பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் இடம் மீது விமானப் படையினர் இன்று மாலை தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்திருப்பதாக நம்பப்படும் காட்டுப் பிரதேசத்திலுள்ள இடமொன்றின் மீது இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் இன்று மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.
இந்த இடம் முல்லைத்தீவு பிரதேசத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளதாகவும்; புலனாய்வுப் பரிவினரின் தகவலின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவம் அவர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment