வழமைக்கு மாறான மரண ஊர்வலம்
காலையில் அலுவலகத்திற்குப் போவதற்காக பெண்மணியொருவர் வீட்டுக்கு வெளியே வந்தபோது வழமைக்கு மாறான மரண ஊர்வலமொன்று அருகாமையில் உள்ள மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.
இரு நீண்ட பிரேதவாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இரண்டாவது பிரேத வண்டிக்கு பின்னால் இளம் பெண்ணொருவர் நாயொன்றுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் சில மீற்றர்கள் தொலைவில் 200க்கும் அதிகமான பெண்கள் ஒருவர்பின் ஒருவராக வரிசையாக வந்தார்கள்.
இதைப்பார்த்த பெண்மணிக்கு வியப்பாக இருந்தது. இத்தகைய ஒரு மரண ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்ட காரணத்தை அறிய விரும்பி இரண்டாவது பிரேதவாகனத்தின் பின்னால் நாயுடன் வந்துகொண்டிருந்த பெண்ணை அணுகி முதலில் அனுதாபத்தை தெரிவித்துவிட்டு "இத்தகைய ஒரு மரண ஊர்வலத்தை நான் முன்னர் பார்த்ததேயில்லை. இது யாருடைய மரண ஊர்வலம்" என்று வினவினார்.
"இது எனது கணவருடைய மரண ஊர்வலம்"
"அவருக்கு என்ன நேர்ந்தது?"
"எனது நாய் அவரை கடித்துக் குதறிகொன்றுவிட்டது"
"சரி, இரண்டாவது வாகனத்திற்குள் யாருடைய சடலம் வைக்கப்பட்டிருக்கிறது?"
"எனது கணவரின் தாயாருடைய சடலம். கணவரைக் கடிப்பதற்காக நாய் அவர் மீது பாய்ந்தபோது அவருக்கு உதவுவதற்கு ஓடிச்சென்ற மாமியாரையும் நாய் கடித்துக் கொன்றுவிட்டது".
சற்று நேரமௌனத்தின் பின்னர் பெண்மணி கேட்டார். "இந்த நாயை எனக்கு சில நாட்களுக்கு வாடகைக்கு தரமுடியுமா?"
"அப்படியானால் பின்னால் வந்து கொண்டிருக்கும் பெண்களின் வரிசையில் போய் நீங்களும் சேருங்கள்" என்று பதில் வந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment