ஆளும் தரப்பு மேடையில் திரைப்பட நடிகர் சனத் குணதிலக்க மெய்மறந்து ரணில் புகழ்பாடியுள்ளார்
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குணதிலக்க, 2002ம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்ததாகவும் ரணில் விக்ரமசிங்கவும், அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமும், விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் கருணாவை அந்த அமைப்பிலிருந்து பிரிப்பதில் வெற்றியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைய முடியாத வகையில், ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட நிலைமையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சனத் குணதிலக்கவின் இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சனத் குணதிலக்க, அரசாங்கத்திற்கு கடைக்குச் சென்றிருந்தாலும், தாம் யாருக்கு ஆதரவளிக்கின்றோம் என்பதை மறந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேடையில் இருந்தவாறு ஐக்கிய தேசியக் கட்சியை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment