வேகமாக வந்த புகையிரதத்தின் கீழ் சிக்கி உயிர் பிழைத்த நபர்!
அதி வேகத்துடன் பயணித்த புகையிரதமொன்றின் அடியில் சிக்கிய நபர் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் அமெரிக்க வட அலபாமாவில் இடம்பெற்றுள்ளது.
ஆர்னோல்ட் ரொமைன் (61 வயது) என்ற அந்த நபர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த போது, மேற்படி புகையிரதம் வேகமாக வந்ததாகவும், இந்நிலையில் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் புகையிரதத்தை நிறுத்தக் கோரி எச்சரிக்கை ஒலி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
வேகமாக வந்த நிலக்கரி சரக்கு புகையிரதம் உடனடியாக தனது வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில், மேற்படி நபரை கடந்து சென்றுள்ளது.
8 புகையிரத பெட்டிகள் ஆர்னோல்டின் உடலைக் கடந்து சென்றதையடுத்தே புகையிரதம் நிறுத்தப்பட்டது.
ஆனால், ஆர்னோல்ட் அதிசயிக்கத்தக்க வகையில் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவத்தையடுத்து அவர் ஹன்ட்ஸ்வில்லே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
எனினும், இந்த சம்பவத்தின் போது ஆர்னோல்ட் ஏன் தண்டவாளத்தில் இருந்தார் என்பது குறித்து சரியாகத் தெரிய வரவில்லை என அந்நாட்டு தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment