மகளை சிகரெட்டால் சுட்ட தாய்க்கு 9 மாத சிறை
தனது மகளின் முதுகில் சிகரெட்டால் சுட்ட இளம் தாயொருவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
சார்லொட் சட்டன் (19 வயது) என்ற இந்தத் தாய் தனது 15 மாதக் குழந்தையின் அழுகுரலைப் பொறுக்க முடியாது மூன்று தடவைகள் அக் குழந்தையின் முதுகில் சிகரட்டால் சுட்டுள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணையொன்றின் போது சார்லொட், நீதிமன்றத்திற்கு வெளியே நின்றபடி 20 நிமிடங்களில் 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.
9 மாத சிறைத் தண்டனை விதித்து வொர் செஸ்டர் கிறவுண் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்ததையடுத்து சார்லொட் அலட்சியமாக தோளைக் குலுக்கியதாக கூறப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment