் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை `காப்பாற்றி` விடலாமென நினைக்கும் இவர்களை மட்டுமல்ல தமிழ் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஐயோ………

நன்றி டெலோ நியூஸ்


Read more...

Monday, January 26, 2009

மக்களே விழிப்பாக இருங்கள்

"ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்"

"பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்"

"கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால்,500/ 1500 / 5000இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்"

"புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்"

இப்படிப்பட்ட வதந்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பரவப்பட்டு வருகின்றது.

கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, எப்படி 500/ 1500 / 5000இராணுவத்தினர் நீரில் மூழ்கி இறந்திருக்க முடியும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்...

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top