வடக்கிற்கு கிழக்கு உதவி
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு உதவும் திட்டமொன்றை கிழக்கு மாகாணசபை ஆரம்பித்துள்ளது.
நாளை 19ம் திகதி திங்கட்கிழமை முதல் 26ம் திகதி வரையில் மக்களிடமிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் உதவிப்பொருள்கள் திரட்டப்படவிருப்பதாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
உதவிப் பொருள்களை தத்தமது பிரதேச உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கூடாக மக்கள் கையளிக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த உதவித் திட்டத்தை இன்று மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் சந்திரகாந்தன், ஒரு தொகுதி உதவிப்பொருள்களை மட்டக்களப்பு உள்ளூராட்சி ஆணையாளர் எம்.தயாபரனிடம் கையளித்தார்.
இந்த உதவிப் பொருள்களை படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment