கைதாகி விடுதலையான வைத்தியர் சிவபாலன் தாம் சித்திரவதை செய்யப்படவில்லையென தெரிவிப்பு
வடக்கே புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதிநாட்களில் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது கைது செய்யப் பட்டிருந்தனர். அரச மருத்துவர்கள் நான்குபேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார். தடுப்புக் காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒரு லட்சரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மாதம் ஒருமுறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment