"ஜுராஸிக் பார்க்' புகழ் எழுத்தாளர் கிரிச்டன் மரணம்
உலகப் பிரபல "ஜுராஸிக் பார்க்' நாவல் எழுத்தாளர் மைக்கல் கிரிச்டன், தனது 66 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக மர ணமானார்.
அவருடைய "ஜுராஸிக் பார்க்' நாவலைப் போன்றே "கொங்கோ' மற்றும் "டிஸ்குளோஸர்' உட்பட அவரது அனைத்து நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.
அவருடைய நாவல்கள் ஒவ்வொன்றும் 150 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
அத்துடன் பிரபல அமெரிக்க மருத்துவமனை தொலைக்காட்சி நாடகத் தொடரான "ஈ.ஆர்' (ER) இவரின் சிருஷ்டிப்பிலேயே உருவானமை குறிப்பிடத்தக்கது.
அவரது புதிய நாவல் ஒன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிரிச்டனின் மரணத்தையடுத்து அவ்வெளியீடு பிற்போடப்பட்டுள்ளது.
அவரால் எழுதப்பட்ட ஏனைய நாவல்களில், "ஒட்ஸ் ஒன்' (1996), "த அன்ட்ரோமெடா ஸ்றெயின்' (1969), "த கி ரேட் ட்ரெயின் ரொபரி' (1975), "த லொஸ்ட் வேர்ல்ட்' (1995), "டைம் லைன்' (1999), "ஸ்டேட் ஒப் பியர்' (2004), "நெக்ஸ்ட்' (2006) என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment