கைமாறியது கிளிநொச்சி! பிரபாகரன் உயிருக்கு ஆபத்தா?
புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது இலங்கை ராணுவம். இந்த வெற்றியை ஆக்ரோஷமாக கொண் டாடி வரும் அதிபர் மகிந்த ராஜபக்சே, ""இனி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வேறு வழி இல்லை. ஒன்று... அவர் செத்து விடவேண்டும். இல்லையேல், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விட வேண்டும். இதுதான் அவருக்கு இறுதி எச்சரிக்கை'' என்று மகிழ்ச்சியின் எல்லையில் நின்று கொண்டு அறிவித்திருக்கிறார். இந்த வெற்றி, உலகம் முழுவதும் அறியும் வகையில் கொண்டாடுவதற்கு சிங்கள ராணுவத்தினருக்கு உத்திரவிட்டுள்ளார் ராஜபக்சே.
ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்புத்துறை செக்ரட்டரியுமான கோட்டபாய ராஜபக்சே, ""2009-ஆம் ஆண்டு புலிகளை ஒழிக்கும் ஆண்டு என்று அறிவித் திருந்தோம். இப்போது அதனை நிரூபித்திருக்கிறோம். விரைவில், பிரபாகரன் உட்பட அனைவரையும் அரெஸ்ட் செய்வோம்'' என்கிறார் ஆவேசமாக.
கிளிநொச்சியை பிடிப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டது சிங்கள ராணுவம். பூநகரியை கைப்பற்றிய நிலையில் ஏ-9 நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பகுதியாக முன்னேறிக் கொண்டேயிருந்தது.
4 முனைத் தாக்குதல், 5 முனைத் தாக்குதல் என்று பல வியூகங்களை அமைத்து கடுமையான யுத்தத்தினை நடத்தியது ராணுவம். ஆனால், இதற்கு பதிலடி தந்து ராணுவத்தின் முன்னகர்வுகளை முறியடித்தே வந்தனர் புலிகள்.
சமீபத்தில் பரந்தன், புதுக்குடியிருப்பு, முறிகண்டி பகுதிகளில் நடந்த சண்டையில் 300-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்து விரட்டி அடித் தனர் புலிகள். இதில் மிரண்டு போனார் ராஜபக்சே.
5 முனைகளிலும் ராணுவத்தினரின் தாக்குதலை புலிகள் முறியடித்ததால், மீண்டும் அந்த பகுதிகளில் ராணுவத்தினரை குவித்த ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் களுக்கு உதவி செய்வதற்கும் ராணுவத்தினர் முன்னேறு வதற்கும் வான்படைகளை அனுப்ப வேண்டும் என அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, கிளிநொச்சியை நோக்கி வான்படை தாக்குதல்களுக்கு உத்திரவிட்டார் ராஜபக்சே. இந்த தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்தினார் அதிபர். ஒவ்வொரு குண் டும் 1000 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தினமும் 100 டன் வெடிகுண்டுகளை தமிழர்கள் மீது வீசினர் வான்படையினர்.
இதில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் உறுப்புகள் இழந்து படுகாயங்களுடன் மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிளஸ்டர் பாம்களிலிருந்து தப்பித்துக் கொள்ள கிளிநொச்சியை விட்டு அகன்று காடுகளில் தஞ்சமடைவதை வழக்கமாக்கிக் கொண்டனர் ஈழத் தமிழர்கள்.
இந்த சூழலில்தான், தொடர்ந்து வான்படை தாக்குதல் நடக்க, அதன் உதவியினுடனேயே ஏ-9 நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பகுதியாக முன்னகர்ந்து, நகர்ந்து 1-ந்தேதி நள்ளிரவு பரந்தனை பிடித்தது ராணுவம். இதற்காக நடத்தப்பட்ட புலிகளின் எதிர்த் தாக்குதலை முறியடித்து முன்னேறியது. ஏற்கனவே, ஏ-9 பாதை முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக் குள் வந்திருந்ததால், பரந்தனை அடுத்து இரனைமடு பகுதியையும் கைப்பற்ற... கிளிநொச்சிக்குள் 2-ந்தேதி அதிகாலையில் நுழைந்தனர். இதற்காக நடத்தப்பட்ட புலிகளின் எதிர்த் தாக்குதலையும் ராணுவத்தினர் தங்களின் நவீனரக ஆயுதங்களைக் கொண்டு முறியடித்தனர்.
கடந்த ஒருவாரமாக, தொடர்ந்து கிளஸ்டர் பாம்களை சிங்கள ராணுவம் பயன்படுத்திய நிலையில், போராளிகளின் உயிரிழப்புகள் அதிகமாகி விடக் கூடாது என்று கருதிய பிரபாகரன், கடந்த 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவுக்கு போராளிகள் இடம் பெயர உத்திரவிட்டார்.
அதன்படி எதிர்த்தாக்குதல் நடத்திக்கொண்டே பின் நகர்ந்து, ஆனையிறவு பகுதிக்கு சென்றனர் போராளிகள். இதனைப் பயன்படுத்திக்கொண்டு கிளிநொச்சிக்குள் நுழைந்து 2-ந்தேதி மதியம் முழுமையாக கைப்பற்றிக் கொண்ட ராணுவத்தினர் தேசியக் கொடியை ஆங்காங்கே பறக்க விட்டு ஆனந்த கூத்தாடினர்.
கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலையும் கிளிநொச்சியை சுற்றி முற்றுகையிட்டு தரைவழித் தாக்குதலையும் சிங்கள ராணுவம் நடத்திக் கொண்டிருந்த நிலையி லேயே, புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதி கள் அனைவரும் முல் லைத்தீவு பகுதிகளுக்கு சென்று விட்டனர். அங்கிருந்தபடியே தங்களின் ராணுவ, அரசியல் செயல்பாடு களை நடத்திக் கொண் டிருந்தார் பிரபாகரன். கிளிநொச்சியை புலிகள் இழந்திருப்பது அவர்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
""கிளிநொச்சியை இழந்தாலும் எங்களின் விடுதலை போராட்டம் என்றைக்கும் நிற்காது. இழந்தாலும் மீண்டும் அதனை மீட்போம்'' என்று சமீபத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கூறியதை சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், ""கிளிநொச்சியை புலிகள் இழந்திருக்கின்றனர். இதனை அடுத்து ஆணையிறவையும், முல்லைத் தீவையும் ராணுவம் குறிவைக்கும்'' என்கின்றனர்.
மேலும் இவர்கள், ""1990-களிலிருந்து கிளிநொச்சி இதுவரை 4 முறை கைமாறியுள்ளது. 1998 பிப்ரவரியில் புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கடைசியாக மீட்டது ராணுவம். ஆனால், அடுத்த 6 மாதங்களில் கிளிநொச்சி யை மீட்டனர் புலிகள். இந்த அதி தீவிர தாக்குதல்களுக்கு "ஓயாத அலைகள் ஒன்று' என்று பெயர் சூட்டியிருந்தார் பிரபாகரன்.
1998 செப்டம்பரில் கிளிநொச்சியை மீட்ட புலிகள், அன்றிலிருந்து இன்றுவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில்தான் கிளிநொச்சியை தங்கள் அரசியல் தலைநகரமாக அறிவித்த பிரபாகரன், தங்களின் அரசியல் செயல்பாடு களின் அனைத்து நடவடிக்கைகளையும் கிளிநொச்சியிலிருந்தே செயல்படுத்தினார். ஐ,நா.சபை செஞ்சிலுவை சங்கம் உள்பட உலகத்தின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் கிளிநொச்சிக்குள் இருந்து செயல்பட புலிகள் அனுமதித்தனர். மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்கியதோடல்லாமல், ஜனநாயக அமைப்புகளை கிளிநொச்சியிலிருந்து வெளியேற்றி விட்டார். தற்போது, ராஜபக்சேவிற்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். மீண்டும் கிளிநொச்சி புலிகள் வசம் வந்தே தீரும்'' என்கின்றனர் நம்பிக்கையுடன்.
கிளிநொச்சிக்குள் ராணுவம் புகுந்த அதேநாளில், கொழும்பில் விமானப்படைத் தலைமையகத்துக்கு வெளியே நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதல், இலங்கையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்களப் பகுதிகளில் இனி அடிக்கடி இத்தகைய தாக்குதல்கள் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கை காவல்துறையினர். இதனால் தமிழர் பகுதிகளைப் போலவே சிங்களப் பகுதிகளும் அமைதியிழந்த பகுதிகளாகிவிடும் என்ற அச்சம் சிங்கள அரசியல் கட்சியினரிடம் காணப்படுகிறது. இந்த பதற்ற நிலைமையைத் தணிப்பது குறித்து, ஆலோ சனைகளை மேற்கொண்டிருக்கிறார் ராஜபக்சே.
இதனையடுத்து, பிரபாகரனைக் குறிவைத்து புதுவியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. ஏறத்தாழ 2 மாதங்களுக்கு மேலாக நடந்த கிளிநொச்சிக்கானப் போரில் சிங்கள ராணுவம் பலத்த உயிரிழப்பை சந்தித்தது. இனி ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகியவற்றை நெருங்கும்போது இன்னும் பலமான உயிர்ச்சேதங்கள் ஏற்படும் என்பதால் நேரடி போருக்குப் பதில், பிரபாகரனுக்கு குறி வைப்பதே இலங்கை அரசின் ஓர் அம்சத் திட்டமாக மாறியிருக்கிறது. தங்களுக்கு உதவி செய்கிற நாடுகளுடன் தொடர்ந்து பேசி வரும் இலங்கை அரசு, தற்போது இஸ்ரேல் அரசிடமிருந்து நவீன லேசர் பாம்களை வாங்கியுள்ளது.
முந்தைய லேசர் பாம்கள் குத்துமதிப்பாக ஓரிடத்தில் விழக்கூடியவை. நவீன லேசர் பாம்களை, ஒரு சிறிய பட்டனை அழுத்தி, குறிவைக்கப்பட்ட இடத்தில் வெடிக்கச் செய்ய முடியும். பூமிக்கு அடியிலும் துளைத்துச் செல்லக்கூடிய இந்த சக்தி வாய்ந்த லேசர் பாம்களை 10 கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளது சிங்கள ராணுவம்.
உலகளாவிய அளவில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதிகளை, தனக்கு உதவி செய்யும் நாடுகள் மூலமாகப் பெற்றுவரும் சிங்கள ராணுவம், இந்த நவீன கருவிகள் வாயிலாக பிரபாகரனின் இருப்பிடத்தை அறிந்து, அவரது நடமாட்டத்தை கண்காணித்து லேசர் பாம்களை வீசுவது என்பதுதான் இலங்கை அரசின் கடைசிகட்ட படுபயங் கரத் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் சிங்கள ராணு வத்தின் செய்தி தொடர்பாளர்கள். பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத் தை எளிதாக எதிர்கொண்டுவிடலாம் என நினைக்கிறதாம் இலங்கை அரசு. எனினும், புலிகளிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என அண்மையில் வெளியான தகவல், சிங்கள ராணுவத்தை மிரளச் செய்துள்ளது. முல்லைத்தீவை நெருங்கும் போது அவற்றின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் ராணுவத்திடம் இருக்கிறது.
இதனிடையே, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்துவந்த போராளிக்குழுக்களில் பலர், நமது சகோதரப் பகையைவிட தாய்மண்தான் முக்கியம். அதனை சிங்களர்களிடம் இழந்துவிடக்கூடாது என புலிகளுக்கு தார்மீக ஆதரவைத் தரத் தொடங்கி யிருப்பது ஈழப்பிரச்சினையில் மேலும் ஒரு திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் இலங்கையின் அரசியல் நோக்கர்கள். சிங்கள அரசுத் தரப்பிலோ, ""எங்களுக்குத் தார்மீக பலமே இந்திய அரசுதான். தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமை யில் தமிழக காங்கிரஸ், பா.ம.க. உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பும்படி வலியுறுத்தினர். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே கிளிநொச்சியைக் கைப்பற்றிய இந்த நிமிடம்வரை பிரணாப் இங்கு வரவில்லை. இந்திய அரசின் இந்த முடிவு, எங்களுக்கு துணிச்சலைக் கொடுத்தது'' என்கிறார்கள்.
கொழும்பிலிருந்து எழில்
[நன்றி நக்கீரன் இணைய சஞ்சிகை, www.nakkheeran.in]






0 விமர்சனங்கள்:
Post a Comment