உலக கை கழுவும் தினம்
பங்களாதேஷின் 73,000 பாடசாலைகளைச் சேர்ந்த 16 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் நேற்று புதன்கிழமை உலக கை கழுவல் தினத்தை கைகளைக் கழுவி வரவேற்றனர்.
பங்களாதேஷ் சிறுவர்களை பலி கொண்டு வரும் பிரதான நோய்களான வயிற்றோட்டம் மற்றும் நிமோனியா என்பனவற்றுக்கு அழுக்கடைந்த கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
வயிற்றோட்டத்தால் பங்களாதேஷில் வருடாந்தம் 5 வயதுக்கு கீழான 35,000க்கும் அதிகமான பிள்ளைகள் இறப்பதுடன் ஒரு நாளுக்கு சராச? 100 பேர் வரை மரணிக்கின்றனர் என யுனிசெப் தெரிவிக்கிறது.
இந்நிலையில் கரங்களைக் கழுவி சுத்தமாகப் பேணுவதன் ?லம் அங்கு இடம்பெறும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மரணங்களைத் தவிர்க்க ?டியும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment