Sunday, January 3, 2010
அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
முட்கம்பிகள் நீக்கி
முகாமில் முடங்கிய மக்களுக்கு
நடமாட முழுச் சுதந்திரம்
தலைநகரை தரிசிக்க
தடைகள் பல நீக்கி
தாராள போக்குவரத்திற்கு
தரைவழிப் பாதை தயார் நிலையில்
உதரப் பசி போக்கும்
உலருணவு சுமந்த ஊர்திகள்
ஏ - ஒன்பது வழியாக
ஊடறுத்து செல்ல உத்தரவு
வடக்கும் தெற்கும்
வாரியணைத்து குதூகலிக்கும்
வளமான திட்டங்கள்
வருங்கால தேர்தலில்
வாக்குகளை வசீகரிக்கும்
வியூகம் என்ற சேதி
பொக்கை குவித்த புன்னகைக்கும்
மழலையும் அறியுமென்று
அறிவாரோ!
மங்களம் மனோரஞ்சன்
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment