திருமாவளவனின் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் அவரது உடல்நிலை கருதி நிறுத்தப்பட்டது
இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆற்காடு வீராசாமி, தா.பாண்டியன். என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.
உண்ணவிரத்தின் 4வது நாளான இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த கூட்ட முடிவில் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக இல்லை என்று முடிவெடுத்தார் திருமாவளவன். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment