தொலைக்காட்சி பார்க்கும்படி குறுந்தகவல் அனுப்பியது யார்
நேற்று முன்தினம் எஸ்.எம்.எஸ் மூலம் பரப்பப்பட்ட இரவு 8.15மணிக்கு தொலைக்காட்சி பார்க்கவும் என்ற செய்திக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கை புரியும் சாதனையை தெரிந்துக் கொள்வதற்காக இரவு 8.15மணிக்கு தொலைக்காட்சியை பார்க்குமாறு தெரிவிக்கப்பட்ட இச்செய்தியால் பலத்த பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அது அரசாங்கத்தின் அறிவிப்பு இல்லையென மறுத்த அமைச்சர் யாப்பா இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். தாமோ அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரோ தொலைக்காட்சியை பார்க்கும்படி மக்களுக்கு அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லையென்றும் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment