'எமது வாகனமல்ல': யுனிசெப் மறுப்பு
விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினர் கைப்பற்றியதாகக் கூறும் ‘டொயாட்டா டபிள்கப்’ வாகனம் தமக்குச் சொந்தமானதல்லவென யுனிசெப் அமைப்பு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விசுவமடுப் பகுதியில் யுனிசெப்புக்குச் சொந்தமான வாகனமொன்று விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், அதனை மறுத்திருக்கும் யுனிசெப் அமைப்பு, டபிள் கப் வாகனம் எதனையும் தாங்கள் பயன்படுத்தவில்லையென அறிவித்துள்ளது. ஆனாலும், கடந்த காலங்களில் யுனிசெப் அமைப்பு அரசாங்க நிறுவனங்களான சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு, தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை மற்றும் சமூக சேவைகள் சமூக நலன்புரி அமைச்சு ஆகியவற்றின் உபயோகத்திற்காக இந்த மாதிரியான வாகனங்களை வழங்கியிருந்தாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கவென அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கிய இந்த வாகனங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமைக்காக தாங்கள் மனவருத்தம் அடைவதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment