இதுதான் உண்மையான ரத்தபாசம்
இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார்.
இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல ஷூ பாலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment