ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்
(அனந்த் பாலகிட்ணர்)
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.
உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இரு குழுவினருக் குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிbழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment