உலகிலேயே முதன் முதலில் ஒட்டக பால் சொக்லெட் அறிமுகம்
உலகிலேயே முதல் முறையாக ஒட்டக பாலில் செய்த சொக்லெட் விற்பனைக்கு வந்து உள்ளது. இந்த சொக்லெட்டுக்கு அல் நாஸ்மா எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இது தயாராகி உள்ளது. அல் நாஸ்மா (Al Nassma) என்ற அரபு வார்த்தைக்கு பாலைவனதென்றல் என அர்த்தம், இப்போது பிற நாடுகளிலும் இந்த சொக்லெட்டை அறிமுகம் செய்ய அல் நாஸ்மா நிறுவனம் விரும்புகிறது.
சாதாரண சொக்லெட்களை விட சுவையிலும் இனிப்பிலும் இந்த சொக்லெட் கலக்குகிறதாம்.
ஆகவே இதன் விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆம்... ஒரு சொக்லெட் வாங்க ரூ. 1000 தேவை.
இப்போது ஸ்பெ ஷலாக ஆர்டர் தருவோருக்கு மட்டமே இந்த சொக்லெட்கள் வழங்கப்படு கின்றன. ""இந்த சொக்லெட் மிகப் புது மையானது. அரேபியாவின் இனிப்பு தூதராக உலகை வெல்லக்கூடியது'' என்கிறது அல் நாஸ்மா நிறுவனம்.
உலகில் யாருமே ஒட்டக பாலை பயன்படுத்தி சொக்லெட் தயாரித்தது கிடையாது. ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டு இருப்போரும் சொக்லெட் துறையினரும் சந்தித்தவுடனே திட்டம்தயாரானது'' என்கிறார் அல் நாஸ்மா நிறுவன முகாமையாளர் மார்ட்டின் வான் ஆல்ம்ஸ்டிக்.
இந்த சொக்லெட் தயாரிக்க 3 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பாக பல முறை தப்பும் தவறுமாக சொக்லெட் தயாரானது.
அதில் கிடைத்த பாடங்களைக் கொண்டு இறுதியாக சுவையான சாக்லெட்டை தயாரித்து உள்ளோம் என்கிறது இந்நிறுவனம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment