ஹிட்லர் என்ற பெயருக்கு கேக் கிடையாது
Heath Campbell, left, and his wife Deborah, were told that a store in Greenwich, N.J. would not inscribe their three-year-old son's full name, Adolf Hitler Campbell, center, on a birthday cake.
ஹிட்லர் என்ற பெயர் வைத்துள்ளவருக்கு இங்கு கேக் விற்பது இல்லை என்று அமெரிக்காவில் உள்ள கடை ஒன்றில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியு ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹன்டர்டன் நகரில் வசிப்பவர் ஹீத் கேம்ப்பெல்(35) (Heath Campbell ). இவரது மனைவி டெபோரா(25) (Deborah). இவர்களுக்கு 3 குழந்தைகள். மூத்த மகனின் பெயர் அடால்ப் ஹிட்லர் கம்பெல் (Adolf Hitler Campbell).
ஜெர்மன் சர்வாதிகாரியான அடொல்ப் ஹிட்லரின் பெயரை தங்கள் மகனுக்கு சூட்டி இருந்தனர்.
கடந்த வாரம் அவனது 4வது பிறந்தநாளை கொண்டாடினர். பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்யும் போது பிரச்னை எழுந்தது. தங்கள் வீட்டில் உள்ள "ஷாப் ரைட் (ShopRite)" என்ற சூப்பர் மார்க்கெட்டின் பேக்கரி பிரிவில் கேக் ஆர்டர் செய்ய போன் செய்தார் டெபோரா. அப்போது, கேக்கில் எழுதுவதற்காக தன் மகனின் பெயரை சொன்னார்.
உடனடியாக, ஹிட்லர் என்ற பெயர் உள்ளவர்களுக்கு எல்லாம் கேக் விற்பது இல்லை என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். இதனால், மனவேதனை அடைந்த டெபோரா, வேறொரு கடையில் கேக் வாங்கி மகனின் பிறந்த நாளை கொண்டாடினார்.
இது பற்றி ஹீத் கூறுகையில், "என் மூதாதையர்கள் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள். என் மகனின் பெயர் விநோதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை வைத்தேன். ஹிட்லர் என்பது ஒரு பெயர். அதை வெறும் பெயராகதான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சர்வாதிகாரி ஹிட்லரோடு என் 4 வயது மகனையும் தொடர்பு படுத்தி பார்ப்பது சரியில்லை என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment