மும்பாய் தாக்குதலில் பத்திரிகையாளர் பலி
மும்பாய் பயங்கரவாதிகள் தாக்கு தலில் பிரபல ஆங்கில பத்திரிகையில் பணிபுரிந்த சபீனா சேகல் சைக்கியா பலியானார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபீனா சேகல். திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தாஜ் ஓட்டலில் தங்கி யிருந்தார். இவர் இருந்த அறை மீது, பயங்கர வாதிகள் கையெறி குண்டு களால் தாக்கினர். குளியலறையில் பதுங்கி இருந்த படி மொபைல் போன் மூலம் தனது கணவருக்கு தகவல் சொல்லியுள்ளார். நேற்று தாஜ் ஓட்டலில் அதிரடி நடவடிக்கைகள் முடிந்து சடலங்கள் மீட்கப்பட்ட போது, உடல் சிதைந்த நிலையில் சபீனா இறந்து கிடந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment