மாஸ்கோவில் அமெரிக்கர் குப்பை கொட்டிய இடம்
அமெரிக்க உல்லாசப்பிரயாணி ஒருவர் ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அவர் தங்கியிருந்தார்.
மாஸ்கோவில் பல இடங்களையும் சுற்றிப்பார்வையிடுவதற்காக அடிக்கடி வெளியே செல்லவேண்டியிருந்ததால் தான் தங்கியிருந்த வீட்டை ஒழுங்காகத் தினமும் துப்பரவு செய்ய அவரால் முடியவில்லை.
குப்பைகள் குவியலாகச் சேர்ந்துவிட்டன. ஒரு நாள் வெளியில் எங்கும் போகாமல் வீட்டைத்துப்பரவு செய்து குப்பைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வெளியே போனார். எங்கே இவற்றைக் கொட்டுவதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து குப்பையைக் கொட்டுவதற்குரிய இடத்தை தேடிக்கொண்டிருந்த அவரை மாஸ்கோ பொலிஸ் அதிகாரியொருவர் இடைமறித்தார்.
என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்ரு பொலிஸ் அதிகாரி கேட்க அந்த அமெரிக்கர் குப்பையை எங்கே கொட்டுவதென்று தெரியாமல் அலைகிறேன் என்ரு பதிலளித்தார்.
"சரி நான் உங்களுக்கு இடம் காட்டுகிறேன். அங்கே நீங்கள் குப்பையைக் கொட்டலாம்" என்று கூறி பொலிஸ் அதிகாரி அமெரிக்கரைக் கூட்டிச்சென்றார்.
பொலிஸ் அதிகாரி மிகவும் அழகான புற்தரையும் ரம்மியமான பூச்செடிகளும் நிறைந்திருந்த இடமொன்றுக்கு அமெரிக்கரைக் கூட்டிச்சென்று அங்கே குப்பையைக் கொட்டுமாறு கூறினார்.
இந்த அழகான துப்பரவான இடத்திலேயா குப்பையைக் கொட்டுவது என்ரு அமெரிக்கர் கேட்க அதுதான் ரஸ்யர்களின் பண்பு என்று பொலிஸ் அதிகாரி பதிலளித்தார்.
அழகான பூச்செடிகளுக்கு மேல் குப்பையை கொட்டிவிட்டு வந்த அமெரிக்கர் குப்பை கொட்டுகிற இடத்தைக் கூட ரஸ்யர்கள் இவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்களே என்று மகிழ்ச்சியடைந்தார்.
தனது மகிழ்ச்சியை தெரிவித்த அமெரிக்கர் இறுதியில் இது எந்த இடம் என்று பொலிஸ் அதிகாரியைக் கேட்டார்.
பொலிஸ் அதிகாரியிடமிருந்து பதில் வந்தது "இது அமெரிக்கத் தூதரக வளாகம்" என்று.
0 விமர்சனங்கள்:
Post a Comment