காலோசிதமான அழைப்பு
இலங்கைக்கு வந்து உண்மை நிலையை நேரில் கண்டறியு மாறு தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திரு க்கும் அழைப்பு காலோசிதமானது.
இலங் கையில் நிலவும் உண்மையான நிலையை அறியாது தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலையை வளர்க்கும் வகையில் பேசியும் எழுதியும் வரும் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார்.
தவறான கருத்துகளை வெளியிடும் எல் லோருக்கும் அழைப்பு விடுப்பது நடை முறைச் சாத்தியமானதல்ல. எனவே தான் மாநிலத்தின் முதலமைச்சருக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவிக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்க மான நட்புறவு பேணும் நாடுகள். இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழகத்தில் மேற் கொள்ளப்படும் பிரசாரம் இரு நாடுகளி னதும் நட்புறவுக்குக் குந்தகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருப்பது கவலைக்குரி யது. இலங்கையில் என்ன நடக்கின்றது என் பதை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத் திலிருந்து அறிந்துகொள்ள முடியும்.
அதற் கான எந்த முயற்சியும் மேற்கொள்ளா மலே தமிழகத் தலைவர்கள் இலங்கைக்கு எதி ரான விஷமப் பிரசாரத்தில் ஈடுபடுகின்ற னர். புலிகளும் தமிழர் விடுதலைக் கூட்ட ணித் தலைவர்களும் அளிக்கும் தகவல்க ளின் அடிப்படையிலேயே இப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகத் தலைவர்கள் முன்வைக்கவில்லை. யுத்தநிறுத்தமே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குப் புலிகளே தடையாகச் செயற்பட்டவர்கள். இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால் அது தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட புலி களை அம்பலப்படுத்தும் என்பதாலேயே தமிழகத் தலைவர்கள் அக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
அரசாங்கம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை புலிகளின் இருப்புக்கு மாத் திரமன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரின் அரசியல் இருப்புக்கும் அச்சுறுத்தலா னது. இன்று புலிகள் முல்லைத்தீவில் மிகக் குறுகிய பிரதேசத்துக்குள்ளேயே முடங்கியி ருக்கின்றனர்.
அவர்களின் கட்டுப்பாட்டிலி ருந்த ஏனைய பிரதேசங்கள் அரசாங்க கட் டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. புலிகள் முற்றுமுழுதாகத் தோல்வியடைவது உறுதியாகி விட்டது. புலிகளின் தோல்வியுடன் கூட்ட மைப்பினரின் அரசியல் எதிர்காலம் கேள் விக்கு உள்ளாகிவிடும்.
புலிகளையும் கூட்டமைப்பினரையும் பாது காப்பதற்கான இறுதி நேர முயற்சியா கவே திருமாவளவன், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் யுத்தநிறுத்தக் கோரி க்கையைத் தீவிரமாக வலியுறுத்துகின்றார் கள். தங்கள் கோரிக்கையை நியாயப்படுத் துவதற்காக இலங்கையில் இன ஒழிப்பு நடைபெறுகின்றது என்ற பொய்யான பிர சாரத்தை முன்னெடுக்கின்றார்கள்.
இராணுவ நடவடிக்கையின் விளைவாக மரணங்கள் இடம்பெறாமலில்லை. ஆனால் தமிழகத் தலைவர்கள் கூறுவது போல வகைதொகை யின்றி மரணங்கள் சம்பவிக்கவில்லை. இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெறும் மரணங்களுக்குப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியவர்கள். மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதற்கு விடாமல் புலிகள் அவர்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத் திருப்பதாலேயே மரணங்கள் சம்பவிக்கின்றன.
இவையெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரியாத விடயங்கள். எனவேதான் தலை வர்கள் என்ற வகையில் கலைஞரும் ஜெய லலிதாவும் இலங்கைக்கு வந்து உண்மை நிலையை அறிந்து செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
உண்மையாகவே இலங்கைத் தமிழரின் நலனில் அக்கறை உள்ள தமிழகத் தலைவர் கள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டும். அர சியல் தீர்வுக்குத் தடையான புலிகளுக்காக வக்காலத்து வாங்குவது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதா காது.
0 விமர்சனங்கள்:
Post a Comment