கொழும்பிலும் மன்னாரிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத்தாக்குதல்: கொழும்பில் மக்கள் பதற்றம்
10/29/2008 தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியிலும் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியிலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் இரவு 11.28 மணியளவில் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியில் தாக்குதல்கள் நடத்தியாதாகவும் அதனையடுத்து புலிகளின் விமானத்திற்கு படையினர் கொழும்புத்துறைமுகம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இரவு 11 மணியளவில் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின்; விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த சேதமும் இல்லை என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துதுள்ளன. இதனையடுத்து கொழும்பில் முழுமையாக மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது.
பாரிய சத்தங்களுடன் பல நிமிடங்கள் தொடர்ச்சியான படையினரின் வான் நோக்கிய தாக்குதலில் கொழும்பு மற்றும் கொழும்பையண்டிய பகுதிகளில் மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகியிருப்பாதாக தெரியப்படுகிறது.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment