மோதல் இடம்பெறும் பகுதி குறுகிக் கொண்டே வருவதால் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்
வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம்.
பொது மக்களுக்க உயிரிழப்பை தவிர்க்கம் வகையில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகைள கடந்த சில வாரங்கள் மற்றும் மாதங்கயளில் எடுத்திருப்பது வரவேற்கத் தக்கது.
அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகளை அளிப்பது கடினமானது.இருப்பினும் அதில் சிறிதளவு வெற்றி பெற்றுள்ளோம்.அங்குள்ள நிலமையைப் பொறுத்த வரை கவலையில் ஆழத்தும் விடயமொன்றும் இருக்கினறது.அதாவது மோதல் நடை பெறும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்புகளுக்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கக் கூடும் என்பதே அந்த கவலையாகும் .
இந் நிலையில் அப்படியான உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்கும் பொருட்டு சகல தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுளள்து என்று வன்னி மோதல் நிலமை குறித்து தனது கருத்தை வெளியிட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கூறுகையில்,
இலங்கையின் எதிர் காலத்திற்கு மிக முக்கியமான மாகாணமெனக் கருதப்படும் இம் மாகாணத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தரும் சகல நடவடிக்கைகளுக்கும் பிரித்தானியா ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும் .
இங்கு தங்கியிருந்த நாட்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்த போது அவர்கள் இன்னமும் பல சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியம் தந்தது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றம் முன்னேற்றகரமாக உள்ளது.யுத்தத்திலிருந்து இம் மாகாணம் தற்போது விலகியுள்ளதால் அதிக முன்னேற்றம் இங்கு ஏற்பட்டுள்ளது.எனினும் இவை எல்லாம் எந்நேரத்திலும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது.
பொது மக்களக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாக தெரிகின்றது.பொருளாதார ரீதியில் முன்னேற்றததை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் மக்கள் தாங்கள் பாதுகாப்பான நிலையிலில்லை என்று உணரும் போது அந்த முன்னேற்றங்கள் அர்த்தமற்றதாகிவிடும்.
இம் மாகாணத்தில் உள் நாட்டு ,வெளி நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்புகளும் ஐ.நா அமைப்பகளும் மக்களுக்கு பல் வேறு வழிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அரச சார்பற்ற அமைப்புகளை சிலர் விமர்சிப்பது கவலையளிக்கின்றது.பல உள்நோக்குடனே சர்வதேச சமூகம் இங்கு பணியாற்றுகின்றது என சிலர் சந்தேகிக்கின்றனர்.இம் மாகாண மக்கள் நனமைக்காக சர்வதேச அமைப்புகளினால் எவ்வளவோ நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை வீதிகளில் செல்லும் போதும் சமூகத்திலும் பார்த்தால் தெரியும் என தெரிவித்தார்.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment