விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவில் மனித கழிவு
ஹோட்டலொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சோற்றில் மனிதக் கழிவுகள் காணப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்ட அதன் உரிமையாளருக்கு கல்கமுவை நீதிவான் 15ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கல்கமுவை நகரிலுள்ள உணவகமொன்றின் உ?மையாளரான எம்.ஐ.எஸ். தாவுஸ் என்பவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கிரிபாவ பொதுச் சுகாதார ப?சோதகர் கே.டி.ஜி. இரத்நாயக்க, இந்த உணவகத்தை பரிசீலித்து சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தண்டத்தை விதித்த கல்கமுவை நீதிவான் புத்தித்த சீராக ஒரு வார காலத்தினுள் உணவகம் தரமுயர்த்தப்பட வேண்டுமெனவும், அதுவரை உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
கல்கமுவை நகரிலுள்ள உணவகங்களில் தூய்மை பேணப்படுவதில்லை.
பொதுமக்கள் தெரிவித்த புகார்களை அடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவொன்று தற்போது இங்கு திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment