அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு, அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் இது தொடர்பாக அவதானமாகவிருக்குமாறு பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்ததுடன், இரு முறைப்பாடுகள் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அரசியல் கைதிகளை விடுதலைசெய்து தருவதாகக் கூறி அவர்களது உறவினர்களிடம் ஏமாற்றிப் பணம்பறிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. இந்த மோசடி தொடர்பில் எனது அலுவலகத்துக்கு இரு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இளம் பெண் ஒருவரிடம் அவரின் கணவனை விடுதலை செய்து தருவதாகக் கூறி 11லட்சம் ரூபா பெறப்பட்டுள்ளது. அதுபோல் தமது குடும்பத்தை முகாமிலிருந்து வெளியிலெடுத்து இந்தியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 5 இலட்சமும் ஒன்பது பவுண் தாலிக் கொடியும் பெறப்பட்டு ஏமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முறைப்பாடு கிடைத்துள்ளது. அண்மையில் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபா மோசடி யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளது. எனவே, தயவுசெய்து இந்த ஏமாற்றுப் பிரகிருதிகளிடம் ஏமாற வேண்டாமெனக் கேட்கின்றேன். கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment