முல்லைக் கடற்பரப்பில் கடற்படை-கடற்புலிகள் சமர்: கடற்புலிகளின் நான்கு வள்ளங்கள் நிர்மூலம்
முல்லைத்தீவு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் , கடற்படையினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலில் விடுதலை புலிகளின் 4 படகுகளைத் தாக்கியழித்து, தாக்குதலை கடற்படையினர் முறியடித்துள்ளதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்று கடற்படையினரின் படகொன்றினருகே வெடித்ததில் கடற்படையினரின் படகு சேதமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இக்கடற்சமர் குறித்து விடுதலைப் புலிகள் எதுவித தகவலையும் வெளியிடவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment