3,000 இந்திய இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி இன்று பயணம்-அதிர வைக்கக் கூடிய தகவல்!
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.
பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இராச பக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000
இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார். மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்
சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.
அவர் மேலும், அன்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்;தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.
இந்தத் தகவல் உறுதி செய்யும்;விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.
புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும். இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது.
-தமிழ்ச் செய்தி மையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment