அரியாலையில் நேற்று இளைஞர்கள் இருவர் மரணம்; ஒருவர் ‘சயனைட்’ அருந்தினாராம்; மற்றவர் சூட்டுக்குப் பலி!


அரியாலை, முள்ளிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெற்ற சம் பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் ‘சயனைட்’ உட்கொண்டு மரணமானார். மற்றொரு இளைஞன் படையினரின் சூட்டுக்கு இலக் காகி மரணமானார். இச் சம்பவம் தொடர்பாக யாழ்.நீதிவான் இ.வசந்தசேனன் சம்பவ இடத்தில் நேற்று மாலை விசாரணைகளை மேற் கொண்டார்.குறிப்பிட்ட பகுதியில் படையினர் ரோந்து சென்றனர். அந்தப்பகுதியில் உள்ள பற்றைக்குள் பதுங்கியிருந்த நால் வரைக் கண்ட படையினர் அவர்களை விசா ரணை செய்ய முற்பட்டனர்.
அப்போது ஒருவர் ‘சயனைட்’ அருந்தி அந்த இடத்திலேயே மரணமானார்.
மற்றைய மூவரும் தப்பி ஓடினார்கள். படையினர் அவர்களைக் கலைத்துச் சென் றனர் அவர்களில் ஒருவர் படையினரை நோக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்டு ஓடினர். படையினர் அவர் மீது பதில் தாக்குதலை நடத்தினர். அப்போது அவர் கொல்லப் பட்டார்.
‘சயனைட்’ அருந்திய இளைஞனிடம் இருந்து யாழ்.பல்கலைக்கழக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டன.
அந்த அடையாள அட்டைகளின் மூலம் அவர் யாழ்.பல்கலைக்கழக பீடத்தின் மூன்றா வது ஆண்டு மாணவன் செல்லத்துரை புரு ஷோத்தமன் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது- இவ்வாறு நீதிவான் விசார னையின் போது பொலிஸார் தெரிவித் தனர்.







0 விமர்சனங்கள்:
Post a Comment