களனிதிஸ்ஸ, தள்ளாடி மீது விமானத் தாக்குதல் நடந்தது எப்படி?
மன்னார் தள்ளாடி இராணுவத் தலைமையகம் மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய செய்தியொன்றை ஆங்கில ஊடகமான டெய்லிமிறர் வரைபடங்களுடன் வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 29ஆம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் இரணைமடுவிலிருந்து புறப்பட்டதுடன், 10.10 மணிக்கு 57வது இராணுவப் படைப்பிரிவின் ராடர் கருவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விமானம் மன்னார் நோக்கியும் மற்றைய விமானம் கொழும்பு நோக்கியும் வந்துள்ளன.
ஒரு விமானம் மன்னார் நோக்கியும் மற்றைய விமானம் கொழும்பு நோக்கியும் வந்துள்ளன.
மன்னார் நோக்கிச் சென்ற விடுதலைப் பலிகளின் விமானம் இரவு 10.28-10.32 மணியளவில் தள்ளாடி இராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இரணைமடுவுக்குத் திரும்பிவிட்டதாகவும், விடுதலைப் புலிகளின் விமானங்கள் ராடர் கருவிகளில் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இரவு 10.20- 10.40 மணியளில் கட்டுநாயக்கவிலிருந்து எவ்-7 தாக்குதல் விமானம் வன்னிநோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகவும் டெய்லிமிறர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளாடி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விமானப்படையினரின் விமானங்கள் இரணைமடு விமான ஓடுதளம் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேநேரம், இரணைமடுவிலிருந்து புறப்பட்ட மற்றைய விமானம் கொழும்பு நோக்கு வந்துள்ளதாகவும், கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள வான் பாதுகாப்புக் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் டெய்லிமிறர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் கொழும்புத் துறைமுகத்தை இலக்காகக் கொண்டிருந்தபோதும் உடனடியாகத் தனது பாதையை மாற்றிக்கொண்ட அந்த விமானம் களனி ஆற்றின் மேல் பயணித்து இரவு 10.30 மணிக்கு களனிதிஸ்ஸ மின்நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ மின் நிலையம் மீது தாக்குதல் நடத்திய விமானம் இரணைமடுவுக்குத் திரும்பிச்சென்றபோது விமான ஓடுதளம் மீது விமானப்படையினர் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்ததால், விமானத்தின் பாதை மாற்றப்பட்டு முல்லைத்தீவில் அது தரையிறக்கப்பட்டதாக டெய்லிமிறர் பத்திரிகை வரைபடங்களுடன் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஐஎன்லங்கா இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment