இஸ்ரேலின் வெறியாட்டம்
கடந்த மூன்று தினங்களாக இஸ் ரேல் காஸாவில் நடத்தும் தாக்கு தல் முன்னொருபோதும் இல்லாத அளவுக்குக் கொடூரமானதாக உள்ளது. இலக்கெதுவும் இல்லாமல் கண்மூடித்தன மாக இஸ்ரேல் வீசிய குண்டுகளால் முன் னூறுக்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள் ளனர். காயப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்போல் தெரிகின்றது.
ஹமாஸ் போராளிகளே தாக்குதலினால் பாதி ப்புக்கு உள்ளாகியவர்கள் எனக் கூறுவதன் மூலம் உலக நாடுகளின் கண்ணில் மண் ணைத் தூவுவதற்கு இஸ்ரேல் முயற்சிக்கின்ற போதிலும் உண்மையை மறைக்க முடியாது. சின்னஞ்சிறு பாலகர்களும் வயோதிபர்களும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறும் காட்சிகளைச் சகல நாடுகளிலும் மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கின்றார்கள். இஸ் ரேலின் குண்டுகளால் காஸா முழுவதும் பற்றியெரியும் காட்சியையும் தொலைக்காட் சிகள் ஒளிபரப்புகின்றன.
ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் என்று இஸ்ரேல் கூறுவதில் எவ்வித உண் மையும் இல்லை. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக் கலாம். ஆனால் மரணமடைந்தவர்களிலும் காய ப்பட்டவர்களிலும் மிகப் பெரும்பாலா னோர் சாதாரண மக்கள்.
மோசமான காய ங்களுக்கு உள்ளாகியவர்கள் அவசர சிகிச்சை க்காக எகிப்திலுள்ள வைத்தியசாலைகளுக் குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அத ற்கு இடமளிக்காதவகையில் இஸ்ரேல் நேற்று அதிகாலை முதல் எகிப்துடனான எல்லைப் பகுதியில் சரமாரியான குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்துக்கு ஆயுதங் கள் வருவதைத் தடை செய்வதே இந்தக் குண்டுத்தாக்குதலின் நோக்கமெனக் கூறப்ப ட்ட போதிலும், காயமடைந்தவர்களை எகிப்துக்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதே உண்மையான நோக்கம்.
றிசேர்வ் படைவீரர் ஆறாயிரம் பேரை உடனடியாகக் கடமைக்கு வருமாறு இஸ் ரேல் அழைத்திருக்கின்றது. காஸாவுக்குள் தரை மார்க்கமாகப் படைகளை அனுப்பு வதற்கான ஏற்பாடாகவே இது உள்ளது.
நடக்கின்ற சம்பவங்களை ஒட்டுமொத்த மாகப் பார்க்கும் போது, காஸாவைக் கப Zகரம் செய்யும் நோக்கத்துடன் இஸ்ரேல் செயற்படுவது தெளிவாகத் தெரிகின்றது. இஸ்ரேல் பின்புல ஆதரவு இல்லாமல் இந்த வகையில் செயற்பட முன்வந்திருக்காது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாகப் பலஸ்தீ னர்களுக்கு எதிராக இஸ்ரேல் புரிந்துவரும் அடாவடித்தனத்துக்குத் துணைபோன அமெரிக் காவும் மேற்கத்திய நாடுகளும் இப்போதும் இஸ்ரேலுக்குப் பின்புல ஆதரவாளர்களாகச் செயற்படுகின்றன என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
இருதரப்பும் அமைதியைப் பேண வேண் டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன் ஐரோ ப்பிய யூனியன் நாடுகள் அமைதியாகிவிட் டன. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பே காரணம் என்று சனிக்கிழமை கூறிய அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை முழு வதும் மெளனம் காத்தது.
இருதரப்பும் அமைதி காக்க வேண்டுமெ னக் கூறுவது ஆக்கிரமிப்பவரையும் ஆக்கிர மிப்புக்கு உள்ளாகி அல்லலுறும் மக்களை யும் சமநிலையில் வைக்கும் மூடத்தனமான செயல். ஹமாஸ் அமைப்பின் றொக்கற் தாக் குதல் காரணமாகவே காஸா மீதான தாக் குதலை ஆரம்பித்ததாக இஸ்ரேல் கூறுவதை அப்படியே ஒப்பிப்பதாக உள்ளது அமெ ரிக்காவின் கூற்று.
ஹமாஸ் அமைப்பின் றொக்கற் தாக்குதல் காரணமாக ஒருவர் மாத்திரமே இஸ்ரேலில் பலியாகினார். அதைக் காரணங்காட்டி காஸா மக்கள் அனைவரையும் அழிக்க முயற்சிப் பதை நியாயப்படுத்த முடியாது.
பலஸ்தீனம் அரபு மக்களின் வரலாற்று ரீதி யான வாழ்புலம். அந்த உரிமையை உறுதி ப்படுத்துவதற்காக ஹமாஸ் அமைப்பும் வேறு அமைப்புகளும் நடத்தும் போராட்டத்தை யும் பலஸ்தீனத்திலிருந்து அரபு மக்களை வெளியேற்றும் நோக்கத்துடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் ஒரே மாதிரியாகத் தரப்படுத்துவது முட்டாள்தன மானது மாத்திரமல்ல; கபடத்தனமானதும் கூட.
காஸாவில் இஸ்ரேல் இழைக்கும் கொடு மையை நிறுத்துவதற்கு இதயபூர்வமாக முய ற்சிக்காத அனைவரும் இஸ்ரேலின் செயற் பாடுகளுக்குப் பங்காளிகளே. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை யும் இதற்கு விதிவிலக்கல்ல.
0 விமர்சனங்கள்:
Post a Comment