43 இலங்கையர்கள் குவைத்திலிருந்து நாடு கடத்தல்
குவைத்தில் வீட்டுப் பணியாளர்களாகத் தொழில்புரியச்சென்று பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுள் 43 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (18) நாடு கடத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுள் 37 பெண்களும், ஆறு ஆண்களும் அட ங்குவர்.
குவைத் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட அவர்கள் குவைத் விமான நிலையத்தின் பின்புற நுழைவாயில் வழியாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட நிலையில் இலங்கைக்குத் திருப்பி அனு ப்பப்பட்ட இவர்கள் அடுத்த ஐந்து வரு டங்களுக்குக் குவைத்துக்குத் தொழில்புரிய செல்ல முடியாதென பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.
குவைத்துக்குப் பணிப் பெண்களாகச் சென்று ஓரிரு மாதங்கள் முதல் ஒன்றரை வருடம் வரை ஒப்பந்த காலத்துக்கு முன் னதாகவே பல்வேறு காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட நூற்றுக் கணக்கான பெண்கள் குவைத்தின் மூன்று சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுரிமையாளரின் கொடுமை தாங்காது வீட்டிலிருந்து தப்பியோடியவர்கள் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவ்வாறு தஞ் சமடைபவர்களை தூதரகத்தினர் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக் கானோர் ஒப்பந்த வீட்டிலிருந்து சென்று வேறு இடங்களில் தொழில்புரியச் சென்றதாலும் கைதாகியுள்னர். ஆண்களுள் சிலர் இவ்வாறு கைதானாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான 43 பேர் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர். இவர்களிடம் பெரிதாகப் பயணப் பொதியோ வேறு பொருள்களோ இருக்கவில்லை. சிலர் உடுத்த உடையுடன் காணப்பட்டனர். பெரும் பாலனவர்கள் மூன்று மாதம் மற்றும் ஒரு வருடத்திற்குள் கைதாகியுள்ளனர். எனினும் அவர்களுக்குரிய சம்பளப் பணமும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தனர். சிலரிடம் ஒரு குவைத் டினார் கூட இல்லையெனத் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், பொலிஸ் காவலில் இருந்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல பயண ஏற்பாடுகளும் பணமும் வழங்கப்படுவதாக குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.
குவைத்தில் சிக்கலுக்குள்ளாகும் இலங் கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் உரிய சேவைகளை வழங்குவதாகத் தூது வர் கே.எஸ்.சீ. திசாநாயக்க தெரிவித்தார். பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தலை யிட்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடு த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(குவைத்திலிருந்து விசு கருணாநிதி)
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment