முல்லைத்தீவில் இருக்கும் அனைவரும் பொதுமக்கள் அல்ல!! பயங்கரவாதிகள்!!
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 30 வருடங்களில் விடுதலைப்புலிகளின் 22 அயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாவீரர்கள் குடும்பங்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் சர்வதேசமும், இந்தியாவும், சர்வதேச நிறுவனங்களும் இவர்களையே சிவிலியன்கள் என அடையாளப்படுத்துவதாகவும் இவர்கள் பிரபாகரனைக் காப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பீ.பீ.சி தொலைக்காட்சியில் படையினர் 600 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக செய்தி வெளியிட்ட போதிலும் அவர்கள் பொதுமக்கள் அல்ல எனவும் கொல்லப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் வர்ணசிங்க கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரபாகரனைக் காப்பற்றவே துடிப்பதாகவும் அவர்கள் காஸாவிலும், ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்று வரும் யுத்தங்களில் தலையிடுவதில்லை. இலங்கை பிரச்சினையில் மாத்திரம் ஏன் தலையீடுகளை மேற்கொள்கின்றனர் என நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு விரும்பியவாறு அரசியல் தீர்வையேற்படுத்த தாம் தயாரில்லை எனவும் மகிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளதை போன்று, முறையே நிராயுத பாணிகளாக்குதல், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டது போல் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment