வன்னியிலிருந்து வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி
வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டாவளையையும் அதனை அண்டிய பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊரியான் பகுதிக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்துகொண்டிருந்த போதே தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களும், காயமடைந்தவர்களும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 55 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வவுனியா பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டவர்களிடம் வவுனியா மாவட்ட நீதவான் அலக்ஸ்ராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினார். கொல்லப்பட்டவர்களில் நால்வரது சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மகேந்திரன் (47), ராஜ்குமார் (12), சன்சிகா (03), தனுஷா (14) ஆகியோருடைய சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.
தம்மீது யார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள் என்பது தெரியாதபோதும், இராணுவத்தினரே தம்மைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததாக காயமடைந்த மக்கள் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment