இலங்கைத் தமிழர்களுக்கு இது இரத்தப் பொங்கல்
இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களவர்களின் ஆட்சியில் சிக்கித் தவிப்பதால் அவர்கள் எதிர்நோக்கியிருப்பது மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல இரத்தப் பொங்கல். ஒரு நல்ல ஆட்சியில் தான் அமைதியிருக்கும் அப்பொழுது தான் மக்கள் விழாக் கொண்டாட முடியுமென தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இருவேறு இன மக்கள் ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் அந்நிலப் பகுதியை பிரித்துக்கொண்டு அமைதியாக வாழலாம். இதனையே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் உலகம் அறிவுரையாக வழங்குகிறது.
ஆனால், இலங்கையிலும் இந்த அறிவுரையை இந்தியா கூட ஏற்காதது தமிழ் மக்களின் சாபக்கேடு என்றும் தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment