இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப மலேசியா நடவடிக்கை
மலேசியாவில் புகழிடம் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மீண்டும் அவர்கள் இலங்கைக்கு செல்லத் தயாராக இல்லை என தெரிவிப்பதாக மலேசிய மனித உரிமை கழகத்தின் தலைவர் சட்டத்தரணி க. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாச்சாப் உம்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகள் தற்போது கோலாலம்பூர் சர்வதேச விமானத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு திரும்ப அஞ்சுகின்றனர். நாடு திரும்பினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் எனவும் உள்துறை அமைச்சு அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது என ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment