ஜனாதிபதி சுயேற்சை வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்..
வடகிழக்கு பிரதேசமெங்கும் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனால் அமுல்படுத்தப் பட்டிருந்த 14ஆவது ‘திருத்த முடியாத” ஆட்சி அதிகார சட்டத்தை மீண்டும் நிலைநாட்டுவேன் -எம்.கே.சிவாஜிலிங்கம். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் பிரதம வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களால் ‘பிரபாகரனின் சிந்தனை” என்ற தலைப்பில் 14 அம்சதிட்டத்தை உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று, திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டிதுறையில் உள்ள வைரவர் கோயிலில் வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் விலக்கி வைக்கப்டுள்ளவரான ரெலோ உறுப்பினர் ஸ்ரீகாந்தா, இடதுசாரி முன்னனி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆயோருடன், சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
‘பிரபாகரனின் சிந்தனை” என்ற பேரில் 14 அம்சத்திட்டதை உள்ளடக்கியதாக இத்தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டு திரு. எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த 30வருடங்களுக்கு மேலாக நமது தேசிய தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்த நமது மக்கள் இன்று பல்வேறு வகையான சுதந்திரங்களை அனுபவிக்க வெளிக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக வன்னிமக்கள் இப்படியான சுதந்திரங்களை பெற்று வாழ்வது எதிர்காலத்தில் நமது இலச்சியமான தமிழீழத்தை அமைக்க முடியாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தும்.
வன்னி மக்கள் கடந்த 20வருடங்களுக்கு மேலாக தேசிய தலைவரை பாதுகாத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். தலைவர் அவர்களை விட்டுப் பிரிந்து இப்பொழுது தலைமறைவாக உள்ளதால் தலைவரை பாதுகாத்து வைத்திருந்த மக்கள் அவர் பிரிவால் கதிகலங்கி போய் உள்ளார்கள். இப்பொழுது அவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தெருத்தெருவாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் வருவார் அவர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தலைவர் கூறியதால் தான் நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். மகிந்தவும், சரத்பொன்சேகாவும் கூட்டுச்சேர்ந்து நமது தமிழ் இனத்தைக் கொன்று குவித்தவர்கள். மானமுள்ள எந்த தமிழனும் மகிந்த ராஜபக்சவையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டான்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் என்னை இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுவேட்பாளராக நியமித்து போட்டியிட வைப்பார்கள் என நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் அவர்கள் வேறு வழியில் செல்கிறார்கள். அவர்கள் நமது தேசிய தலைவரை மறந்து செயல்படுகிறார்கள் என நினைக்கின்றேன். அவரின் வழிகாட்டலிலேயே நாம் நான்கு கட்சியினர் ஒன்றுசேர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி கொண்டோம். இப்பொழுது இருப்பது தமிழ்தேசியக் கூட்டமைப்பல்ல. அது எப்பொழுதோ பிரிந்து விட்டது. இப்பொழுது இருப்பது இரா.சம்பந்தன் சேனாதிராஜா கூட்டமைப்பேயாகும்.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக வன்னியில் பிரபாகரன் காலத்தில் நடைமுறைபடுத்தப் பட்டிருந்த
1. 14ஆவது ‘திருத்தமுடியாத” சட்டத்துக்கு அமைந்த ஆட்சி அதிகாரத்தை தமிழீழ பிரதேசமெங்கும் நிலைநாட்டுவதோடு, எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபட்ட 14 அம்சதிட்டங்களையும் மூன்று மாதத்துக்குள் நடைமுறைப் படுத்துவேன்.
14ஆவது ‘திருத்த முடியாத” சட்டத்தின் உற்பிரிவுகள்..
ய. தமிழீழ பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளான (பேச்சுரிமை, தேர்தல் நடத்தும் உரிமை, கூட்டம் கூடுதல், அரசியல் கட்சியமைத்தல், இந்திய சினிமா பார்த்தல்.. ) யாவும் வழங்கப்பட மாட்டாது
டி. எட்டாம் வகுப்புக்கு மேல் யாரும் பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உ. 35வயதுக்கு மேற்பட்டவர்களே கல்யாணம் முடிப்பதற்கு உரித்துடையவர்கள்.
ன. ‘வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு சேவை” எனும் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்காக அழைக்கப்படுவார்கள்.
ந. தமிழீழ பிரதேசத்திலிருந்து யாரும் தமிழீழ காவல்துறையின் அனுமதியில்லாமல் வெளிப்பிரதேசங்களுக்கு பயணிப்பது மரணதன்டனைக்குரிய குற்றமாகும்.
க. தமிழீழ பிரதேசத்திற்குள் இருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் யாவும் தலைவருக்கே உரித்துடையவையாகும்.
2. வடகிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து இரானுவ முகாம்களும் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கிருந்து கொண்டு தமிழர்களை துன்புறுத்தி கொண்டிருக்கும் இராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்புவேன்
3. இராணுவத்தால் கட்டாயப்படுத்தி பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எதிர்கால மாவீரர்கள் 13,000பேரையும் விடுதலை செய்யபட்டு அவர்களுக்கு மீண்டும் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும்.
4. திருவேங்கடம் வேலுப்பிள்ளையாரின் 31ஆவது நினைவுதின விழாவை மாபெரும் விழாவாக நடத்துவேன். இந்த விழாவுக்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள தேசிய தலைவரின் உற்றார், உறவினாகள்;, நன்பர்கள், தேசபக்தர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.
5. வல்வெட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், அந்த துறைமுகத்தை கொழும்பு துறைமுகத்துக்கு ஈடான ஒரு துறைமுகமாய் மாற்றியமைப்பதோடு, புலிகளிடமிருந்த 14கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து வல்வெட்டி துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு வழிவகுப்பேன். வல்வெட்டிதுறை மக்களின் மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கு என்னாலான சகல உதவிகளையும் செய்யவுள்ளேன்.
6. மக்கள் பாவனைக்காக தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ள ஏ9பாதை மீண்டும் மூடி யாழ்பாண மக்களுக்கான சகல உணவு வினியோக வழிகளையும் தடை பண்ணுவேன்.
7. நமது தேசிய தலைவர் வன்னியில் எங்கெங்கு குடியிருந்தாரோ, அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அங்கே பாதாள மாளிகைகள் கட்டி அதை மக்கள் பார்வைக்கு முன் வைப்பேன்.
8. வடகிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்களை கைது செய்து, அவர்களிடமிருந்து அனைத்து ஆயுதங்களையும் களைந்து, அவர்களை சிறையில் அடைப்பேன்.
9. இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்தை உடனடியாக மூடி, இந்திய தூதரை நமது நாட்டிலிருந்து வெளியேற்றுவேன். எனிவருங்காலங்களில் இந்தியர்களுக்கு விசா வழங்கும் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்.
10. நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு தேசிய தலைவரால் செப்பப்பட்ட எதிரி, துரோகி, காட்டிக்கொடுப்பவன், ஒட்டுக்குழு, போன்ற தமிழ்சொற்களை ஈழத்தமிழ் இலக்கணச் சொற்களாக ஏற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வேன்.
11. கப்பம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற தொழில்களுக்கு மானியம் வழங்கி அத்தொழில்களை மக்கள் செய்வதற்கு பயிற்சியளித்து ஊக்குவிப்பேன்.
12. தமிழீழத்தில் கன்னிவெடி, மின்னிவெடி, கிளைமோர், கிரனைற் குண்டு தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகளை மீண்டும் உருவாக்குவேன்.
13. புலிஈழம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதோடு, படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் அமைப்பேன்.
14.மகிந்த ராஜபக்சவால் புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினருக்கான நினைவு சின்னத்தை உடனடியாக அகற்றி அதற்கு பதிலாக கடைசிக்கட்ட போரில் இறந்த நமது மாவீரர்களுக்கு அதே இடத்தில் நினைவுசின்னம் ஒன்றை எழுப்புவேன்.
இந்த எனது கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்மக்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் தமிழ்தேசியம், தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை, தமிழர்தாயக பிரதேசம் போன்ற நமது இலச்சிய கோட்பாட்டை சர்வதேசத்தினருக்கு பறைசாற்ற முடியும். சிங்களதேசத்தினர் நமக்கு எந்தவுரிமையைiயும் கடந்த 60ஆண்டுகளாக தரவுமில்லை, இனிவரும் காலங்களில் தரப்போவதுமில்லை. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அதனால்தான் நான் சுயேற்சை வேற்பாளராக ஐனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தேன். நான் எடுத்த இந்த நிலைப்பாட்டை தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதோடு அவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி… எம்.கே.சிவாஜிலிங்கம்.
(ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள போதிலும் நமது சிவாஜிலிங்கத்தார் எதனையும் இதுவரை வெளியிடாமல் இருப்பது நமக்கு மிகுந்த மனக்கவலையைத் தந்தது… பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையாரின் மரணச்சடங்கு, பிரபாகரனின் மாமியாரான சின்னம்மா ஏரம்பு அவர்களை மாலைதீவுக்கு கொண்டு சென்று உறவுகளிடம் ஒப்படைத்தது, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவை வெளிநாட்டில் அவரது மற்றையப் பிள்ளைகளிடம் அனுப்பும் அலுவல் என வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் இருப்பதால் (பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த புலியுறுப்பினர்களையும் இலங்கையில் அழித்தது போன்று தற்போது பிரபாகரனின் உறவினர்களையும் இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தும் கைங்கரியத்திலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளதால்) அவரது வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் அவர் சார்பில் எம்மால் தயாரிக்கப்பட்டது இது -கரிகாலன்!)
Athirady web
0 விமர்சனங்கள்:
Post a Comment