இலங்கையில் போர் நிறுத்தம் அவசியம் தேவை : பிரிட்டிஷ் பிரதமர்
இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம் தேவை என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து வாஸ் தெரிவிக்கையில்,
''இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருந்த ஆயிரம் பொதுமக்களில் 100 பேர் விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரும் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையில் நிகழும் கொடூர தாக்குதல் தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் நான் உடன்பாடு கண்டுள்ளேன்.
இது தொடர்பாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சாக்கோர்சியுடனும், ஜேர்மனியின் சான்சலர் அஞ்செலா மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment