புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி
தாயகம், தேசியம் என்பனவற்றைப் உயிர் மூச்சாகக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மேற்படி தொலைக்காட்சியின் பங்குத்தாரர்களின் முடிவின் பிரகாரம் மேற்படி தொலைக்காட்சி அதன் இணை அமைப்புக்களாக இதுவரை இயங்கி வந்த சி.எம்.ஆர், சி.ரி.ஆர் வானொலிகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும்,
தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டு வரும் பணியை எந்தவித தடங்கலுமின்றி முன்னெடுக்கும் அதேவேளை, மக்களின் இடர்களைய தான் மேற்கொண்டுள்ள பணியையும் தொடர்ந்து செய்யும் எனவும் தெரியவருகிறது.
தமிழர் தேசிய தொலைக்காட்சியின் புதிய நிர்வாக இயக்குனராக மூத்த ஊடகவியலாளரான திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். தமிழர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அந்தத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளிற்கு பொறுப்பாக இருந்த திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள்,
தமிழ்மக்கள் போரின் பேரவலத்தைச் சந்தித்தப்போது அது தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி அதனை மக்கள் பால் சென்றடையப் பெரிதும் பங்களித்த ஒரு விடுதலை விரும்பியாவார். இவரைப் பற்றிய காழ்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மூன்று ஊடகங்களும் ஒரு நன்னம்பிக்கை நிறுவனத்தின் கீழ் வரும் பட்சத்தில் இணைந்து செயற்பட மேற்படி தொலைக்காட்சி விரும்புவதாகவும் தமிழ்த் தேசியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊடகம் தனியார் மயமாகும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே புதிய நிர்வாகம் பிரிந்து செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment