நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க.. புலிப்பினாமியின் ஒப்பாரி (வாசகர் ஆக்கம்)
கடவுளே! கடவுளே! கார்த்திகையும் வந்து விட்டது, இவன் காலகனிடம் சொல்லி என் கடவுளை திருப்பி அனுப்பி வைக்க மாட்டாயோ? கைகால் எல்லாம் நடுங்குது, கண்ணெல்லாம் சொருகுது, கடைக்கண் பார்வையிலே கதிகலங்கி போனவங்களெல்லாம் காறி துப்புறார் போல் தோணுது, ஐயோ தலைவா! நீ எங்கே ஐயா போய் தொலைஞ்ச? உன்னை கூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது.. ஏன் கூப்பிடணும்? உன்னை நம்பி என் தொழிலும் போச்சு.. வாங்கி வைச்ச என் வீடும் போகப் போகுது. ஐயோ இப்படி என்ன தனியா புலம்ப வைச்சிட்டேயே. ஐயா சாமி தலைவா நீ வருவியா? நீ எங்க வரப்போற அதுதான் மொத்தமா போய் சேர்ந்திட்டியே.. எனி நான் என்ன செய்வேன்? யாரை பார்த்தாலும் எங்கடா உன் தலைவன்? என்று நக்கலாய் கேட்க்கிறால் போல் தோணுது, அட அது கூட பரவாயில்ல தலைவர் உண்மையில பூட்டுக்கிட்டார் என்ற தெரிஞ்சா என் மனுசி கூட என்னை மதிக்காதே. அவள் அப்பவே சொன்னாள் தலைவர் நிலமை அவ்வளவு சரியில்ல முதல்ல மோட்கேட்ஸ் அலுவல மொத்தமா முடிச்சிட சொல்லி, நான் தான் என் தலைவன் என்ன கொக்கா? என சவால் விட்டேன் இப்ப என்னை மொக்கா தவிக்க வைச்சிட்டு போயிட்டேயே…
தமிழ் ஈழத்தை பொங்கலுக்கு தாறன் கொஞ்சம் மிஸ்சாயிட்டா புதுவருடத்திற்குகு தாறன் என்று நீ சொன்னதை நம்பித்தானே புது காரும் வாங்கினன், இனி என்னை நடையாய் நடக்க வைக்கிறதான் உனக்கு சந்தோசம் போல? என்ன செய்யிறது உன்னை வாய் விட்டு கிழிக்கலாம் எண்டா ஒருவேளை நீ உயிரோடு இருந்து தொலைச்சிட போற எண்டு பயமாயும் இருக்கிது. நீயாவது நீச்சல் தடாகத்தில் ஜாலியா நீச்சலடிச்சிட்டு போய் சேர்ந்திட்ட, இங்க நான் பார்த் ரப்ல்ல அரைவாசி உடம்பை நனைச்சதோடு சரி.. அப்படி உனக்கு என்ன கேடு வந்தது?
சண்டை பிடிக்க முடியலை எண்டா கொஞ்சநாள் சும்மா இருந்து தொலைச்சிருக்க வேண்டியது தானே. அதுதான் சரண்டர் அடைய தயார இருந்தனி தானே அதையாவது கொஞ்சம் முன்னாடி செய்திருக்கலாம் தானே! அவ்வளவு ரோசம்? இருந்தாலும் நீ சிங்களவன்கள் மேல இவ்வளவு நம்பிக்கை வைச்சது கொஞ்சம் ஓவரா தெரியல? அட உனக்குதான் என்ன கேடு வந்ததோ தெரியல போய் சேரணும் என்று முடிவாச்சு, என்ன இழவுக்கு உன் மொத்த குடும்பத்தையும் கடைசிவரைக்கும் உன்னோடையே வைச்சிட்டிருந்தே? உன் வாரிசு ஒண்டு ரெண்டு இருந்திருந்தாலே இந்த புலம் பெயர்ந்தகளை பேக்காட்டி கொஞ்ச நாளைக்கு நாங்களாவது சீவியத்தை நகர்த்தியிருக்க மாட்டோமா? அதுகூட உனக்கு பிடிக்கல..!
நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க. உனக்கு ரொம்பத்தான் நல்ல மனசு. இப்ப உனக்கு சந்தோசம் தானே?
பைத்தியகாரன் மாதிரி என்னை கண்டதையெல்லாம் உளறவைச்சிட்டு நீ பாட்டுக்கு சிவனேன்னு போய் சோந்திட்ட. இந்த கார்த்திகையும் வந்து போயிட்டு ஒரு கண்றாவியும் காணல. அட காசை வைச்சிட்டு எவ்வளவு ஆட்டம் போட்ட அதில உன்னை மாதிரி உருவத்தை உல்டா பண்ணி அதை முள்ளிவாய்க்கால குந்த வைச்சிட்டு நீ எஸ்கேப் பண்ணியிருக்க கூடாதா? அல்லது அந்த உல்டா கேசையாவது ஏதாவது பாரினுக்கு பார்சல் பண்ணியிருந்தையாவது அதை வைச்சிண்டு இந்த மாவீரர் நாளை அமர்க்களம் பண்ணியிருக்க மாட்டோமா? அதுசரி நீதான் செத்தும் கெடுக்கிற ஆசாமியாச்சே!
ஆனா ஒண்ணு மட்டும் நீ படு கில்லாடியா செய்திருக்க. அதுதானய்யா இந்த உன்னை நம்பிட்டிருக்க புலன் பெயர்ந்ததுகளை சொல்லுறன். ஆமா அதுகள் உன்னை நம்பினதால புலன் பெயர்ந்ததுகளா? அல்லது புலன் ஒண்டு இல்லாதலால அதுகள் உன்னை நம்பினதுகளா? அப்படி ஒரு வலசுகள் எதை சொன்னாலும் நம்புதுகள். எவ்வளவு கேட்டாலும் தருதுகள். அட நீதான் சீமான் உருவத்தில சீன் காட்டிற என்று சொன்னாலும் விசிலடிக்கிற வெங்கிடாந்திகளா இருக்கிதுகள். அட இதுகள் இருக்கேக்க நீ மகிந்தாவின் காலில விழுந்திருந்தாக்கூட அதுகள் தங்கள் பாட்டிற்க்கு உன் அரசியல் சாணக்கியத்தை புகழ்ந்து தள்ளிக்கொண்டு அள்ளி, அள்ளி தந்து கொண்டிருந்திருக்கும்.
எல்லாத்தையும் கோட்டை விட்டிட்டு போய் கோவணத்தோட படுத்திட்டேயே! அதுசரி மனசுக்குள்ள நீ என்ன பழனி முருகனன்ட நினைப்பா?
எல்லாம் இந்த புலன் பெயர்ந்ததுகளால வந்த வினை. அதுகள் பாட்டிற்க்கு உன்னை கடவுளா கும்பிட நீயும் தான் என்ன பண்ணுவ? முடிஞ்சத பேசி என்ன பிரியோசனம்? இந்த மாவீரர் நாளுக்கு உன்னால சில காரணங்களால வர முடியல (அட காரணங்கள் ஒண்டும் அதுகளுக்கு தேவையில்ல. அப்படி எது சொன்னாலும் என்ன தலைவா இதல்லெல்லாம் போய் எங்ககிட்ட சொல்லணுமா? நாங்க உங்க மேல வைச்சிருக்கிற மரியாதையை கேவலப்படுத்தாதேங்கோ என அழுதாலும் அழுதிடுங்கள்) அடுத்த கார்த்திகைக்கு நிச்சயம் வந்திடுவார் என்று சொல்லி சமாளிச்சிடுறோம். அடுத்த கார்த்திகைக்காவது வருவியா? நீ வராவிட்டாலும் வீட்டு மோட்கேட்ஸை முடிக்க பார்க்கிறன். முடியலையன்னா இன்னொரு கார்த்திகை வராமலா போகும், அதுவரைக்கும் புலம் பெயர்ந்ததுகளின் புலன் சரியாகமல் பார்த்துக் கொண்டிருப்பது அவ்வளவு ஒண்டும் கஸ்டமான காரியமல்ல…..!!
-சந்திரன்
நன்றி அடிரடி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment